ஸ்கந்தவரோதயக் கல்லூரி – விரைவில் தேசிய பாடசாலையாகும் – சரவணபவன் எம்.பி. !!

யாழ்ப்­பா­ணம் சுன்­னா­கம் ஸ்கந்­த­வ­ரோ­த­யக் கல்­லூரி விரை­வில் தேசிய பாட­சா­லை­யா­கத் தரம் உய­ரும் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் யாழ்ப்­பா­ணம், கிளி­நொச்சி மாவட்­டங்­க­ளின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வன் தெரி­வித்­தார்.

அந்­தப் பாட­சா­லை­யில் 70 லட்­சம் ரூபா செல­வில் அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்னும் வேலைத் தீட்டத்தின் கீழ் அமைக்­கப்­பட்ட சிற்­றுண்­டிச் சாலைக்­கான நவீன கட்­ட­டம் நேற்­றுத் திறந்து வைக்­கப்­பட்­டது.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சர­வ­ண­ப­வன் முதன்மை விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்டு அதைத் திறந்து வைத்­தார். அதன் பின்­னர் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார்.

கல்­லூரி அதி­பர் மு.செல்­வஸ்­தன் தலை­மை­யில் நடை­பெற்ற நிகழ்­வில் சர­வ­ண­ப­வன் மேலும் தெரி­வித்­த­தா­வது:

வடக்கு மாகா­ணத்­தில் கல்வி, விளை­யாட்டு மற்­றும் சகல ஈடு­பா­டு­க­ளி­லும் தனித்­து­வ­மான பாட­சா­லை­யாக ஸ்கந்­த­வ­ரோ­த­யக் கல்­லூரி மிளிர்­வ­தால் விரை­வில் தேசிய பாட­சா­லை­யா­கத் தரம் உயர்த்த முழு நட­வ­டிக்­கை­யும் முன்­னெ­டுப்­பேன்.

கல்­லூரி நல்­ல­தொரு நிர்­வா­கக் கட்­ட­மைப்­பின் கீழ் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது.வள­முள்ள ஆசி­ரி­யர்­க­ளைக் கொண்­டுள்ள தனித்­து­வ­மான இந்­தப் பாட­சா­லையை மாணவ சமூ­கம் முழு­மை­யா­கப் பயன்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும்.

இன்று பல்­வேறு சமூக சீர்­கே­டு­க­ளுக்கு எமது சமூ­கம் அகப்­பட்­டுள்­ளது. மாண­வர்­க­ளின் கல்வி வளர்ச்சி, விளை­யாட்டு மற்­றும் சமூக செயற்­பா­டு­க­ளில் தேசிய மட்­டத்­துக்­குச் செல்­லக் கூடி­ய­தாக தங்­களை அர்ப்­ப­ணித்­துச் செய­லாற்ற மாண­வர்­கள் முன்­வர வேண்­டும் – – என்றார். இந்த நிகழ்­வில் கல்­லூரி அதி­பர் மு.செல்­வஸ்தான் உரை­யாற்­று­கை­யில் தெரி­வித்­த­தா­வது:

எதிர்­வ­ரும் ஜூலை மாதம் ஸ்கந்­த­வ­ரோ­த­யக் கல்­லூரி 125ஆவது ஆண்­டில் காலடி எடுத்து வைக்­கும் சிறப்பு நிகழ்வு இடம்­பெ­ற­வுள்­ளது.கடந்த ஐந்து மாதங்­க­ளாக தொழில்­நுட்பப் பீட கட்­ட­டம் உட்­கட்­டு­மான நிகழ்வு தடைப்­பட்­டுள்­ளது.சம்­பந்­தப்­பட்ட தொழில்­நுட்ப அதி­காரி பணி­க­ளைத் துரி­த­மாக முன்­னெ­டுத்து அபி­வி­ருத்­திக்­கும் மாணவ சமூ­கத்­துக்­கும் உதவ வேண்­டும்.

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் கல்வி, சமூக மற்­றும் விளை­யாட்டு நிகழ்­வு­ க­ளுக்கு நிதி வழங்கி உத­வி­வ­ரும் நாடா­ ளு­மன்ற உறுப்­பி­னர் சர­வ­ண­ப­வ­னுக்­குக் கல்­லூ­ரிச் சமூ­கத்­தின் சார்­பி­லும் கிராம மக்­கள் சார்­பி­லும் வாழ்த்­துக்­க­ளைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன் -– என்­றார்.நிகழ்­வில் பிரதி அதி­பர் செல்வி.ஜெய­க­விதா நன்றி தெரி­வித்து உரை­யாற்­றி­னார்.

You might also like