ஹாட்லி யைட்ஸ் அபா­ரம்

ஏபி விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­தும் துடுப்­பாட்­டத் தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­ட­மொன்­றில் ஹாட்லி யைட்ஸ் அணி வெற்­றி­பெற்­றது.

யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி மைதா­னத்­தில் இடம்­பெற்ற இந்த ஆட்­டத்­தில் கே.ஸி.ஸி.ஸி. விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து ஹாட்லி யைட்ஸ் விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது.

முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய ஹாட்லி யைட்ஸ் விளை­யாட்­டுக் கழக அணி 20 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­கள் நிறை­வில் 7 இலக்­கு­களை இழந்து 200 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது. சாகித்­தி­யன் 95 ஓட்­டங்­க­ளை­யும், மணி­மா­றன் 41 ஓட்­டங்­க­ளை­யும்;, நிரூ­பன் ஆட்­ட­மி­ழக்­கா­மல் 22 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

பந்­து­வீச்­சில் பிர­தீஸ் 3 இலக்­கு­க­ளை­யும், சத்­தி­யன் 2 இலக்­கு­க­ளை­யும் வீழ்த்­தி­னர்.
201 ஓட்­டங்­க­ளைப் பெற்­றால் வெற்­றி­யென்ற இலக்­கு­டன் பதி­லுக்­குத் துடுப்­பெ­டுத்­தா­டிய கே.ஸி.ஸி.ஸி. விளை­யாட்­டுக் கழக அணி 20 பந்­துப் பரி­மாற்­றங்­கள் நிறை­வில் 8 இலக்­கு­களை இழந்து 105 ஓட்­டங்­களை மட்­டும் பெற்­றது.

இதை­ய­டுத்து 95 ஓட்­டங்­க­ளால் வெற்­றி­பெற்­றது ஹாட்லி யைட்ஸ் அணி. பந்­து­வீச்­சில் பிர­சாந் 6 இலக்­கு­களை வீழ்த்­தி­னார். சிறந்த வீர­னாக ஹாட்லி யைட்ஸ்; விளை­யாட்­டுக் கழக அணி­யின் வீரன் சாகித்­தி­யன் தெரி­வா­னார்.

You might also like