ஹிஸ்புல்லாவுக்கு எதிராக – வியாழேந்திரன் எம்.பி. முறைப்பாடு!!

மட்டக்களப்பு ஓட்டமாவடியில் இருந்த காளி கோயிலை உடைத்து மீன் சந்தை கட்டிய குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட மூன்று குற்றச் சாட்டுக்களை முன் வைத்து முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ச. வியாழேந்திரன் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஓட்டமாவடியில் இருந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான காளிகோயிலை உடைத்து காளிகோயில் காணியில் ஹிஸ்புல்லா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவியை பாவித்து மீன் சந்தை கட்டியமை , தனக்குச் சார்பாக தீர்ப்பு சொல்லாத நீதிபதியை இடம் மாற்றி தனக்குச் சார்பான நீதிபதியை நியமித்து தீர்ப்பை மாற்றி எழுதியமை, இலங்கையில் கடந்த ஏப்ரல் 21 குண்டு வெடிப்பு நடைபெற்ற மறுநாள் நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருந்த நிலையில், பாசிக்குடா விடுதியில் இருந்த மூன்று அரேபியர்களை தனது அதிகாரத்தை பயன்படுத்தி அவசர அவசரமாக நாட் டை விட்டு வெளியேற்றியமை ஆகிய குற்ற சாட்டுக்களை முன்வைத்து முறைப்பாடுகளை அவர் பதிவு செய்துள்ளார்.

You might also like