அமைதியான குளத்தில்- மீன் பிடிப்பது எளிது!!

தமி­ழி­னம் எப்­போ­துமே வேத­னை­க­ளை­யும், சோத­னை­க­ளை­யும் தாண்­டிய சாத­னைக்­கு­ரி­யது. அவர்­க­ளு­டைய அடை­யா­ளம் என்­பது தோல்­வி­யைத் தாண்­டிய வெற்றி என­லாம். ஓரா­யி­ரம் தோல்­வி­க­ளைக் கற்­றுத் தெளிந்த இனம் என்­ப­த­னாலோ, என்­னவோ, இலங்கை அர­சுக்கு முண்டு கொடுக்­கின்ற உலக வல்­ல­ரசு நாடு­க­ளின் மறை­மு­க­மான இரா­ஜ­தந்­திர நட­வ­டிக்­கை­க­ளைத் தமிழ் மக்­கள் இல­கு­வாக மோப்­பம் பிடித்து அதற்­கான எதிர்ப்­புக் குரலை வெளிப்­ப­டுத்த முனை­கின்­ற­னர். தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் போதித்­துப் பய­ணித்த விடு­தலை என்ற உணர்­வின் பாதை வழி நடை­ப­யி­லத் தலைப்­ப­டு­கின்­ற­னர். இதையே அண்­மை­யில் தமி­ழர் தாய­க­மெங்­கும் நிகழ்ந்­தே­றிய நவம்­பர் 27 மாவீ­ரர் நாள் நினை­வேந்­தல் நிகழ்­வு­கள் எடுத்­தி­யம்பி நிற்­கின்­றன.

நய­வஞ்­ச­கச் செயற்­பா­டு­களை
மக்­கள் அறிந்­து­கொண்­டுள்­ள­னர்!
சூழ்ச்­சி­யால் மட்­டுமே தமி­ழரை வெல்ல முடி­யும் என்­ப­தற்­குப் பல்­வேறு சான்­று­க­ளைக் காலம் கால­மாக வர­லா­றாக அறிந்­து வந்­தா­லும், 2009ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­யில் வல்­ல­ரசு நாடு­கள் பல­வும் இலங்கை அர­சோடு கூட்­டி­ணைந்து ஈழத்­தில் நடத்­திய வர­லாறு காணாத இனப்­ப­டு­கொ­லைச் சம்­ப­வம் மனி­த­முள்­ள­வர்­க­ளால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாத சூழ்ச்­சி­யின் கொடூ­ர­மாக நிலை­பெற்­றி­ருக் கி­றது. உண்­மை­யில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மனி­தர்­கள் அழிக்­கப்­பட்­டுக் கொண்­டி­ருக்­கை­யில், ஓல­மிட்டு, உத­விக்­க­ரம் நீட்­டுங்­கள் என்று அவ­லக்­கு­ரல் எழுப்­பி­ய­போது வல்­ல­ரசு நாடு­கள் எந்த உத­வி­யை­யும் செய்­ய­வில்லை. மனி­தா­பி­மான உணர்­வற்ற தேச­மாக, ‘ஐயோ!’ என்ற பரி­தா­பத்­து­டன் பார்த்த இந்­தியா உட்­பட்ட ஏனைய உலக நாடு­க­ளின் இரக்­க­மற்ற இந்த உலோ­பித் தனத்­தை­யும், நய­வஞ்­ச­கத் தனத்­தை­யும் தமிழ் மக்­கள் நன்கு புரிந்து வைத்­துக் கொண்­டுள்­ள­னர்.

பன்­னா­டு­கள் சுய­நல நோக்­கோடு செய­லாற்­று­கின்­றன!
தற்­போது இலங்­கை­யில் ஏற்­பட்­டுள்ள அர­சி­யல் நெருக்­கு­வா­ரங்­கள் குறித்­துப் பன்­னா­டு­கள் இலங்கை ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு அதீத அழுத்­தங்­க­ளைக் கொடுப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை. வெறு­மனே வார்த்தை நயத்­தோடு, தங்­கள் நாட்­டைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்­கின்ற இலங்­கைக்­கான தூது­வர்­களை உசுப்­பி­விட்டு, உப்­புச் சப்­பில்­லாத நிகழ்த்­துக் கலை­க­ளையே அவ்­வப்­போது அரங்­கேற்றி வரு­கின்­றன. ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தைக் கண்­டு­கொள்ள முடி­ய­வில்லை. சுய­ந­ல­மும், சூழ்ச்­சி­யும் மிக்க இரா­ஜ­தந்­திர மன­ந­லக் குறைவே இதற்­குக் கார­ண­மாக அமைந்­துள்­ளது.
அர­சி­யல் என்ற குட்­டை­யில் அதி­கார மீன்­க­ளாக வலம் வரு­வ­தற்கு அவ்­வப்­போது காய்­களை நக­ரத்­து­ப­வர்­க­ளுக்­குச் ‘செண்டு’ கொடுக்­கின்ற விகார வண்­டு­க­ளா­கவே இவர்­கள் பறந்து திரி­கின்­ற­னர். தமி­ழி­னப் படு­கொலை தொடர்­பாக நிறை­வேற்­றப்­பட்ட ஜ.நாவின் தீர்­மா­னங்­கள் தனித்து ஓசை தரும் ரீங்­கா­ர­மா­கவே காலத்­தின் வழி கடந்து போகின்­றன. இலங்கை அர­சின் அகங்­கா­ரங்­களை அடக்கி ஒடுக்­கு­வ­தா­கத் தெரி­ய­வில்லை.

பொருத்­த­மான அர­ச­மைப்பு இன்­மை­யால்
ஜன­நா­ய­கம் சிதை­வ­டைந்­துள்­ளது!
ஆண்­டாண்டு கால­மாக இலங்­கை­யில் மாறி­மா­றிப் பெரும்­பான்­மைக் கட்­சி­க­ளாக அரச சிம்­மா­ச­னத்­தின் சூட்­டில் திளைத்­துக் கிடந்­த­வர்­கள் தற்­போது பிரிந்து நின்று மல்­லுக்­கட்­டு­கின்­ற­னர். அதி­கா­ரப் போட்­டி­யில் திழைத்து இன­வா­தக் கருத்­துக்­களை உச்­ச­ரிக்­கின்­ற­னர். ஜன­நா­ய­கத்தை அந்­த­ரிக்­கச் செய்­துள்­ள­னர். மக்­களை மயக்க நிலை­யில் வைப்­ப­தற்­கான உத்­தி­க­ளைத் தேடிக் கண்­டு­பி­டித்து அதை நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­கின்­ற­னர். மாறி மாறி அர­சி­யல் பாதை­யில் நடந்து வரு­கின்ற இவர்­கள் புதிய வழியை மக்­க­ளுக்கு உரு­வாக்­கு­வ­தாக வீர­வ­ச­னம் பேசியே கடந்த காலத்­தில் தமிழ் மக்­க­ளின் ஆத­ர­வைத் தம­தாக்­கிக் கொண்­டுள்­ள­னர். நல்­லாட்­சிக் கரங்­கள் நாற்­ற­மெ­டுக்­கத் தொடங்­கி­விட்­டன. மைத்­திரி – ரணில் கூட்டு, மைத்­திரி – மகிந்த கூட்டு என அங்­கு­மிங்­கும் ஆட்­சி­ய­தி­கா­ரம் இழு­ப­றிப்­பட்­டுத் தீராத தொற்று வியா­தி­கள் ஏற்­பட்­டுள்­ளன. பேரம் பேசல்­கள், பணப் பரி­மாற்­றங்­கள், கட்சி தாவு­தல்­கள், அதற்­கேற்ற சால்­வை­யைப் போர்த்­திக் கொள்­ளு­தல்­கள், அதற்­கு­ரிய விளக்­கங்­கள்… என அத்­தனை குணங்­கு­றி­க­ளும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் இழி­வுத்­த­னத்தை எடுத்­தி­யம்பி நிற்­கின்­றன. நிலை­யற்ற, பொருத்­த­மான அர­ச­மைப்பு இன்­மையே இதற்­குக் கார­ண­மாக அமைந்­துள்­ளது.

வினைத்­தி­ற­னற்ற தமி­ழர் பிர­தி­நி­தித்­து­வங்­கள்
இந்­தச் சந்­தர்ப்­பத்­திலே தமிழ் மக்­க­ளின் ஏக பிர­தி­நி­தி­கள் என்று சொல்­லப்­ப­டு­கின்ற தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னர் வழக்­கம்­போல வினைத்­தி­ற­னற்­றுச் செய­லாற்­றத் தொடங்­கி­யுள்­ள­னர்.

இந்த அர­சி­யல் நெருக்­க­டிக்கு மத்­தி­யில் ஆட்சி அமைக்­கும் தரப்­பைத் தீர்­மா­னிக்­கும் சக்­தி­யா­கத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஒவ்­வொரு சந்­தர்ப்­பங்­க­ளி­லும் முன்­னிலை பெறு­கின்­றது. கூட்­ட­மைப்­பின் தேவை என்­ப­தும் அதன் முக்­கிய பீட­மும் பல­சந்­தர்ப்­பங்­க­ளில் உண­ரப்­ப­டு­கின்­றன. அதைத் தமது மக்­க­ளுக்­குச் சாத­க­மான முறை­யில், ஏதா­வது ஒரு பய­னு­று­தி­யை­யா­வது பெற்­றுக் கொள்­வ­தாக மாற்­றி­ய­மைக்­கும், வெற்றி கொள்­ளும் திறன் கூட்­ட­மைப்­பி­டம் இருப்­ப­தா­கத் தெரி­ய­ வில்லை. தௌிவாக இருக்கிற குளத்தில் மீனை இலாவகமாகப் பிடிக்க முடியும். அண்­மைய நாளில் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வு­ட­ னும், ரணில் விக்­கி­ரம சிங்­க­வு­ட­னும் இடம்­பெற்ற சந்­திப்­புக்­க­ளின்­போது, போர்க்­குற்ற விசா­ரணை தொடர்­பில் வலி­யு­றுத்­த­வில்லை. தீர்க்­க­மான நிலைப்­பா­டின்­றிக் கடந்த ஜப்­பசி மாதம் 26 ஆம் திகதி நிகழ்ந்த சூழ்ச்சி அர­சி­யல் நகர்­வுக்கு முன்­பான அர­சுக்கு (ஜக்­கிய தேசிய முன்­னணி) ஆத­ரவு தரு­வ­தா­கக் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

தமிழ் மக்­கள் தொடர்­பான விட­யங்­க­ளில் பொருத்­த­மான அடை­வு­கள் இது­வரை கண்­டு­கொள்­ளப்­ப­டாத நிலை­யில், இவர்­க­ளு­டைய முடிவை ஏற்­றுக்­கொள்­வதா? இல்­லையா? என்ற குழப்­பத்­தில் மக்­கள் உள்­ள­னர். மக்­க­ளு­டைய கருத்து இதற்கு முர­ணா­ன­தா­கவே காணப்­ப­டு­கி­றது. மக்­கள் மனங்­க­ளில் விதந்து கிடக்­கின்ற கருத்­துக்­க­ளைத் தலை­வர்­கள் மனங்­கொள்ள வேண்­டும்.

இந்த நில­மை­கள் தொடர்ந்­தால் புரட்­சி­யா­ளன் டெஸ்­கார்ட்ஸ் கூறி­யது போல, ‘‘எப்­போ­தும் அச்­சத்­தில் இருப்­பதை விட ஆபத்தை ஒரு­முறை சந்­திப்­பதே மேல்…!’’ என்று ஆபத்­தைச் சந்­திக்­கத் தயா­ராகி எண்­ணற்ற மக்­கள் ஒன்­று­தி­ரண்டு கூடும் காலம் விரைந்து வர­லாம்.

உல­கைத் தன்­னு­டைய படை­க­ளா­லும், நட­வ­டிக்­கை­க­ளா­லும் மிரள வைத்­துக் கொண்­டி­ருந்த ஹிட்­ல­ரின் சாவு அவ­ரு­டைய அவ­ச­ரத்­தால்­தான் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. எப்­ப­டி­யும் ரஷ்­யாவை வீழ்த்­தி­விட வேண்­டும் என்­ப­தில் அவர் காட்­டிய அவ­ச­ரம், ரஷ்ய பனி­ம­லை­க­ளில் ஜேர்­மா­னி­யப் படை­க­ளைத் தோல்­வி­ய­டை­யச் செய்­தது. அமை­தி­யான குளத்­தில் மீன்­பி­டிப்­பது எளிது. அதை விடுத்­துக் கலங்­கிய குட்­டை­யில் என்­ன­தான் நீங்­கள் சிர­மப்­பட்­டுத் தூண்­டில் வீசி­னா­லும் மீன்­கள் அகப்­ப­டு­வது அரிது! புரிந்­து­கொண்டு செய­லாற்­றுங்­கள். அவ­ச­ரம் அபா­ய­க­ர­மா­னது என்ற வெற்­றி­யா­ளர்­க­ளின் வேத­சூத்­தி­ரம் உங்­க­ளுக்­குள் ஒரு மந்­தி­ர­மா­கவே ஒலித்­துக் கொண்­டி­ருக்­கட்­டும்!

You might also like