பருத்­தித்­துறை விபத்­தில்38 வயது இளை­ஞர் சாவு

பருத்­தித்­துறை, கோழிக்­க­டைச் சந்­திப் பகு­தி­யில் நேற்­றுப் பிற்­ப­கல் நடந்த விபத்­தில் குடும்­பத் தலை­வர் ஒரு­வர் உயி­ரி­ழந்­துள்­ளாார்.

ம.புவி­க­ரன் (வயது–-38) என்ற 3 பிள்­ளை­க­ளின் தந்­தையே உயி­ரி­ழந்­துள்­ளார்.
யாழ்ப்­பா­ணத்­தில் இருந்து பருத்­தித்­துறை நோக்கி உந்­து­ரு­ளி­யில் பய­ணித்­த­போது கோழிக்­க­டைச் சந்­திப்­ப­கு­தி­யில் உந்­து­ருளி வேகக் கட்­டுப்­பாட்டை இழந்­தது. உந்­து­ருளி வீதி­யில் இருந்து விலகி வீதி­யோ­ரம் இருந்த மதி­லுக்­கும், தூணுக்­கும் இடையே புகுந்து விபத்­துக்­குள்­ளா­னது. அதில் புவி­க­ரன் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­துள்­ளார்.

விபத்­துத் தொடர்­பில் பருத்­தித்­து­றைப் பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ள­னர். உயி­ரி­ழந்­த­வ­ரின் உடல் மந்­திகை மருத்­து­வ­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளது.

You might also like