19 ஆவது திருத்­தம் -நிறை­வேற்­றப்­பட்­டது!!

அர­ச­மைப்­பின் 19ஆவது திருத்­தச் சட்­டம் அவ­சர அவ­ச­ர­மாக நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்­றப் பட்­டது. மகிந்த ராஜ­பக்ச குடும்­பத்­தி­னர் அர­சி­ய­லில் பிர­வே­சிக் கக் கூடாது என்­ப­தற்­கா­கவே அவ்­வாறு செய்­யப்­பட்­டது. இவ்­வாறு மகிந்த அணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜோன் சென­வி­ரட்ன தெரி­வித்­தார்.

சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­ன­ணி­யின் அலு­வ­ல­கத்­தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யா­ளர்­கள் சந்­திப்­பில் பங்­கேற்று கருத்­துத் தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறினார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

அர­ச­மைப்­பின் 19ஆவது திருத்­தச் சட்­டத்தை ஐக்­கிய தேசி­யக் கட்சி தமக்­குச் சாத­க­மாக இயற்­றி­யது. நிறை­வேற்று அதி­கா­ரத்­தைப் பல­வீ­னப்­ப­டுத்தி நாடா­ளு­மன்­றத்­தில் அதி­கா­ரம் செலுத்­தி­னார்­கள்.

மகிந்த ராஜ­பக்ச இரண்டு தட­வை­கள் அரச தலை­வ­ராக இருந்­த◌ார். அவர் மீண்­டும் அரச தலை­வ­ரா­கப் போட்­டி­யி­டக் கூடாது என்­ப­தற்­காக அர­ச­மைப்­பில் 19ஆவது திருத்­தத்­தில் சரத்தை உள்­ள­டக்­கி­னார்­கள்.

கோத்­த­பாய ராஜ­பக்ச மற்­றும் பசில் ராஜ­பக்ச ஆகி­யோர் இரட்­டைக் குடி­யு­ரிமை கொண்­ட­வர். அவர்­கள் தேர்­த­லில் போட்­டி­யி­டக் கூடாது என்­ப­தற்­காக 19ஆவது திருத்­தத்­தில், இரட்­டைக் குடி­யு­ரி­மை­யு­டை­வர்­கள் தேர்­த­லில் போட்­டி­யி­டக் கூடாது என்ற சரத்தை உள்­ள­டக்­கி­யி­ருந்­தார்­கள்.

இவர்­கள் கொண்டு வந்த குழப்­ப­க­ர­மான 19ஆவது திருத்­தம்­தான் நாட்­டில் ஏற்­பட்­டுள்ள குழப்­பத்­துக்கு கார­ணம் – என்­றார்.

You might also like