500 நாள் சிறைவாசம் முடிந்தது- ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் விடுவிப்பு!!

மியான்மர் சிறையில் இருந்து ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் வா லோன், கியாவ் ஓ ஆகிய 2 செய்தியாளர்களையும் மியான்மர் அரசு விடுதலை செய்துள்ளது.

மியான்மரில் 10 ரோஹிங்கயா முஸ்லிம்கள் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தி செய்தி வெளியிட்ட வா லோன், க்யா சியோ என்ற 2 ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் அரசின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டதாக கூறி அவர்களுக்கு மியான்மரின் யங்கூன் மாவட்ட நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. செய்தியாளர்கள் கைதுக்கு ஐநா அமைப்பு கண்டனம் தெரிவித்திருந்தது.

ராய்டர்ஸ் செய்தியாளர்கள் இருவரும் 500 நாள்களுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்த நிலையில், நல்லெண்ண அடிப்படையில் அவர்கள் இருவரையும் மியான்மர் அரசு விடுவித்துள்ளது. செய்தியாளர்கள் இருவருக்கும் ஜனாதிபதி பொதுமன்னிப்பு அளித்து விடுதலை உத்தரவில் கையெழுத்திட்டதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிடப்பட்டுள்ளன.

மியான்மரின் பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்குகிறது. இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுவிப்பது அந்நாட்டில் வழக்கமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆயிரக்கணக்கான கைதிகள் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

You might also like