side Add

மோசடி புரி­யும் தலை­மை­க­ளுக்கு – மக்­க­ளின் தீர்ப்பு கிடைத்தே தீரும்!!

“மஹ­ர­கம’’ வில் வைத்து 138 ஆம் இலக்க வழித்­த­டத்தில் கொழும்பு கோட்­டைக்­குச் செல்­லும் பஸ் ஒன்­றில் இடம்­பி­டித்து பய­ணித்­தேன். நான் அமர்ந்­தி­ருந்த இருக்­கைக்கு முன்­புற இருக்­கை­யில் அமர்ந்து பய­ணித்த நடுத்­தர வய­து­டைய நப­ரொ­ரு­வ­ரும், வயது முதிர்ந்த நப­ரொ­ரு­வ­ரும் தம்­மி­டையே பொது­வான அர­சி­யல் நிலை குறித்து உரை­யா­டிக் கொண்­டி­ருந்­த­னர்.

‘‘கடை­சி­யில் மலே­சி­யத் தேர்­த­லில் மஹ­தீர் வெற்­றி­யீட்­டி­விட்­டாரே!’’
‘‘உண்­மை­தான், உண்­மை­யில் அது பெரு­வெற்­றி­யொன்­று­தான்’’
‘‘92வய­தி­லும் இந்த மனி­தர் தேர்­த­லில் வெற்­றி­பெற்­றமை சாத­னை­தான். ஆனா­லும் மஹ­தீர் ஒரு சர்­வ­ாதி­கா­ரப் போக்­கு­டை­ய­வ­ரல்­லவா?’’
‘‘அவர் சர்­வ­ாதி­கா­ரி­யல்ல, அந்த வேளை­யில்ஒரு பொல்லைத் தேர்­த­லில் நிறுத்­தி­யி­ருந்­தா­லும், வெற்­றி ­கிட்­டி­யி­ருக்­கும்.’’
‘‘ஏன் அப்­ப­டிச் சொல்­கி­றீர்?’’

‘‘ஏன் உமக்­குத் தெரி­யாதா? இங்கு இடம்­பெற்ற மத்­திய வங்­கிக் கொள்ளை போன்று மலே­சி­யா­வி­லும் அந்த நாட்­டுத் தலைமை அமைச்­சர் கோடிக் கணக்­கில் அரச நிதி­யைக் கொள்­ளை­ய­டித்­தா­ரல்­லவா? எங்­கள் நாட்­டுப் பொது­மக்­க­ளுக்­குப் போன்று, மலே­சியா நாட்­டுப் பொது­மக்­க­ளுக்­கும் மலே­சிய அரசு மீது வேண்டா வெறுப்­பாகி போச்­சுது.

மஹ­தீர் உரு­வாக்கி வைத்த மலே­சி­யா­ நாட்டை, நஜீப் நாசம் செய்­து­விட்­ட­தா­கத்­தான் பொது­மக்­கள் குற்­றம்­சாட்­டு­கின்­ற­னர். பல்­வேறு வரி­களை விதித்து, பொருள்­க­ளின் விலையை அதி­க­ரித்து, பெரிய அள­வில் மக்­க­ளை நஜீப் சிர­மப்­ப­டுத்­தி­னார். வாழ்க்­கைச் செல­வைச் சமா­ளிக்க இய­லாத அள­வுக்கு நாட்­டின் பொரு­ளா­தா­ரம் நலி­வு­கண்­டது. நாட்­டின் தலைமை அமைச்­சர் நஜீப் நாட்டு மக்­க­ளது கடும் வெறுப்­புக்கு உள்­ளாக நேர்ந்­தது.’’

*கண்­டக்­டர்­மார் ஒரு­போ­தும் டாக்­டர்­கள் ஆகி­விட முடி­யாது’’.
‘‘அது உண்­மை­தான். தலைமை அமைச்­ச­ராய் இருந்த நஜீப் ரசாக்­குக்கு, எந்­த­வொரு வௌிநாட்­டுக்­கும் செல்ல இய­லாத விதத்­தில் தடை விதிக்­கப்­பட்­டு ள் ளது. கடந்த அறு­பது ஆண்­டு­கள் கால­மாக ஆட்சி அதி­கா­ரத்­தைக் கொண்­டி­ருந்த பாரம்பரியக் கட்சி, நஜீப் ரசாக்­கின் செயற்­பா­டு­க­ளால் நாச­மாக்­கப்­பட்­டுள்­ளது.’’

‘‘தமது நாட்டு மக்களையும், நாட்­டை­யும் மீண்­டும் தலை­தூக்க வைப்­ப­தில் டாக்­டர் மஹ­தீர் வெற்­றி­கண்­டுள்­ளார். கண்­டக்­டர் நஜீப்போ கட்­சி­யை­யும் நாட்­டை­யும் சீர­ழித்­துள்­ளார். கண்­டக்­டர்­மார் ஒரு போதும் டாக்­டர்­கள் ஆகி­விட முடி­யா­தல்­லவா?’’

‘‘இலங்­கை­யில் கூட இதே­போன்ற நாசமே இடம் பெற்­றுள்­ளது. ரணில் இந்த நாட்­டின் பொரு­ளா­தா­ரத்­தை­யும் நாட்­டை­யும் நாசப்­ப­டுத்தி விட்­டுள்­ளார். ரணில் உண்­மை­யில் கண்­டக்­டர் போன்ற ஒரு­வரே’’
தங்­கள் இரு­வ­ருக்­கு­மி­டை­யே­யான உரை­யா­ட­லின் முடி­வில் இரு­வ­ரும் வாய்­விட்­டுச் சிரித்­த­னர்.

மலே­சியா நாட்­டின் அர­சி­யல் குறித்து நாட்­டின் பொது­மக்­கள் இவ்­வா­று­தான் தம்­மி­டை­யே பேசிக் கொள்­கி­றார்­கள், உண்­மை­யும் அது­தான்.
15ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் தமது அர­சி­யல் வாழ்க்­கை­யி­லி­ருந்து ஓய்வு பெற்­றுக் கொண்­டார் மஹ­தீர். ஆயி­னும் 60ஆண்­டு­க­ளாக மலே­சிய நாட்டை நிர்­வகித்த தமது கட்­சி­யின் தலை­மைப் பொறுப்பை தமக்குப் பின்னர், ஏற்­றுச் செயற்­பட்ட தலைமை அமைச்­சர் நஜீப் நாட்­டுக்கு விளை­வித்த நாசத்தை மஹ­தீ­ரி­னால் பார்த்­துக் கொண்­டி­ருக்க முடி­ய­ வில்லை.

2016ஆம் ஆண்­டில் தாம் அது­வரை இணைந்­தி­ருந்த கட்­சி­யி­லி­ருந்து வில­கிக் கொள்­ள மஹதீர் தீர்­மா­னித்­தார். ‘‘இந்த நாட்­டில் சுய இலா­ப­மீட்­டும் நோக்­கில் செயற்­ப­டும் அர­சி­யல்­வா­தி­க­ளால் மலே­சிய நாடு நாசப்­ப­டுத்­தப்­ப­டு­வதை என்­னால் ஏற்­றுக் கொள்ள இய­லா­துள்­ளது.

அத்­த­கைய அர­சி­யல் தலை­வர்­கள் தமது சுய இலாப நோக்­கில் பொது­மக்­க­ளது நிதி­யைக் கொள்­ளை­யி­டு­கின்­ற­னர்’’ எனக் குற்­றஞ்­சாட்­டிய மஹ­தீர் ‘எதிர்­பார்ப்­புக்­கூட்­டணி’ என்ற பெய­ரில் புதிய அர­சி­யல் கட்­சி­யொன்றை ஆரம்­பித்­தார்.

ஆரம்­பித்து இரண்டு ஆண்டுகள் காலம் பூர்த்­தி­ய­டை­வ­தற்கு முன்­னரே, மஹ­தீ­ரி­னது புதிய கட்சி நாட்டு மக்­க­ளது பேரா­த­ரவை ஈட்டி வேக­மாக வளர்ச்சி கண்டது. விரை­வில் இடம்­பெ­ற­வுள்ள பொதுத் தேர்­த­லில் தமது புதிய கட்சி போட்­டி­யி­ட­வுள்­ள­தாக இந்த ஆண்­டின் ஜன­வரி மாதத்­தில் மஹ­தீர் அறி­வித்­தி­ருந்­தார்.

அவ­ரது அந்த அறி­விப்பு வௌியாகி ஐந்­து­மா­த­கால இடை­வௌிக்­குள் மலே­சிய நாட்­டின் சாதா­ரண வாக்­கா­ளர்­க­ளில் பெரு­ம­ள­வா­னோர் மஹ­தீ­ரின் பின்­னால் அணி திரண்­ட­னர். உண்­மை­யில் நாட்­டின் வாக்­கா­ளர்­க­ளுக்கு மஹ­தீர் தரப்­பை­விட மாற்­றுத்­த­ரப்­பெ­த­னை­யும் ஆத­ரிக்க வாய்ப்­பில்­லா­தி­ருந்­தது.

*நவீன மலே­சி­யா­வின் தந்­தை­யெ­னப்
போற்­றப்­பட்­ட­வர் மஹ­தீர்

உண்­மை­யில் மலே­சிய நாட்­டின் பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியை எவ­ரும் எதிர்­பா­ராத அள­வுக்கு உயர்­வ­டை­ய­ வைத்த மஹ­தீர், 22ஆண்­டு­க­ளாக மலே­சிய நாட்டை நிர்­வ­கித்து வந்­தார். நவீன மலே­சி­யா­வின் தந்­தை­யென மஹ­தீர் கௌர­விக்­கப்­பட்­டார். ஆனால் தமது கொள்கை நிலைப்­பாட்­டுக்கு எதி­ரான தரப்­பி­னர்­களை அடக்கி ஒடுக்க மஹ­தீர் மேற்­கொண்ட இறுக்­க­மான கடும் செயற்­பா­டு­கள் கார­ண­மாக மஹ­தீ­ருக்கு எதி­ரான தரப்­பி­னர்­கள் ஒன்று திரண்­ட­னர். அதன் பலா­ப­ல­னாக 2008ஆம் ஆண்­டில் மலே­சிய நாட்­டின் அர­சி­ய­லில் தலைமை அமைச்­சர் பத­வியை தமது உத­வி­யா­ள­ரான நஜீப் ரஸாக்­கி­டம் ஒப்­ப­டைத்த பின்­னர் மஹ­தீர் அர­சி­ய­லில் இருந்து ஒதுங்­கிக் கொண்­டார்.

கோழிக் கூட்­டைக் காவல் காக்­கும் பொறுப்பை நரி­யி­டம் கைய­ளித்து விட்­டோமே என மஹ­தீர் உணர்ந்து கொண்ட வேளையில் காலம் கடந்து விட்­டி­ருந்­தது. அர­சி­ய­லில் இருந்து ஓய்­வு­பெற்று அமை­தி­யா­கக் காலத்­தைக் கழிக்க விரும்­பிய அவர், விரும்­பிய விதத்­தில் ஓய்­வெ­டுக்க இய­ல­ாத­வாறு நாட்டு மக்­கள் தமது தோள்­க­ளில் அவ­ரைத் தாங்கி மீண்­டும் மஹ­தீரை அதி­கா­ரத்­துக்­குக் கொண்­டு­வந்­த­னர்.

இடம்­பெற்ற தேர்­த­லில் மஹ­தீர் வெற்­றி­வாகை சூடி­ய­வேளை, மலே­சிய பொது­மக்­கள் கட்­சி­கள் குறித்தோ, வேட்­பா­ள­ரது வயது குறித்தோ அக்­கறை செலுத்­த­வில்லை. மஹ­தீர் ஒரு சர்­வா­தி­காரி போன்று செயற்­பட்­ட­வர்­தானே என்­று­கூட அவர்­கள் எண்­ணி­ய­தில்லை. பொது­மக்­க­ளுக்­குத் தேவைப்­பட்­ட­தெல்­லாம், கட­வுளே எனக்­கூறி உண்டு உடுத்து சுதந்­தி­ர­மாக வாழத்­தக்­க­தொரு நாடு­மட்­டுமே. கடன் சுமை­யற்­ற­தொரு நாடு மட்­டுமே. பொய், புரட்டு, களவு எவை­யு­மற்ற தூய நிர்­வா­கம் மட்­டுமே. தமது வசதி வாய்ப்­புக்­க­ளைப் பெருக்­கிக்­கொள்ள எண்­ணாது, நாட்டு மக்­க­ளுக்­காக அர்ப்­ப­ணிப்­பு­டன் உழைக்­க­வல்ல அர­சி­யல் தலை­மை­களே. மஹ­தீ­ரி­னது தேர்­தல் வெற்றி மிக இல­கு­வா­ன­தொன்­றா­கவே வர­லாறு படைத்­தது. அந்த அள­வுக்கு மலே­சிய நாட்டு மக்­க­ளுக்கு தலைமை அமைச்­சர் நஜீப்­பின் தலை­மை­யி­லான அரசு மீது கடும் வெறுப்பு ஏற்­பட்­டி­ருந்­தது.

மஹ­தீர் சர்­வாதி­காரி போன்றே
நாட்டை நிர்­வ­கித்­தார்

உண்­மை­யில் மஹ­தீர் சர்­வ­ாதி­கா­ரப் போக்­கு­ட­னான நிர்­வா­கத்­தையே முன்­னெ­டுத்த அர­சி­யல் தலை­வர்­தான். ஆனால் மலே­சிய நாட்­டின் அர­சி­யல் உறுதித் தன்மையைக் கட்­டிக்­காக்க அத்­த­கைய போக்கு உத­வி­க­ர­மாக அமைந்­தது. மலே­சிய நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு அத்­த­கைய போக்கு பேரு­த­வி­யாக அமைந்­தது.

இலங்­கை­யில் இடி­யேறு விழக் கார­ண­மாய் அமைந்­த­தும் இதுவே. சர்­வ­ாதி­கார நிர்­வா­கம், குடும்ப ஆட்சி, ஊழல் ஆட்சி என்­றெல்­லாம் மகிந்த தரப்­பின் மீது குற்­றம் சுமத்தி மகிந்த ராஜ­பக்­சவை ஆட்சி அதி­கா­ரத்­தி­லி­ருந்து வௌியேற்­றி­விட்டு மைத்­தி­ரி­பால சிறி­சேன – ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூட்டு அரசு நாட்­டின் நிர்­வா­கத்­தைப் பொறுப்­பேற்­றது.

தாம் கையேற்ற இந்த நாட்டை அவ்­விரு தரப்­புக்­க­ளும் தம்­மி­டையே பங்கு போட்­டுக் கொண்­டன. நாட்­டின் பொரு­ளா­தா­ரத்­து­றை­யைக் கையேற்ற ரணில் நாட்­டின் பொரு­ளா­தா­ரத்தை வலுப்­ப­டுத்­து­வ­தாகக் கதை­விட்டு, மத்­திய வங்­கி­யின் நிதி வளத்தை வௌிப்­ப­டை­யா­கவே சுருட்­டிக் கொள்­ளும் விதத்­தில் பிணை­முறை மோச­டிக்கு உட்­பட வைத்­தார். அந்த வேளைமுதல் கூட்டு அரசு நலி­வு­பட ஆரம்­பித்­தது. தலைமை அமைச்­சர் பதவி கேலிக்கு உரி­ய­தொன்­றாக ஆக நேர்ந்­தது. கடந்த உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­த­லின்போது நாட்­டின் கிரா­மப்­புற மக்­கள் கூட்டு அர­சுக்கு நல்­ல­தொரு பாடம் கற்­பித்து வைத்­த­னர்.

கண்­டக்­டர்­மா­ரும் கூட டாக்­டர்­கள் போன்றே கதைப்­ப­தற்­குப் பழ­கிக்­கொண்­டுள்­ள­னர். ஆனால் டாக்­டர்­கள் மேற்­கொள்­ளும் பணியை கண்­டக்­டர்­க­ளால் மேற்­கொள்ள முடி­வ­தில்லை. டாக்­டர் மஹ­தீர்­மார் மேற்­கொண்ட பணியை கண்­டக்­டர் தஹீர்­மா­ரால் மேற்­கொள்ள இய­லாது போயிற்று.

வாய்ப்­பைத் தவ­ற­விட்டு பத­வி­யைப்
பறி­கொ­டுத்­தார் நஜீப்

மஹ­தீர் உரு­வாக்­கிக் கைய­ளித்த மலே­சிய நாட்டை நஜீப்­பி­னால் சிறப்­பாக நிர்­வ­கித்து செல்ல வாய்ப்பு இருந்­துள்­ளது. அத்­த­கைய வாய்ப்­பி­ருந்­தும் அரச நிதியை பெரு­ம­ள­வில் வௌிப்­ப­டை­யா­கவே நஜீப் மோசடி செய்­தார்.அதே­போன்­று­தான் மைத்­தி­ரி­யும் ரணி­லும் நாட்­டின் அதி­கா­ரத்­தைப் பொறுப்­பேற்ற சம­யம், நாட்­டின் அர­சி­யல் உறுதித்தன்மை திருப்­தி­க­ர­மா­ன­தொரு நிலை­யில் இருந்து வந்­தது.

நாட்­டின் பொரு­ளா­தார நிலையை முன்­னேற்­று­ கி­றோம், வௌிநாட்டு முத­லீ­டு­களை ஏற்­ப­டுத்­து­கி­றோம் என ரணில் வெறு­மனே வாய­டித்­தா­ரே­யன்றி, எந்­த­வொரு உருப்­ப­டி­யான செயற்­பா­டு­க­ளை­யும் மேற்­கொண்­டா­ரில்லை. கடை­சி­யில் மத்­திய வங்­கி­யின் பிணை­முறி ஊழல் மூலம் பில்­லி­யன் கணக்­கான நாட்டு மக்­க­ளது நிதியை திரு­டர்­க­ளது சட்­டைப் பைக­ளில் நிரப்ப முடிந்­ததே கண்­ட­மிச்­ச­மாக ஆகிப்­போ­யிற்று.

நஜீப் தரப்­பி­னர் மலே­சிய நாட்­டுக்கு ஏற்­ப­டுத்தி வைத்த அப­கீர்த்­தி­யி­லி­ருந்து நாட்டை மீட்­டெ­டுக்க மலே­சி­யப் பொது­மக்­கள் வய­தால் முது­மை­ய­டைந்­து­விட்ட மஹ­தீரை மீண்­டும் அதி­கா­ரத்­தில் இருத்­தி­யுள்­ள­னர். அதே சம­யம் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தரப்­பி­ன­ரால் இந்த நாட்­டின் நற்­பெ­ய­ருக்கு ஏற்­ப­டுத்­தப்­பட்ட களங்­கத்­தில் இருந்து நாட்டை மீட்­டெ­டுக்க இலங்­கை­யின் பொது­மக்­கள் எவ­ரைப் புதி­தா­கப் பத­விக்­குக் கொண்டு வரப்­போ­கி­றார்­கள் என்­பது குறித்­துக்­கூற இன்­ன­மும் காலம் கனிந்து வர­வில்லை.

You might also like
X