அஜித்துக்காக ஒப்புக் கொண்ட நயன்தாரா!!

கொலிவூட்டின் முன்னணி நடிகையாக உள்ளவர் நயன்தாரா. ஹீரோக்களுக்கு இணையான கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடிக்கிறார். இல்லை என்றால் ஹீரோயினை சுற்றி நகரும் கதைகளாக பார்த்து தேர்வு செய்கிறார்.

இந்தநிலையில் அவர் அஜித்தின் விஸ்வாசம் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது தான் பலரையும் வியக்க வைத்துள்ளது.

விஸ்வாசம் படத்தில் அஜித் இருப்பதால் நயன்தாராவுக்கு பெரிதாக முக்கியத்துவம் இருக்காது என்று கூறப்படுகிறது. இது நன்றாக தெரிந்தும் கூட அந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் நயன்.

வழக்கமாக ஒரு இயக்குனர் தன்னை தேடி வந்தால் கதை, தன்னுடைய கதாபாத்திரம் என்று அனைத்து விபரங்களையும் கேட்டு அவை பிடித்தால் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்வார் நயன்தாரா. இதற்கிடையே தனது காதலர் விக்னேஷ் சிவனிடம் வேறு ஆலோசனை கேட்பாராம்.

விஸ்வாசம் படத்தில் நடிக்குமாறு இயக்குனர் சிவா கேட்டதும் சரி என்றாராம் நயன்தாரா. கதையை கேட்கவில்லையாம், அட தனது கதாபாத்திரம் என்னவென்று கூட கேட்காமலேயே நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

நயன்தாரா கோடிக் கணக்கில் சம்பளம் வாங்குகிறார். ஆனால் சிவாவிடம் அவர் சம்பள விடயத்தைப் பற்றி பேசவில்லையாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close