அபி­வி­ருத்தி என்­பது கட்­ட­டங்­க­ளின் எழுச்­சி­தானா?

நாளை­ தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க யாழ்ப்­பா­ணத்­தில் இருப்­பார். அரச நிதி­யில் உரு­வாக்­கப்­பட்ட சில கட்­ட­டங்­கள் திறப்பு உள்­ளிட்ட பல நிகழ்­வு­க­ளில் அவர் கலந்­து­கொள்­ள­வுள்­ளார்.

கடந்த சில வாரங்­க­ளில் மட்­டும் பல அமைச்­சர்­கள் யாழ்ப்­பா­ணம் உள்­ளிட்ட வடக்­குப் பகு­தி­க­ளுக்கு வந்து சென்­று­விட்­டார்­கள். ஒரு மாத காலத்துக்குள் தலைமை அமைச்­சர் யாழ்ப்­பா­ணம் வரு­வது இது இரண்­டா­வது முறை. தலைமை அமைச்­சர் மற்­றும் அமைச்­சர்­க­ளின் வரு­கை­யின் போது நடக்­கும் நிகழ்­வு­க­ளில் புதிய கட்­ட­டங் க­ளின் திறப்பு விழா அல்­லது புதிய கட்­ட­டங்­க­ளுக்­கான அடிக்­கல் நாட்டு நிகழ்வு என்­பன முக்­கி­ய­மா­ன­வை­யாக இருக்­கின்­றன என்­பது கண்­கூடு.

2015 தேர்­த­லில் தமிழ் மக்­க­ளுக்கு வாக்­கு­று­தி­ய­ளித்த பல விட­யங்­களை முழு­மை­யாக நிறை­வேற்­றாமை, புதிய அர­ச­மைப்பை நிறை­வேற்­றத் தவ­றிப் பின்­வாங்­கி­யமை என்­பன உள்­ளிட்ட பல தரப்­பட்ட பின்­ன­டை­வு­க­ளைச் சந்­தித்­துள்ள ரணில் ஆட்­சிக்கு அபி­வி­ருத்தி என்­கிற கவ­சத்­தை­விட்­டால் வர­வி­ருக்­கும் தேர்­தல்­களை வடக்­கில் எதிர்­கொள்­வது மிக­வும் கடி­ன­மா­னது. எனவே அவ­சர அவ­ச­ர­மா­கக் கட்­ட­டங்­கள் திறக்­கப்­ப­டு­வ­தன் பின்­ன­ணி­யைப் புரிந்­து­கொள்­வது ஒன்­றும் அவ்­வ­ளவு சிர­ம­மா­ன­தல்ல.

ஆனால், இத்­த­கைய செயற்­பா­டு­கள் ஒரு கேள்­வியை எழுப்­பு­ கின்­றன. கட்­ட­டங்­களை எழுப்­பு­வ­து­தான் அபி­வி­ருத்­தியா? என்­பதே அது. போருக்­குப் பின்­ன­ரான காலத்­தில் வடக்­கில் செல­வி­டப்­பட்­டி­ருக்­கக்­கூ­டிய அரச நிதி­யில் பெரும்­பா­லா­னவை கட்­ட­டங்­கள் மீதே வாரி இறைக்­கப்­பட்­டமை கண்­கூடு. தேவை­யான உட்­கட்­ட­மைப்பு வச­தி­கள் அவ­சி­யம்­தான். இல்லை என்று கூறி­வி­ட­வில்லை. ஆனால், அந்­தக் கட்­டடங்­கள் குறுக்­கு­வெட்­டாக இல்­லா­மல் நீளப்­போக்­கில் வளர்ந்து செல்­வது ஆரோக்­கி­ய­மா­னதா என்­கிற கேள்வி உண்டு. அதா­வது அரச அலு­வ­ல­கங்­க­ளுக்கு எனப் பல கட்­டடங்­கள் எழுப்­பப்­ப­டு­வ­தற்­குப் பதில் பல அடுக்கு மாடி­க­ளைக் கொண்ட ஒரே கட்­ட­டத்­தில் பல அலு­வ­ல­கங்­களை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய திட்­டம் ஒன்று ஏன் ஏற்­ப­டுத்­தப் ப­ட­வில்லை?

கட்­ட­டங்­களை அரசு மட்­டுமே கட்­டு­கின்­றது என்று சொல்­லி­விட முடி­யாது. தனி­யா­ரா­கிய மக்­க­ளும் நிறை­யவே கட்­டங்­க­ளைக் கட்­டிக்­கொண்டே இருக்­கி­றார்­கள். புதிது புதி­தாக வீடு­கள் பல முளைக்­கின்­றன. முதன்மை வீதி­கள் எங்ஙனும் கடை­க­ளைக் கட்­டி­எ­ழுப்­பு­கி­றார்­கள். வர்த்­தக வாணிப வசதி வாய்ப்பு இருக்­கி­றதோ? இல்­லையோ? முதன்மை வீதி­யோ­ரம் ஒரு காணித் துண்டு இருந்­தால் அதில் ஒரு கடைக்­கான கட்­ட­டத்­தைக் கட்­டி­வி­டு­கி­றார்­கள். இப்­படி இருக்­கும் எல்லா நிலத்­தை­யும் கட்­ட­டங்­க­ளால் நிரப்­பி­வி­டு­கின்ற கைங்­க­ரி­யத்­தில் அர­சுக்­குச் சளைக்­காத வகை­யில் மக்­க­ளும் கட்­ட­டங்­களை எழுப்­பிக்­கொண்டே இருக்­கி­றார்­கள்.

இப்­ப­டிக் கட்­ட­டங்­களை எழுப்­பிக்­கொண்டே செல்­வ­து­தானா அபி­வி­ருத்தி என்­றால் இல்லை. இலங்­கை­யின் ஏரா­ள­ மான இயற்­கை­வ­ளங்­கள் மற்­றும் நிறை­வான உயிர்ப்­பல்­வ­கைமை ஆகி­ய­வற்­றைப் பாது­காப்­பதே நிலை­பே­றான அபி­வி­ருத்தி. அதுவே வலு­வான பொரு­ளா­தா­ரத்துக்கும் இன்­றி­ய­மை­யா­தது. 19ஆம் நூற்­றாண்­டின் தொடக்­கத்­தில் 70 சத­வீ­த­மா­கக் காணப்­பட்ட இலங்­கை­யின் காடு­கள், இப்­போது 30 வீத­மா­கி­விட்­டன. காடு­களை அழித்­து­விட்டு யானை­கள் மனி­தக் குடி­யி­ருப்­புக்­க­ளுக்­குள் வரு­கின்­றன என்று குற்­றஞ்­சாட்­டு­கின்­றோம்.
அபி­வி­ருத்தி என்­பது சமூ­கத்­தின் தேவை­க­ளை­யும் விடு­த­லை­யை­யும் முழு­மை­யாக நிறைவு செய்­வ­தா­கும் என்று சொல்­வார் அறி­ஞர் கொவ்­லேற். வாழ்­த­லுக்­கான வாழ்­வா­தா­ரம், சுய­ம­ரி­யாதை, விடு­தலை என்­கிற மூன்று முக்­கிய கூறு­க­ளி­லேயே அபி­வி­ருத்தி தங்­கி­யுள்­ளது என்­றும் அவர் சொல்­வார்.

அந்த வகை­யில் பார்க்­கை­யில் வடக்­கில் கட்­ட­டங்­களை மட்­டும் எழுப்­பி­வி­டு­வ­தால் அபி­வி­ருத்தி ஏற்­பட்­டு­வி­டப்­போ­வ­தில்லை. தமிழ் மக்­க­ளின் தேவை­க­ளை­யும் விடு­த­லை­யை­யும் முழு­மை­யாக நிறைவு செய்­வ­தற்கு கொழும்பு ஆட்­சி­கள் முன்­வ­ரு­வ­தன் மூலமே வடக்கு – கிழக்­கில் உண்­மை­யான அபி­வி­ருத்தி ஏற்­ப­ட­மு­டி­யும். கொழும்­பி­டம் இருந்து தமி­ழர்­கள் அத­னையே எதிர்­பார்க்­கி­றார்­கள்.

You might also like