அமைச்சர் மனோவுடன்- சிறப்புச் செவ்வி!!

கேள்வி: – புதிய அர­ச­மைப்­புக்­கான வரை­வில் ஏக்­கிய ராஜ்­ஜிய/ ஒரு­மித்­த­நாடு என்று மூன்று மொழி­க­ளி­லும் குறிப்­பி­ டப்­பட்­டுள்­ளது என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு கூறு­கின்­றது. ஆனால் ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யின் அமைச்­சர்­க­ளும், தலைமை அமைச்­ச­ரும் ஏக்­கிய ராஜ்­ஜிய என்­று­தான் மூன்­று­மொ­ழி­க­ளி­லும் இருக்­கும் என்று சொல்­கின்­றார்­கள். உண்மை எது?

பதில்: – தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் முன்­மொ­ழி­வின் அடிப்­ப­டை­யில் மூன்று மொழி­க­ளி­லும் ஏக்­கிய என்ற சொல்­லைப் பயன்­ப­டுத்­தி­விட்டு அதற்­குப் பக்­கத்­தி­லேயே விளக்­கத்­தை­யும் கொடுத்­துள்­ளார்­கள். ஏக்­கிய என்ற சொல்­லுக்குத் தமி­ழிலே ஒரு­மித்த நாடு என்று அர்த்­தம் கூறி­யி­ருக்­கின்­றார்­கள்.

தலைமை அமைச்­சர் ரணில் ஒற்­றை­யாட்சி எனக் கூறி­னார் என்று நீங்­கள் சொல்­லு­கின்­றீர்­கள். தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நாடா­ளு­மன்­றத்­தில் ஒற்­றை­யாட்சி என்று கூற­வில்லை. ஏக்­கிய என்று சிங்­க­ளத்­தில் சொன்­னார். அதற்­குத் தமி­ழில் அர்த்­தம் ஒரு­மித்த என்­ப­து­தான். ஒரே சொல்­லுக்கு இரண்டு மூன்று அர்த்­தங்­கள் இருப்­ப­தில்­லையா? இருக்­கின்­ற­து­தானே. சில­வே­ளை­க­ளில் டக்­ளஸ் தேவா­னந்­தா­வுக்குத் தெரி­யா­மல் இருக்­க­லாம். நான் மொழி அமைச்­சர். எனக்கு நன்­றா­கத் தெரி­யும்.

இருக்­கும் பிரச்­சி­னை­களை நாங்­கள் குறைக்க முய­ல­வேண்­டும். இன்­ன­மும் கூட்­டி­வி­டக் கூடாது. அர­சி­யலை ஒரு புறம் ஒதுக்­கி­விட்டு முடிந்த வரை­யில் நாங்­கள் ஒத்­து­ழைத்து தேசி­யப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காண­வேண்­டும். என்­னைப் பொறுத்த வரை­யில் சிங்­க­ளத்­தில் ஏக்­கிய என்­ப­தற்­கு­ரிய தமிழ் அர்த்­தம் ஒரு­மித்­த­ என்பதுதான்.

கே: தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­ சிங்க நாடா­ளு­மன்­றத்­தில் உரை­யாற்­றும்­போது, தற்­போ­தைய அர­ச­மைப்­பின் 2ஆவது உறுப்­பு­ரி­யைப் பாது­காப்­பேன் என்று கூறி­னாரே. தற்­போ­தைய அர­ச­மைப்­பின் 2ஆவது உறுப்­பு­ரி­மை­யில் ஏக்­கிய ராஜ்­ஜிய என்று மட்­டும்­தானே அதா­வது ஒற்­றை­யாட்சி என்­று­தானே கூறப்­பட்­டுள்­ளது. அப்­ப­டி­யா­னால் இங்கே முரண்­பாடு எழு­கின்­ற­தல்­லவா?

ப -: இல்லை. அத­னைக் கொண்­டு­வ­ர­வேண்­டும் என்­ப­து­தான் கூட்­ட­மைப்­பின் கோரிக்­கை­யாக இருக்­கின்­றது. வடக்கு மற்­றும் கிழக்கு மாகா­ணங்­கள் இணைக்­கப்­பட வேண்­டும் என்­பது கூட்­ட­மைப்­பின் பாரம்­ப­ரியக் கோரிக்­கை­யாக இருந்­தது. பௌத்த மதத்­துக்­கான முதன்மை இடத்தை அகற்­றி­விட்டு மதச் சார்­பற்ற நாடாக வர­வேண்­டும் என்­ப­தும் கூட்­ட­மைப்­பின் கோரிக்­கை­யாக இருந்­தது.

ஏன் எங்­க­ளின் கோரிக்­கை­யா­க­வும் இருந்­தது. இந்த நாட்­டின் அர­ச­மைப்பு கூட்­டாட்சி அர­ச­மைப்­பாக (சமஷ்டி) வர­வேண்­டும் என்­ப­து­ கூட்­ட­மைப்­பின் கோரிக்­கை­யாக மட்­டு­மல்ல எங்­க­ளின் கோரிக்­கை­யா­க­வும் இருந்­தது. அவற்­றை­யெல்­லாம் விட்­டுக் கொடுத்­து­விட்­டோம். நெகிழ்வுப் போக்­கைக் கடைப்­பி­டித்­துள்­ளோம். ஒரு தீர்வு வர­வேண்­டும் என்­ப­தற்­காக பல விட­யங்­களை விட்­டுக் கொடுத்து வந்­துள்­ளோம்.  பெலீ­சிய நக­ரத்து வர்த்­த­கர் போல, இருக்­கும் ஓர் இறாத்­தல் இறைச்­சியை எங்­க­ளுக்­குத்­தான் முழு­மை­யாக வேண்­டும் என்று நாங்­கள் பிடி­வா­தம் பிடிக்க முடி­யாது. விட்­டுக் கொடுத்­து­தான் போக­வேண்­டும்.

எல்­லா­வற்­றை­யும் விட்­டுக் கொடுத்து விட்டு இத­னை­யும் விட்­டுக் கொடுப்­பதா? என்ற கேள்­வி­யும் எழு­கின்­றது. தமிழ் தரப்பு, தமிழ்த் தலை­மை­கள் விட்­டுக் கொடுப்­ப­தைப் போன்று சிங்­க­ளத் தலை­மை­கள் விட்­டுக் கொடுத்து வர­வேண்­டும். விட்­டுக் கொடுக்­க­வேண்­டும் என்று பெருந்­தன்­மை­யு­டன் நடப்­பது வேறு. சிங்­க­ளத் தரப்­புக் கோவிக்­கும், அவர்­க­ளுக்­குப் பிடிக்­காது, அவர்­கள் அச்­சப்­ப­டு­வார்­கள் என்ற கார­ணத்­தைச் சொல்­லிக் கொண்­டி­ருந்­தால் எதை­யுமே எடுக்க முடி­யாது.

கே: -ரணில் விக்­கி­ர­ம­சிங்க கடந்த வாரம் களுத்­து­றை­யில் உரை­யாற் றும்­போது புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கம் தனது பணி­யல்ல என்­றும் அது நாடா­ளு­மன்­றத்­தின் பொறுப்பு என்­றும் கூறி­யி­ருக்­கின்­றார். புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கப் பணி­க­ளி­லி­ருந்து நழு­வும் போக்­குத் தென்­ப­டு­கின்­றதே. அதனை ஐக்­கிய தேசி­யக் கட்சி அர­சு­டன் பங்­கா­ளி­யாக இருக்­கும் நீங்­கள் உணர்­கின்­றீர்­களா?

ப: -நீங்­கள் உணர்­வ­தற்கு முன்­னரே நான் அதனை உணர்ந்­து­விட்­டேன். நீங்­கள் சொல்­வ­தைப் போன்று நானும் சொல்­லி­விட்­டேன். இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் அத­னைச் சொன்­னேன். புதிய அர­ச­மைப்பு என்­பது வரும் ஆனால் வராது என்று சொன்­னேன். பல­முறை சொல்­லி­யி­ருக்­கின்­றேன். நான் அத­னைச் சொல்­லும்­போது என்­னைப் பார்த்துப் பலர் திட்­டித் தீர்த்­தார்­கள். என்­னைத் திட்­டித் தீர்த்­த­வர்­கள் எல்­லாம் இன்று வாயை மூடிக் கொண்டு தலை­யைச் சொறிந்து கொண்டு இருக்­கின்­றார்­கள்.

நான் அன்று சொன்­னது சரி­யா­கி­விட்­டது என்று மகிழ்ச்­சி­ய­டை­ய­வில்லை. நான் சொன்­னது பிழைத்­தி­ருந்­தால்­தான் சந்­தோ­ச­ம­டைந்­தி­ருப்­பேன். உண்­மை­யைச் சொன்­னேன். நான் அவ்­வாறு சொன்­ன­தன் அர்த்­தம் புதிய அர­ச­மைப்பு வரக்­கூ­டாது என்­ப­தல்ல. அர­ச­மைப்பு வர­வேண்­டும். அது தேவை­யாக இருக்­கின்­றது.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­த­னுக்குச் சமா­ன­மாகத் தமிழ் முற்­போக்­குக் கூட்­ட­ணி­யின் தலை­வர் நானும் புதிய அர­ச­மைப்பு வர­வேண்­டும் என்­ப­தையே விரும்­பு­கின்­றேன். எனது அவா­வும் அது­தான்.

வித்­தி­யா­சம் என்­ன­வென்­றால், நான் மக்­க­ளி­டம் யதார்த்­தத்தை மறைக்க விரும்­ப­வில்லை. உண்­மை­யைக் கூறத்­தான் விரும்­பு­கின்­றேன். எங்­கள் விருப்­பம் இது. யதார்த்­தம் இது. இதனை மக்­க­ளி­டம் சொல்­லி­வி­ட­வேண்­டும்.
இத­னைச் சொல்­லா­வி­டின் இரண்டு தீய விளை­வு­கள் வர­லாம். ஒன்று மக்­கள் மத்­தி­யில் பலத்த எதிர்­பார்ப்­பைக் கொடுத்து விட்டு, எங்­களை ஏமாற்­றி­விட்­டீர்­களே? என்று சொல்­வார்­கள்.

ஏமாற்­றி­யது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்போ அல்­லது தமிழ் முற்­போக்­குக் கூட்­ட­ணியோ அல்ல. சிங்­க­ளப் பேரி­ன­வா­தம்­தான் ஏமாற்­றி­யது. நம்ப வைத்து ஏமாற்றி விட்­டார்­கள். அந்­தக் கோபத்தை நாங்­க­ளும் பகிர்ந்து கொள்­ள­வேண்­டிய தேவை ஏற்­ப­டும்.

மறு­பு­றத்­தில் இப்­படி ஏமாற்­றப்­பட்ட கார­ணத்­தாலே மக்­கள் சலிப்­ப­டைந்து விரக்­தி­ய­டைந்து எங்­க­ளுக்கு எந்த உரி­மை­யும் வேண்­டாம் வாழ­விட்­டாலே போதும் என்ற நிலைக்­குப் போய்­வி­டு­வது உரி­மை­யைக் கோரி நிற்­கும் இனத்­துக்கு அழ­கல்ல. இவற்­றை­யெல்­லாம் கருத்­தில் கொண்­டு­தான் இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்­பா­கவே நான் உண்­மை­யைச் சொன்­னேன்.

கே: – சரி அப்­ப­டி­யா­னால் தமிழ் மக்­க­ளின் இனப்­பி­ரச்­சி­னைக்­குத் தீர்­வு­தான், புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான வழி­தான் என்ன ?

ப: – வழி­கள் இருக்­கின்­றன. இன்று இல்­லா­விட்­டால் நாளை, நாளை இல்­லா­விட்­டால் நாளை மறு­நாள் நடக்­க­வேண்­டும் என்று முத­லில் நம்­பு­வோம். நம்­பிக்கை இருக்­க­வேண்­டும். நம்­பிக்­கையை கைவி­டக்­கூ­டாது. ஆனால், இதை வெறு­மனே வடக்கு மற்­றும் கிழக்கு மக்­க­ளின் பிரச்­சி­னை­யா­கவோ, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பிரச்­சி­னை­யா­கவோ பார்க்­கா­மல் நாடு முழு­வ­தும் வாழ்­கின்ற தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னை ­யா­கப் பார்த்து, நாடு முழு­வ­தும் வாழ்­கின்ற தமிழ் மக்­க­ளைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்ற எல்­லாத் தமிழ் கட்­சி­க­ளும் ஏதோ ஒரு தளத்­தில் ஒன்று சேர்ந்து இதை அணு­க­வேண்­டும். இதனை நான் தொடர்ச்­சி­யாக சொல்லி வந்­தி­ருக்­கின்­றேன்.

இன்று தனி­நாட்­டுக் கோரிக்கை கைவி­டப்­பட்டு விட்­டது. அதி­கா­ர­பூர்­வ­மாகக் கூட்­ட­மைப்பு அத­னைக் கைவிட்டு விட்­டது. ஆனால் எங்­கள் அர­சி­யல் இலக்கை அடை­வ­தற்கு நாடா­ளு­மன்ற ஜன­நா­ய­கத்­துக்கு வெளியே சென்று ஆயுத வன்­முறை மூல­மா­கப் போரா­டு­வது என்ற வழி­மு­றை­யும் கைவி­டப்­பட்டு விட்­டது. சிங்­கள மக்­க­ளைத் திருப்­திப்­ப­டுத்­து ­வ­தற்கு இவை இரண்­டுமே போதும்.

தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­கள் வழங்­கி­னால் அவர்­கள் தனி நாட்டை நோக்­கிப் போய்­வி­டு­வார்­கள் என்று அச்­சப்­ப­டு­கின்­றார்­கள். அது நியா­ய­மான அச்­சம்­தான். அதே­போன்று பொலிஸ் அதி­கா­ரம் வழங்­கி­னால் தமிழ் மக்­கள் அதனை வைத்து ஆயு­தப் போராட்­டத்தை ஆரம்­பித்­து­வி­டு­வார்­கள் என்று அச்­சப்­ப­டு­கின்­றார்­கள். அது அவர்­க­ளின் கோணத்­தில் நியா­ய­மான அச்­சம்­தான். எங்­க­ளுக்கு அது இல்­லா­விட்­டா­லும், அவர்­க­ளின் கோணத்­தில் அது ஏற்­றுக் கொள்­ளப்­ப­டக்­கூ­டி­யதே. அவர்­க­ளின் நியா­ய­மான அச்­சத்தை நாங்­கள் களை­ய­வேண்­டும்.

அத­னைக் களை­யா­மல் நாங்­கள் செயற்­ப­டு­வ­தா­லேயே, தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் தலை­வர் பிர­பா­க­ரன் ஆயு­தத்­தால் பெற முடி­யா­ததை, கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் புதிய அர­ச­மைப்பு ஊடா­கப் பெற்­றுக் கொள்ள முயற்­சிக்­கின்­றார் என்ற பச்­சைப் பொய்யை மகிந்த தரப்­பி­னர் சொல்­கின்­றார்­கள். இதற்கு ஒரே வழி, நாடு முழு­வ­தும் வாழும் தமிழ் மக்­களை ஒன்­றா­கச் சேர்க்­க­வேண்­டும்.

இலங்­கை­யில் வாழும் தமிழ் மக்­க­ளின் தொகை ஏறக்­கு­றைய 34 லட்­சம். அரச கணக்­கெ­டுப்பை எடுத்­துப்­பார்த்­தால் இலங்­கைத் தமி­ழர்­கள் என்று 28 லட்­சம் பேர் இருக்­கின்­றார்­கள். இந்­திய தமி­ழர்­கள் என்று 7 லட்­சம் பேர். உண்­மை­யில் அப்­ப­டி­யல்ல. இந்­தி­யத் தமி­ழர்­கள் என்று சொல்­லப்­போ­னது அண்­மைய இந்­தி­யத் தமி­ழர்­களை. அவர்­கள் தொகை 15 லட்­சம். இலங்­கைத் தமி­ழர்­கள் தொகை 15 லட்­சம்­தான். இரு தரப்­பும் சம­மா­கத்­தான் இருக்­கின்­றார்­கள். நிறைய ஈழத் தமி­ழர்­கள் ரொரன்­ரோ­வி­லும், ஆஸ்­தி­ரே­லி­யா­வி­லும் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்­றார்­கள். அவர்­கள் திரும்பி வரப்­போ­வ­தில்லை. வந்து காணி­யைப் பார்த்து விட்­டுப் போவார்­களே தவிர, இங்கு வாழப்­போ­வ­தில்லை.

தமி­ழர்­கள் எல்­லோ­ரும் ஒன்­று­சேர வேண்­டும் என்­ப­து­தான் வர­லாறு காட்­டும் வழி. வடக்கு, கிழக்கு, மலை­நாடு என்று நாடு முழு­வ­தும் வாழும் தமி­ழர்­கள் என்ற அடிப்­ப­டை­யில் ஒன்­று­சே­ர­வேண்­டும்.

சிங்­க­ள­வர்­க­ளைப் பாருங்­கள். கடந்த காலத்­தில் மலை­நாட்­டுச் சிங்­க­ள­வர்­கள், கரை­யோ­ரச் சிங்­க­ள­வர்­கள் என்று இரண்டு பிரி­வு­கள் இருந்­தன. காலா­கா­லத்­தில் அது மாற்­றப்­பட்டு சிங்­க­ள­வர்­கள் என்ற ஒரே அடை­யா­ளத்­தில் வந்து விட்­டார்­கள். ஏன் முஸ்­லிம்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் இந்­திய முஸ்­லிம்­கள், இலங்கை முஸ்­லிம்­கள் என்று இரண்டு பிரி­வு­கள் இருந்­தன. சேர் ராசிக் பரீத் என்ற முஸ்­லிம் தலை­வர்­கள் முஸ்­லிம்­கள் என்ற ஒரே கூரை­யின் கீழ் கொண்டு வந்­தார். பெரும்­பான்மை முஸ்­லிம்­கள் ஒன்­றாக வந்­து­விட்­டார்­கள். தமிழ்­மக்­கள் ஒன்­றா­கச் சேர­வேண்­டும். ஒன்­றா­கச் சேர்­வ­தன் மூல­மா ­கத்­தான், தமிழ் மக்­க­ளைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­ டுத்­து­கின்ற நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் ஒன்­றா­கச் சேர­வேண்­டும் என்று சொன்­னேன். இது தேர்­தல் கூட்­டல்ல. முடி­யு­மா­னால் தேர்­தல் கூட்­டைக்­கூட உரு­வாக்­கிக் கொள்­ள­லாம்.

கே: – நீங்­கள் கூறு­வ­தைப்­போன்று தமி­ழர்­கள் அல்­லது அவர்­க­ளைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து ­கின்­ற­வர்­கள் ஓர­ணி­யில் திரள்­வ­தற்கு என்ன தடை­யாக இருக்­கின்­றது?

ப: – (சிரிக்­கின்­றார்) என்­னி­டம் கேட்­கா­தீர்­கள். நான் தடை­யில்லை. அவ்­வ­ள­வு­தான் என்­னால் சொல்ல முடி­யும். நான் சொன்ன விட­யங்­கள் சரி­யா­கி­யி­ருக்­கின்­றன. புதிய அர­ச­மைப்பைப் பற்­றிச் சொல்­லி­யி­ருக்­கின்­றேன். அதைப் பற்றி நான் கூறிய யதார்த்­தம் இன்று உண்­மை­யா­கி­விட்­டது. அதே­போன்று தமி­ழர்­கள் எல்­லாம் அர­சி­ய­லுக்கு அப்­பாற்பட்ட முறை­யிலே பொது­நோக்­கில் ஒன்­று­சே­ர­வேண்­டும் என்று சொன்­னேன். அது­வும் நடை­பெ­றாத கார­ணத்­தாலே இப்­பொ­ழுது அதன் தேவைப்­பாட்டை மக்­க­ளால் உணர்ந்து கொள்­ளக் கூடி­ய­தாக இருக்­கின்­றது.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான நாங்­கள் இருக்­கின்ற இந்த அர­சைக் காப்­பாற்­று­வ­தற்­காக அர­சுக்கு உள்­ளே­யி­ருந்து தமிழ் முற்­போக்­குக் கூட்­டணி பெரிய பங்­க­ளிப்பை வழங்­கி­யது. அர­சுக்கு வெளி­யில் இருக்­கின்ற தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும் பெரி­ய­தொரு பங்­க­ளிப்பை வழங்­கி­யது. இரண்டு கரங்­க­ளும் ஒன்­றா­கச் சேர்ந்து தட்டி ஓசை எழுப்­பிய கார­ணத்­தி­னால்­தான், அந்த ஓசை­தான் மகிந்த ராஜ­பக்­சவை விரட்­டி­ ய­டித்­தது. ஆகவே ரணில் விக்­கி­ர­ம­சிங்­க – ஐக்­கிய தேசிய முன்­னணி அர­சைக் காப்­பாற்­று­வ­தற்­காக தமிழ் முற்­போக்­குக் கூட்­ட­ணி­யும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஒன்­று­சேர முடி­யும் என்­றால், தமிழ் மக்­களை காப்­பாற்­று­வ­தற்கு ஏன் ஐயா ஒன்­று­சேர முடி­யாது?

இந்­தக் கேள்­வியை உத­யன் பத்­தி­ரிகை மூல­மாக இந்த வடக்கு– கிழக்­கில் வாழ்ந்து கொண்­டி­ருக்­கக் கூடிய மக்­க­ளின் மனச்­சாட்­சியைத் தட்­டி­யெ­ழுப்­பும் வித­மா­கக் கேட்க விரும்­பு­கின்­றேன். அந்த மக்­க­ளைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­ டுத்­து­கின்ற நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், என் நண்­பர்­க­ளி­டத்­தி­லும் கேட்க விரும்­பு­கின்­றேன்.

கே: – ஆட்­சி­யில் மாறி மாறி அமர்­கின்ற இரண்டு தரப்­பி­ன­ரும், தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­ னைக்­குத் தீர்வு வழங்­கு­வோம் என்று கூறு­வ­தும், ஆட்­சி­யில் அமர்ந்த பின்­னர் அதற்கு நேர் எதி­ரா­கச் செயற்­ப­டு­வ­தும், குறிப்­பாகத் தமிழ் மக்­க­ளின் வாக்­கு­க­ளால் ஆட்­சிக்கு வந்த நல்­லாட்சி உட்படச் சிங்­களத் தரப்­புக்­கள் இந்த நிலைப்­பாட்­டையே தொட­ரும் நிலை­யி­லும், தமிழ் மக்­க­ளின் விமர்­ச­னங்­க­ளை­யும் சந்­தித்­துக் கொண்டு கூட்­ட­மைப்பு எவ்­வ­ளவோ விட்­டுக் கொடுத்­தும், சிங்­கள மக்­க­ளுக்குத் தங்­க­ளின் நல்­லெண்­ணங்­களை வெளிப்­ப­டுத்­தி­யும் தீர்­வைப் பெற முடி­யாத நிலை­யில், தமிழ் மக்­கள் ஓர­ணி­ யில் திரள்­வ­தால் தீர்வு எப்­ப­டிச் சாத்­தி­யப்­ப­டும்?

ப: – தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்புப் புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­துக்­குப் பெரி­ய­தொரு பங்­க­ளிப்பை வழங்­கி­யுள்­ளது. இறங்கி வந்­தி­ருக்­கின்­றது. புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­துக்­கான வழி­ந­டத்­தல் குழு­விலே சம்­பந்­த­னும், சுமந்­தி­ர­னும் பெரிய பங்­க­ளிப்பை வழங்­கி­யி­ருக்­கின்­றார்­கள். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை விட இந்த விட­யம் எனக்­குத்­தான் நன்­றா­கத் தெரி­யும். வழி­ந­டத்­தல் குழு­வில் நானும் இருந்­தேன்.

வழி­ந­டத்­தல் குழு­வில் கார­சா­ர­மான விவா­தம் வரும். இதன்­போது சம்­பந்­தன், கோபப்­பட்டு, ஆவே­சப்­பட்டு மேசை­யில் அடித்துத் தமிழ் மக்­க­ளின் நியா­யத்தை எடுத்­து­ரைத்­தி­ருந்­தார்.

இதன்­போது அமை­தி­யாக வாய்­மூடி ரணில் விக்­கி­ர­ம­சிங்க, நிமல் சிறி­பா­லடி சில்வா, லக்ஸ்­மன் கிரி­யெல்ல, தினேஸ் குண­வர்த்­தன, சுசில் பிரே­ம­ஜ­யந்த, சம்­பிக்க ரண­வக்க போன்­ற­வர்­கள் செவி­ம­டுத்­ததை நான் பல­முறை பார்த்­தி­ருக்­கின்­றேன்.

அதே­வேளை ஜயம்­ப­தி­யு­டன் சேர்ந்து சுமந்­தி­ரன், தனது முழு­மை­யான சட்ட அறி­வைப் பயன்­ப­டுத்தி இதை எல்­லாம் எழு­தி­னார். எழு­திய எழுத்­தெல்­லாம், கூட்­ட­மைப்பு வழங்­கிய பங்­க­ளிப்பு எல்­லாம் வீணா­கிப் போய்­விட்­ட­னவோ என்று கவலை இருக்­கின்­றது.

அதா­வது காட்­டிலே தெரி­யும் நில­வைப் போல, விழ­லுக்கு இறைத்த நீரைப் போல வீணா­கி­விட்­டதோ என்று கவ­லைப்­ப­டு­கின்­றேன். அந்த இன­வா­தி­கள் மீது கோபப்­ப­டு­கின்­றேன். நாங்­கள் ஒன்­றா­கச் சேர­வேண்­டும் என்று அத­னால்­தான் சொல்­கின்­றேன். ஒன்­றா­கச் சேர்ந்து ரணி­லைக் காப்­பாற்ற முடி­யு­மா­னால் தமிழ் மக்­க­ளைக் காப்­பாற்ற முடி­யாதா? நான் தயார். அவர்­கள் தயாரா?

கே: – நிறை­வேற்று அதி­கார அரச தலை­வர் முறைமை நீக்­கப்­ப­டக் கூடாது என்று நீங்­கள் உள்­பட சில சிறு­பான்­மைக் கட்­சித் தலை­வர்­கள் வழி­ந­டத்­தல் குழு­வுக்கு அறிக்கை சமர்ப்­பித்­தி­ருந்­தீர்­கள். ஒக்­ரோ­பர் 26 சூழ்­சிக்­குப் பின்­னர் உங்­கள் நிலைப்­பாட்­டில் மாற்­றம் ஏற்­பட்­டுள்­ளதா?

ப: – (சிரிக்­கின்­றார்) இல்லை பார்ப்­போம். அரச தலை­வர் முறைமை மாற்­றப்­ப­டக்­கூ­டாது என்று நான் கூறி­ய­தற்கு கார­ணம் உண்டு. அரச தலை­வர் தேர்­தல் ஒன்­றில்­தான் முழு நாடும் ஒரே தேர்­தல் மாவட்­ட­மா­கச் செயற்­ப­டு­கின்­றது. சகல மக்­க­ளி­ன­தும், இனங்­க­ளி­ன­தும் வாக்கு இருந்­தால்­தான் வேட்­பா­ள­ரா­கப் போட்­டி­யி­டும் ஒரு­வர் வெற்­றி­பெற முடி­யும். இத­னால் விரும்­பியோ விரும்­பா­மலோ சகல மக்­க­ளி­ன­தும் வேண­வாக்­க­ளுக்­கும் காது கொடுத்­துக் கேட்­கும் நிலமை அந்த வேட்­பா­ள­ருக்கு ஏற்­ப­டும்.

இப்­பொ­ழுது, கோத்­த­பாய ராஜ­பக்ச தமிழ் மக்­கள் நம்­ப­வேண்­டும் என்று சொல்­கின்­றார். அவர் தற்­போது தேர்­த­லுக்­காக தமிழ் மக்­களை அணுக முற்­ப­டு­கின்­றார். என்­னு­டன் பேச்சு நடத்த பல தட­வை­கள் தூது விட்­டி­ருக்­கின்­றார். அரச தலை­வ­ராக அவர் வர­வி­ரும்­பு­கின்­றார். அதற்­காக தமிழ் அர­சி­யல் கட்­சித் தலை­வர்­களை சந்­திக்க விரும்­பும் அவ­ரது நிலைப்­பாடு தவ­றா­னது அல்ல.

தமிழ் மக்­க­ளி­ன­தும், முஸ்­லிம் மக்­க­ளி­ன­தும் வாக்­கு­கள் இல்­லா­விட்­டால் இந்த நாட்­டில் ஒரு­வர் அரச தலை­வ­ராக வர முடி­யாது என்ற வர­லாற்­றுப் பாடத்­தின் கார­ண­மா­கத்­தான் அரச தலை­வர் முறைமை இருக்­க­வேண்­டும் என்று கூறி­னேன். ஆனால் அரச தலை­வ­ருக்­கான அதி­கா­ரங்­கள் குறைக்­கப்­ப­ட­வேண்­டும். மக்­க­ளால் தெரிவு செய்­யப்­ப­டும் அரச தலை­வர் முறைமை இருக்­க­வேண்­டும்.

இந்­த­வொரு கசப்­பான – 52 நாள் அனு­ப­வத்­துக்­காக – மைத்­தி­ரி­பா­ல­வின் நட­வ­டிக்­கைக்­காக திடீர் திடீர் என்று கொள்­கை­களை மாற்­றிக் கொள்­ளும் ஆள் நானல்ல. இது ஒரு சம்­ப­வம். அவ்­வ­ள­வு­தான். ஒரு சம்­ப­வத்தை வைத்­துக் கொண்டு கொள்­கையை மாற்ற விரும்­ப­வில்லை. இது சம்­பந்­த­மா­கப் பேச்சு நடத்­த­லாம்.

You might also like