அர­சனை நம்பி புரு­ச­னை­யும்- கைவி­டப் போகின்­றோம்!!

மோத­க­மும் பல்­லுக் கொழுக்­கட்­டை­யும் வெவ்­வேறு பெய­ரே­யொ­ழிய இரண்டினதும் உள்ளீடு ஒன்­று­தான். மோத­கத்­தைப் பிடிக்­க­லாம். கொழுக்­கட்­டை­யைக் கடிக்­க­லாம். பார்த்­தால் இரண்­டுமே வடிவு. இரண்­டுமே இனிப்பு. ஆனால் இரண்­டுமே ஒரே இலக்­கை­யு­டை­யவை. எப்­படி?.

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும், சிறி லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யும் இரண்டு கட்­சி­க­ளே­யன்றி பெளத்த மத முதன்மை கொண்­ட­வை­யா­கும். பெளத்த நாமென்­ப­தி­லு­ம் அதற்கே முன்­னு­ரிமை என்­ப­தி­லும் பொது­வா­கவே சிங்­கள மக்­கள் ஆணித்­த­ர­மா­கவே செயற்­ப­டு­கின்­ற­னர். ஏனைய மதங்­கள் இரண்­டா­வது பட்­ச­மா­கவே பார்க்­கப்­ப­டு­கி­றன என்று பொருள் கொள்ளப்படுகிறது.

இந்­த­நி­லை­யில் புதிய அர­ச­மைப்பு என்ன மாதி­ரி­யான குழப்­பங்­க­ளைத் தரப்­போ­கி­றது என்­ப­தைத் தற்­போது நடை­பெ­றும் சம்­ப­வங்­க­ளால் உண­ர­மு­டி­கி­றது. இரண்­டும் கெட்­டான் என்­ப­தா­கவே உணர முடி­கி­றது. சொல்­வது ஒன்று. செய்­வது மூன்று. இது தர்­ம­மாக இருக்க முடி­யாது. ஒற்­றை­யாட்சி, ஒரு­மித்த ஆட்சி, ஏக்­கி­ய­ராஜ்­ஜிய, ஒன்­று­பட்ட தேசம் இந்த சொற்­க­ளுக்­குள்­ளேயே பெருங் குழப்­பம் நீடிக்­கி­றது.

பிர­கா­க­ரன் ஒரு தூர நோக்­கு­டைய தீர்க்­க­த­ரி­சியே. இலங்­கை­யில் மூன்­றில் இரண்டு பெரும்­பான்­மை­யி­னர் இந்­தப் புதிய அர­சி­யல் அமைப்­புக்கு ஒரு­போ­தும் ஆத­ரவு பெற்­றுத்­த­ரார். ரணில் தரப்­பி­ன­ரும் மகிந்த தரப்­பி­ன­ரும் முழுக்க முழுக்க ஆத­ரவு தரு­வார்­கள் என்று எவ­ருமே நம்­பி­னால் அதைப்­போல முட்­டாள்­த­னம் வேறொன்­றுமே இருக்­க­ மு­டி­யாது. மகிந்த தரப்­பி­னர் ஒரு­போ­தும் புதிய அர­சமைப்புக்கு ஆத­ரவு நல்­க­மாட்­டார்­கள். இது­தொ­டர்­பாக மகா­நா­யக்க தேரர்­க­ளும் மேற்­படி இரு சாரர்க்­கும் பக்­க­ப­ல­மாக இருக்­கி­றார்­கள். தென்­ப­குதி மக்­க­ளில் பெரும்­பான்­மை­யா­ன­வர்­கள் அமைப்புத் தொடர்­பா­கக் குழம்­பி­யே­ யுள்­ளார்­கள். இந்த நிலை­யில் நாடு பிள­வு­ப­டு­வ­தா­கப் பரப்­பு­ரை­யும் நடை­பெ­று­கி­றது.

தமி­ழர்­க­ளுக்­கும் ஏனைய சிறு­பான்­மை­யி­ன­ருக்­கும் உரி­மை­கள் இனி­மேல் எட்­டாக் கனி­க­ளா­கவே இருக்­கப் போகி­றன. மகா நாயக்­கர்­க­ளின் ஆலோ­ச­னை­கள் அரச மைப்புக்குச் சாத­க­மாக இருக்க வாய்ப்­பில்லை. எனவே அர­ச­னும் புரு­ஷ­னும் கைவி­டும் நிலை­யில் ஏமா­றும் ஒரு இன­மாக தமி­ழி­னம் அகப்­பட்­டுக்­கொண்­டது. இனி என்ன? அவ்­வ­ள­வு­தான். கே.எஸ்.சிவ­ஞா­ன­ராஜா

You might also like