அரசியல்வாதிகளின் பசப்பு வார்த்தைகள்- இனியும் எடுபடுமா?

வடக்­கில் வாழ்­கின்ற தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னை­கள் தொடர்­பா­கக் கூட்­ட­மைப்பு வாயே திறப்­ப­தில்லை என்ற பொருள்­ப­டத் தெரி­வித்­தி­ருக்­கி­றார் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான நாமல் ராஜ­பக்ச. அது­வும் யாழ்ப்­பா­ணத்­தில் வைத்து அவர் இதைக் கூறி­யி­ருக்­கி­றார்.

கூட்­ட­மைப்பை விமர்­சிப்­ப­தைத் தற்­போது அனை­வ­ருமே ஒரு நாக­ரி­க­மா­கக் கரு­து­கின்­ற­னர் என்று கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் கூறி­யதை மெய்ப்­பிக்­கும் வகை­யில் நாம­லின் கருத்து அமைந்­துள்­ளது. அவர் வடக்­குத் தமி­ழர்­க­ளுக்­குப் பிரச்­சி­னை­கள் உள்­ளதை ஏற்­றுக்­கொண்­டமை பெரிய விட­ய­மா­கும். ஏனென்­றால் பொது மக்­க­ளில் எவ­ருக்­குமே பாதிப்பு ஏற்­ப­டாத வகை­யில் போரை நடத்தி வெற்­றி­கண்ட மகிந்­த­வின் புதல்­வ­னல்­லவா அவர்.

தேர்­தல் அக்­கறை
தேர்­தல்­கள் நெருங்­கி­வ­ரும் நிலை­யில் தமிழ் மக்­கள் மீது பல­ரும் அக்­கறை காட்­டு­வது இயல்­பான தொன்றே. ஆனால் தமி­ழர்­கள் மீது அக்­கறை காட்­டு­வ­தா­கக் காட்­டிக்­கொண்டு தமி­ழர்­க­ளின் ஏக பிர­தி­நி­தி­க­ளாக விளங்­கும் கூட்­ட­மைப்பை விமர்­சிப்­பதை ஏற்­றுக்­கொள்ள முடி­ ய­ வில்லை.

அர­சி­யல்­வா­தி­கள் பல­ரும் வடக்­கு– கி­ழக்­கில் வாழ்­கின்ற சிறு­பான்­மை­யின மக்­க­ளின் வாக்­கு­க­ளைப் பெறு­வ­தற்­காக வலை வீச ஆரம்­பித்­து­விட்­டார்­கள். குறிப்­பாக அரச தலை­வர் தேர்­த­லில் உறு­தி­யான வெற்­றி­யைப் பெற­வேண்­டு­மென்­றால் சிறு­பான்­மை­யி­ன­ரின் வாக்­கு­கள் மிக­வும் அவ­சி­ய­மா­னவை என்­பதை இவர்­கள் நன்கு அறிந்து கொண்­ட­தால், இவ்­வாறு நடந்து கொள்­கின்றார். கடந்த அரச தலை­வர் தேர்­த­லி­லும் இது­தான் நடந்­துள்­ளது.

உரிமை இருக்­கி­றது
நாமல் ராஜ­பக்­ச­வுக்கு வட­ப­கு­திக்கு வரு­வ­தற்கு முழு உரி­மை­யும் உள்­ளது. தமது கட்சி அலு­வ­ல­கத்­தைத் திறந்து வைப்­ப­தை­யும் எவ­ருமே தடுத்து நிறுத்­தி­விடமுடி­யாது. மக்­க­ளி்ன் பிரச்­சி­னை­க­ளைக் கேட்­ட­றிந்து அவற்­றுக்­குத் தீர்வு காண­வும் அவர் முயற்­சிக்க முடி­யும். இதற்­கும் மேலாக அங்கு வாழ்­கின்ற மக்­க­ளி­டம் வாக்­கு­க­ளைச் சேக­ரிப்­ப­தற்­கான பரப்­பு­ரை­க­ளை­யும் அவ­ரால் மேற்­கொள்ளமுடி­யும். ஆனால் மக்­க­ளைக் குழப்பிவிட்டு அவ­ரால் வேடிக்கை பார்ப்­பதை எந்த வகை­யி­லும் அனு­ம­திக்க முடி­யாது.

தமது தந்­தை­யா­ரின் கோரிக்­கை­க­ளை­யேற்று கூட்­ட­மைப்பு நடந்­து­கொள்­ளா­மையை மன­தில் வைத்தே நாமல் கூட்­ட­மைப்பை விமர்ச்­சித்­தி­ ருந்­ததை நாம் நினை­வில்­கொள்ள வேண்­டும். அரச தலை­வ­ரால் அர­சி­யல் குழப்­ப­மொன்று ஏற்­ப­டுத்­தப்­பட்­ட­போது கூட்­ட­மைப்­பின் ஆத­ரவு அதற்கு இருந்­தி­ருக்­கு­மா­னால் மகிந்­தவே இன்று தலைமை அமைச்­சர் பொறுப்பை வகித்­துக் கொண்­டி­ருப்­பார்.

அது­மட்­டு­மல்­லாது அண்­மை­யில் மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யால் அர­சுக்கு எதி­ரா­கக் கொண்டு வரப்­பட்ட நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தின்­போது கூட்­ட­மைப்பு அதற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­தி­ருந்­தால் அரசு கவிழ்ந்­தி­ருக்­கும். மகிந்த மைத்­திரி தலை­மை­யி­லான சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யின் ஆத­ர­வு­டன் புதிய அரசை அமைப்­ப­தற்­கான வாய்ப்­பும் இந்­தி­ருக்­கும். ஆனால் கூட்­ட­மைப்பு தீர்­மா­னத்­துக்கு எதி­ராக வாக்­க­ளித்­த­தால் மகிந்­த­வின் அந்த விருப்­ப­மும் நிறை­வே­ற­வில்லை.

இத­னால் கூட்­ட­மைப்­பின் மீது மிகக் கடு­மை­யான கோபத்­தில் மகிந்த தரப்பு காணப்­ப­டு­கின்­றது. அதை­வெ­ளிப்­ப­டுத்­தும் முக­மா­கவே நாமல் கருத்து வெளி­யிட்­டுள்­ளார்.

பேசா­தி­ருக்­கும் பழக்­கம்
கூட்­ட­மைப்­பின் தலை­வர்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் எவர் தம்­மீது விமர்­ச­னங்­களை முன்­வைத்­தா­லும் அதற்­குப் பதி­லடி கொடுக்­கா­மல் விடு­வதை ஒரு­வ­ழக்­க­மா­கவே கொண்­டுள்­ள­னர். எல்­லாம் மக்­க­ளுக்­குத் தெரி­யு­மென அவர்­கள் நினைக்­கி­றார்­களோ தெரி­ய­வில்லை. ஆனால் அடி­மேல் அடி அடித்­தால் அம்­மி­யும் நக­ரும் என்­ப­தற்கு ஏற்ப காலப்­போக்­கில் மக்­க­ளின் மனங்­க­ளில் மாற்­றம் ஏற்­ப­டா­தென நாம் எதிர்­பார்க்கமுடி­யாது. கூட்­ட­மைப்­பின் தலை­வர்­க­ளும் இதைப் புரிந்­து­கொள்ள வேண்­டும்.

அரச தலை­வர் தேர்­த­லுக்கு முன்­பாக மாகாண சபைத் தேர்­தல்­கள் இடம்­பெ­று­மென ஒரு தக­வல் தெரி­விக்­கின்­றது. இது உண்­மை­யாக இருந்­தால் வட­ப­குதி திரு­வி­ழாக் கோலமே பூணப்­போ­கின்­றது. மாகாண சபை­க­ளுக்கு எவ்­வித அதி­கா­ர­மும் இல்­லை­யெ­னக் கூறி­ய­வர்­கள் பத­வி­க­ளைப் பெறு­வ­தற்­கான போட்­டி­க­ளில் ஈடு­ப­டு­வ­தைக் கண்­கு­ளி­ரப் பார்க்க முடி­யும்.

பத­விப் போராட்­டம்
மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்­வைக் காண்­ப­தற்­காக மாற்று அணி­யைக் கட்­டி­யெ­ழுப்­பு­வோ­மெ­னக் கூறி­ய­வர்­கள், மக்­களை மறந்து தமது பத­வி­க­ளுக்­கான போராட்­டங்­க­ளில் ஈடு­ப­டப்­போ­கின்­ற­னர்.

வடக்கு மாகாண சபை­யின் நிதி­யின் பெரும்­ப­குதி முத­ல­மைச்­சர் உள்­ளிட்ட ஏனைய உறுப்­பி­னர்­க­ளின் செல­வுக்கே பெரு­ம­ள­வில் செல­வி­டப்­பட்­டது. இன்று மக்­க­ளைப் பற்­றிப் பேசு­கின்ற முன்­னால் முத­ல­ மைச்­சர் தமது வச­தி­க­ளில் எவ்­வித குறை­பா­டும் இல்­லா­மல் பார்த்­துக்­கொண்­டார். தாம் பதவி வில­கு­கின்ற இறுதி நேரத்­தில் கோடிக் கணக்­கான ரூபா பெறு­ம­தி­யான அதி­ந­வீன சொகுசு வாக­னத்­தைத் தமக்கு வழங்­கு­மாறு கேட்­டுக்­கொண்ட பெரு­ம­க­னார் அவர்.

ஏனைய மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளும் மக்­களை விடத் தமக்கே முன்­னு­ரிமை வழங்­கிச் செயற்­பட்­ட­னர். தற்­போது மாகாண சபை அமை­வது தொடர்­பாக மக்­கள் எவ்­வித அக்­க­றை­யும் காட்­டு­வ­தில்லை. முத­லா­வது மாகாண சபை­யின்­செ­யற்­பா­டு­கள் அந்த அள­வுக்கு அவர்­க­ளி­டம் வெறுப்பை ஏற்­ப­டுத்தி விட்­டது.

தலைக்கு மேலே ஆயி­ரம் பிரச்­சி­னை­களை வைத்­துக்­கொண்டு அல்­லா­டிக்­கொண்­டி­ருக்­கின்ற வட­ப­குதி மக்­கள் இனி­யும் அர­சி­யல்­வா­தி­க­ளின் பசப்பு வார்த்­தை­க­ளுக்கு மளங்­கி­விட மாட்­டார்­கள். அர­சி­யல்­வா­தி­கள் இதைப்­பு­ரிந்­து­கொண்­டால் அதுவே போது­மா­னது.

You might also like