அலங்கார நுழைவாயில் வளைவு திறப்பு!!

வவுனியா சிதம்பரபுரம் திருப்பழனி முருகன் ஆலயத்தின் அலங்கார நுழைவாயில் வளைவு இன்று திறக்கப்பட்டது.

ஆலயத்தலைவர் மாதவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஜி. ரி. லிங்கநாதன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ். சந்திரகுமார், கோமரசன்குளம் மாகாவித்தியாலய அதிபர், சிதம்பரபுரம் பிரதேச வைத்தியசாலை வைத்தியர், பிரதேச இந்துக்கலாச்சார உத்தியோகத்தர், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் நிதி ஒதுக்கீட்டில் வளைவு அமைக்கப்பட்டுள்ளது.

You might also like