அளம்பில் புனித அந்தோனியார் ஆலயம் திறப்பு!!

முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புனித அந்தோனியார் ஆலயம் இன்று திறக்கப்பட்டது.

யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் புதிய ஆலயத்தை ஆசீர்வதித்து திறந்து வைத்து, பங்குமக்கள், குருக்களுடன் சேர்ந்து திருப்பலி ஒப்புக்கொடுத்தார்.

திருப்பலியைத் தொடர்ந்து ஆலயக் கட்டுமானப் பணியில் ஈடுபட்டவர்கள் கெளரவிக்கப்பட்டனர்.

You might also like