அழ­கி­ரி-­க­ரு­ணா­நிதி- ஸ்ராலின்

பாகம்-31

கரு­ணா­நி­தி­யின் இரண்­டா­வ­து­ ம­கன் மு.க.அழ­கிரி. 1950ஆம் ஆண்டு ஜன­வ­ரி­மா­தம் கரு­ணா­நி­தி­யின் இரண்­டா­வ­து­ ம­னை­வி­யா­ன­ த­யா­ளு­ அம்­மா­ளுக்­கு­ தி­ருக்­கு­வ­ளை­யில் மூத்­த­ ம­க­னா­கப் பிறந்­த­வர் அழகிரி.முர­சொ­லிப் பத்­தி­ரி­கை­யின் மது­ரைப் பதிப்­பைக் க­வ­னிப்­ப­தற்­காக 1980களில் மது­ரை­யில் குடி­யே­றி­னார். அப்­போ­து­ அ­வர் கட்­சி­யில் இருக்­க­வில்லை. பின்­னர்,தி.மு.கவின் தென் மண்­ட­ல­ அ­மைப்­புச் செய­லா­ளர்,மது­ரை­ நா­டா­ளு­மன்­றத் தொகு­தி­ உ­றுப்­பி­னர்,மத்­தி­ய­ இ­ர­சா­ய­னம் மற்­றும் உரத்­து­றை­ அ­மைச்­சர் ஆகி­ய­ ப­த­வி­க­ளை­ வ­கித்­தி­ருக்­கி­றார்.

2009ஆம் ஆண்டில் மன்­மோ­கன் சிங் கின் அர­சில் மத்­தி­ய­ இ­ர­சா­ய­னம் மற்­றும் உரத்­து­றை­ அ­மைச்­ச­ரா­க­ப் ப­த­வி­வ­கித்­த­வர். கரு­ணா­நிதி இருக்­கும்­போ­தே­ கட்­சி­யின் தலைமைப் ப­த­விக்­கா­க­ அ­ழ­கி­ரி­யும், ஸ்ராலி­னும் எதி­ரும் புதி­ரு­மா­க­ச் செ­யற் பட்­டு­ வந்­த­னர்.கட்­சி­யின் தென் மண்­ட­ல­ அ­மைப்­புச் செய­லா­ளா­ராக இருந்­து,­ ப­ல­சர்ச்­சை­க­ளுக்­கு­ ஆ­ளா­ன­வர். கரு­ணாநி­தி­யின் காலத்­தி­லே­யே­கட்­சி­யை­ விட்­டு­ நீக்­கப்­பட்­ட­வர். கரு­ணா­நிதி இறந்­த­பின்­னர் “கரு­ணா­நி­தி­யின் உண்­மை­யா­ன­ வி­சு­வா­சி­கள் தன் பக்­கம்­தான் இருக்­கி­றார்­க­ள்”் என்­று­ சொல்­லித் ­தற்­போ­து­ ச­ல­ச­லப்­பை ­ஏற்­ப­டுத்­தி­ யி­ருக்­கி­றார்.

2003ஆம் ஆண்­டு­ மே­ மா­தம் தி.மு.கவைச் சேர்ந்­த­முன்­னாள் அமைச்­ச­ரும், மு.க. ஸ்டாலி­னின் தீவி­ர­ ஆ­த­ர­வா­ள­ரா­க­வும் அறி­யப்­பட்­ட தா.கிருட்­டி­ணன் மது­ரை­யில் வெட்­டிக்­கொல்­லப்­பட்­டார். அந்­த­க் கொ­லை­ வ­ழக்­கில் மு.க. அழ­கி­ரி­ கை­து­ செய்­யப்­பட்­டு­ சி­றை­யில் அடைக்­கப்­பட்­டார். ஆனால், அழ­கி­ரி ­கை­து­செய்­யப்­பட்­ட­ போ­து மு.க.ஸ்ரா லின் அதைக் கண்­டித்­தார்.பின்­னர் கிருட்­டி­ணன் கொலை­ வ­ழக்­கி­லி­ருந்­து­ அ­ழ­கி­ரி­ வி­டு ­விக்­கப்­பட்­டார்.

மு.க. அழ­கி­ரி­, தென்­மண்­ட­லத்­தில் தன்­னிச்சை­யாக தி.மு.க செ­யற்­பா­டு­க­ளைக்­ கட்­டுப்­ப­டுத்­தித் ­த­ன­து ­செ­யற்­பா­டு­க­ளை­ முன்­னெ­டுத்­து­ வந்­தார். அவ­ர­து ­ வி­மர்­ச­னத்துக்கு­ரி­ய­ செ­யற்பா­டு­கள் குறித்­து­ கட்­சித் தலை­வர் கரு­ணா­நி­தி­யி­டம் கேட்­ட­போது, “மு.க. அழ­கி­ரி ­கட்­சி­யிலா இருக்­கி­றார்? அவர் மீது­ எப்­ப­டி­ ந­ட­வ­டிக்­கை­ எ­டுக்­க­மு­டி­யும்?” எனக் கேள்­வி­யெ­ழுப்­பி­னார்.

பின்னர் அழ­கி­ரி­யின் செயற்­பா­டு­க­ளால் தி.மு.க தேர்­த­லில் தோல்­வி­ய­டைந்­தது. அதன்­பி­றகு, கட்­சி­ நிர்­வா­கி­கள் எவ ரும் மு.க. அழ­கி­ரி­யு­டன் எந்­தத் தொடர்­பும் வைத்­துக்­கொள்­ளக்­கூ­டா­து­ எ­ன­க் கட்­சி­யின் பொதுச் செய­லா­ளர் அன்­ப­ழ­கன் அறிக்­கை­ வௌி­யிட்­டார்.

இதை­ய­டுத்­து­அ­ழ­கி­ரி­யின் ஆத­ர­வா­ளர்­கள் பேருந்­து­க­ளைக் கொளுத்­தி­க் க­ல­வ­ரத்­தில் ஈடு­பட்­ட­னர்.2002ஆம் ஆண்­டு­ ஆண்­டிப்­பட்­டி,திரு­மங்­க­லம் தொகு­தி்­க­ளுக்­கு­ ந­டந்த இடைத் தேர்­தல் வெற்­றி­க­ளால் கட்­சி­யில் இவ­ர­து ­செல்­வாக்­கு­ அ­தி­க­ரித்­தது. தி.மு.கவில் இணைத்­துக் கொள்­ளப்­பட்­டார்.

2013ஆம் ஆண்­டில் ஐக்­கி­ய­ முற்­போக்­குக் கூட்­ட­ணி­யில் இருந்­து தி.மு.க. வௌியே­றி­ய­போ­து­, அ­ழ­கி­ரி ­அ­தில் ­தி­ருப்­தி­ய­டைந்­த­தா­கக் கூறப்­பட்­டது. பின்­னர், 2014ஆம் ஆண்­டு­த் தொடக்கத்தில் இருந்­தே­ மீண்­டும் அழ­கி­ரிக்­கும் ஸ்ராலிக்­கும் உ­ர­சல்­கள் ஆரம்­ப­மா­கின.

இந்­த­நி­லை­யில் அ­ழ­கி­ரி­ மீ­து­ப­ல­ குற்­றச்­சாட்­டு­க­ளைச் சுமத்­தி­ய­ பொ­துச் செய­லா­ளர் க. அன்­ப­ழ­கன், அவர் கட்­சி­யி­லி­ருந்து இடை­நீக்­கம் செய்­யப்­ப­டு­வ­தா­க­ அ­றி­வித்­தார். இதன் பின்­னர் கரு­ணா­நி­திக்­கும் அழ­கி­ரிக்­கும் இடை­யி­லா­ன­மோ­தல் முற்­றி­யது. அதைப் பற்­றி­ச் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கரு­ணா­நி­தி­யே­ குறிப்பிட் டார்.

“விடி­யற்­கா­லை­ என்­னு­டை­ய­ வீட்­டிற்­குள்­ளே ­அ­வர் நுழைந்து, படுக்­கை­யில் இருந்­த­என்­னி­டம் ஸ்ராலி­னைப் பற்­றிப் குற்றஞ்சாட்டி,விரும்­பத்­த­கா­த­ வெ­றுக்­கத்­தக்­க­ வார்த்­தை­க­ளை­யெல்­லாம் மள­ம­ள­வெ­னப் பேசி,என்­னைக் கொதிப்­ப­டை­ய­வைத்­தார். ஸ்ராலின் இன்­னும் மூன்று – நான்­கு­ மா­தங்­க­ளுக்­குள் செத்­து­வி­டு­வார் என­ உ­ரத்­த­ கு­ர­லி­லே­ என்­னி­டத்­தில் சொன்­னார்.

எந்­தத் தகப்­ப­னா­லும், இது­ போன்­ற­ வார்த்­தை­க­ளைத் தாங்­கிக்­கொள்­ள­ மு­டி­யு­மென்­று ­எவ­ரும் கரு­த­மு­டி­யாது” என்­று­ கு­றிப்­பிட் டார். தன­து­ம­கன் பற்­றி­க் க­ரு­ணா­நி­தி ­தெ­ரி­வித்­த­ க­ருத்­தால் தி.மு.கவில் பலத்­த­ச­ல­ச­லப்­பு­ஏற்­பட்­டது. இதற்­குப் பின்­னர் அ­ழ­கி­ரி­ கட்­சி­யி­லி­ருந்­து­ நி­ரந்­த­ர­மா­க­ நீக்­கப்­பட்­டார்.

இது கரு­ணா­நி­தி­ வி­ரும்­பிச் செய்­த­து­ அல்ல, கரு­ணா­நி­தி­யின் முது­மை­யைப் பயன்­ப­டுத்­தி மு.க. ஸ்ராலின் செயல்­பட்­டார் என்­று ­குற்­றம்­சாட்­டு­கி­றார்­கள் அ­ழ­கி­ரி­யின் ஆத­ர­வா­ளர்­கள்.

தி.மு.க. தலை­வர் கரு­ணா­நி­தி­ சாவடைந்து அ­வ­ர­து­உ­டல் நல்­ல­டக்­கம் செய்­யப்­பட்­ட­ த­ரு­ணத்­தில், அவர் மீது­ போர்த்­தப்­பட்­டி­ருந்­த­தே­சி­யக் கொடியை மூத்­த­ ம­க­னா­னமு.க. அழ­கி­ரி­யி­டம் கொடுக்காது மு.க. ஸ்ராலி­னி­ட­மே­ கொ­டுத்­தார்­கள்.
இந்­த­ நி­லை­யில் க­ரு­ணா­நி­தி­யின் சமா­தி­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­யமு.க. அழ­கிரி, கரு­ணா­நி­தி­யின் உண்­மை­யா­ன­தொண்­டர்­கள் தன் பக்­கமே இருப்­ப­தாகக் கூறி­னார்.தற்­போ­து ­க­லை­ஞர் பெய­ரில் புதுக்­கட்­சி­ ஆ­ரம்­பிக்­கும் எண்­ணத்­தில் உள்­ளார்.

(தொட­ரும்)

You might also like