side Add

அவிழ்க்கப்படாத முடிச்சுக்கள்!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு இறங்கு துறைக்கு அண்மையிலுள்ள காவலரண் ஒன்றில் இரண்டு பொலிசார் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். அந்தப் பொலிசாரில் ஒருவர் தமிழர், ஒருவர் சிங்களவர். ஒருவர் நெஞ்சிலும் தலையிலும் ஏற்பட்ட காயங்கள் காரணமாகவும், மற்றவர் தலையில் மட்டும் ஏற்பட்ட காயம் காரணமாகவும் சாவடைந்துள்ளதாக இறப்பு விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் எதைக் காட்டுகின்றது என்றால், கொல்லப்பட்டவர்கள் ஓடித்தப்பவோ, எதிர்ப்பைக் காட்டவோ முற்படாத நிலையில், அவர்கள் குறி தவறாமல் சுடப்பட்டிருக்கக் கூடும் என்பதையே. மிகவும் அமைதியான முறையில் எவ்வித பதற்றமுமின்றி நிதானமாகவே இந்தக் கொலைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கக் கூடும் எனவும் கருதுவதற்கு இடமுண்டு…

சர­ண­டைந்த முன்­னாள் போராளி
வவு­ண­தீ­வில் கொலையா­கி­யி­ருந்த இரண்டு பொலி­சா­ரும் இரவு வேளை­யில் கொல்­லப்­பட்­டி­ருக்­கி­றார்­கள். காலை­யி­லேயே இந்­தச் சம்­ப­வம் தெரி­ய­வந்­தி­ருக்­கி­றது. இந்த நிலை­யில் மட்­டக்­க­ளப்­பைப் பிறப்­பி­ட­மா­கக் கொண்டு கிளி­நொச்சி -– வட்­டக்­கச்­சி­யில் வசித்து வரும் முன்­னாள் போராளி ஒரு­வர் இந்­தக் கொலை இடம்­பெற்ற மறு நாள் கிளி­நொச்­சிப் பொலி­ஸா­ரி­டம் சர­ண­டைந்­துள்­ளார். பின்பு அவர் குற்­றப்­பு­ல­னாய் வுப் பிரி­வி­ன­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளார்.

அவர் மாவீ­ரர் நிகழ்­வில் கலந்து கொள்­வ­தற்­கா­கக் கடந்த மாதம் மட்­டக்­க­ளப்­புக்­குச் சென்­றி­ருந்­தார் என­வும் மாவீ­ரர் நாள் ஏற்­பா­டு­களை அவ­ரும் அவ­ரு­டைய நண்­பர்­க­ளும் மேற்­கொண்­டி­ருந்­த­போது பொலி­ஸா­ருக்­கும் அவ­ருக்­கு­மி­டையே முறு­கல் நிலை ஏற்­பட்­ட­தா­க­வும் சில ஊட­கங்­கள் செய்தி வெளி­யிட்­டன. அத்­தோடு மாவீரர் தின ஏற்பாட்டின் பின்னர் அவ­ரு­டைய கைபேசி உரை­யா­டல்­கள் செவி­ம­டுக்­கப்­பட்டு சந்­தே­கத்­தின்­பே­ரில் அவரை அணுக முற்­பட்­ட­போது அவரே தானாக முன்­வந்து சர­ண­டைந்­த­தா­க­வும் தக­வல்­கள் பரி­வி­யுள்­ளன.

மட்­டக்­க­ளப்­பி­லுள்ள இவ­ரு­டைய நண்­பர் ஒரு­வர் மாவீ­ரர் தின ஏற்­பா­டு­க­ளைச் செய்­தி­ருந்­த­தா­க­வும், அவ­ரு­டன் இவர் தொடர்­பி­லி­ருந்­த­தா­க­வும், பொலி­ஸா­ரின் சந்­தே­கம் இவர் பக்­கம் திரும்­பு­வது தெரிந்­த­தும் அவர் தானா­கவே கிளி­நொச்­சிப் பொலிஸ் நிலை­யத்­துக்­குச் சென்­ற­தா­க­வும், அப்­போது கைது செய்­யப்­பட்­ட­தா­க­வும் என்­றும் கதை­கள் உலா­வு­கின்­றன. பின்­னர், இந்த விட­யம் தொடர்­பா­கப் பொலி­ஸா­ரால் பலர் விசா­ர­ணை­க­ளுக்கு அழைக்­கப்­பட்டு விடு­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்­கள். அவர்­க­ளில் பலர் முன்­னாள் போரா­ளி­கள் என்­றும் தெரிய வந்­துள்­ளது.

பொட்­டம்­மா­னைத் தொடர்­பு­ப­டுத்­தி­னர் கருணா
இந்­தக் கொலை­க­ளு­டன் தொடர்­பு­பட்­ட­வ­ரா­கக் கருணா அம்­மான் என அழைக்­கப்­ப­டும் விநா­ய­க­மூர்த்தி முர­ளி­த­ர­னைச் சிலர் குற்­றஞ் சாட்­டி­யி­ருந்­த­னர். அவர் உட­ன­டி­யா­கவே அதை மறுத்ததுடன் விடு­த­லைப்­பு­லி­க­ளின் புல­னாய் வுத்­து­றைப் பொறுப்­பா­ளர் பொட்டு அம்­மான் இன்­ன­மும் உயி­ரு­டன் இருப்­ப­தா­க­வும், அவர் நோர்­வே­யில் வசிப்­ப­தா­க­வும் அவ­ரின் ஏற்­பாட்­டில் இந்­தக் கொலை இடம்­பெற்­ற­தெ­ன­வும் கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருந்­தார். பொலி­சார் கொல்­லப்­பட்ட விட­யத்­தில் முன்­னாள் போரா­ளி­கள் கைதா­கி­யி­ருப்­ப­தும், கருணா அம்­மா­னால், விடு­த­லைப் புலி­க­ளின் புல­னாய்­வுத் துறைப் பொறுப்­பா­ளர் பொட்டு அம்­மான் தொடர்­பு­ப­டுத்­தப்­பட்­ட­தும் பல சக்­தி­க­ளும் இந்த விட­யத்தை வேறு திசை­யில் அணுக முற்­பட்­டன. அவ்­வ­கை­யில், உத­யன்­கம்­மன்­பில, விமல் வீர­வன்ச ஆகி­யோர் மாவீ­ரர் நாள் கடைப்­பி­டிக்­கப்­பட்­ட­தற்­கும் இந்­தக் கொலைச் சம்­ப­வத்­துக்­கும் முடிச்­சுப் போட்­டுப் புலி­கள் மீள் எழுச்சி பெறு­கின்­ற­னர் என்ற பரப்­பு­ரை­யைக் கட்­ட­விழ்த்து விட்­ட­னர்.

முன்­னாள் போரா­ளி­க­ளைக் குறி­வைத்­துள்ள பொலி­சார்
இப்­ப­டி­யான சம­யம்­பார்த்து வெளி­வ­ரு­கின்ற மேற் கூறிய இனவாதப் பரப்­பு­ரை­கள் பரவ விடப்­ப­டும் அதே­வே­ளை­யில் இன்­னொரு புறம் பொலி­சாரின் நட­வ­டிக்­கைகள் மக்­கள் மத்­தி­யில் பெரும் பதற்ற நிலையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. இது தொடர்­பாக முன்­னாள் போரா­ளி­கள் விசா­ர­ணைக்­குட்­படுத்­தப்­பட்­டு­வ­ரு­வது, மேலும் சிலர் தேடப்­ப­டு­வது என்­பன மக்­க­ளி­டம் குறிப்­பாக முன்­னாள் போரா­ளி­கள் மத்­தி­யி­லும், போரா­ளி­கள் குடும்­பங்­கள் மத்­தி­யி­லும் பெரும் அச்ச நிலை­யைத் தோற்­று­வித்­துள்­ளன. அப்­ப­டி­யான ஓர் அச்ச நிலைக்கு வெளிப்­ப­டை­யில் இவை கார­ணங்­க­ளாக இருந்­த­போ­தும் ஏற்­க­னவே இடம்­பெற்ற சில சம்­ப­வங்­க­ளும், வெளிவந்த தக­வல்­க­ளும் இவை­யெல்­லாம் உள்­நோக்­கத்­து­டன் கூடிய திட்­ட­மிட்ட விட­யங்­களோ என எண்ணுவதற்கு வழி சமைக்கின்றன.

நாமல்­கு­மார வெளி­யிட்ட
தக­வல்­க­ளில் கவ­னம்­வேண்­டும்
ஊழ­லுக்­கெ­தி­ரான அமைப்­பின் தலை­வர் எனக் கூறப்­ப­டும் நாமல்­கு­மார என்­ப­வர் ஓர் ஊடா­க சந்­திப்­பின்­போது அதிர்ச்சி தரும் தக­வல்­களை வெளி­யிட்­டி­ருந்­தார். அதா­வது அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வை­யும் முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்­ச­வை­யும் கொலை செய்­யச் சதி நடப்­ப­தா­க­வும் அது பயங்­க­ர­வா­தப் புல­னாய்­வுப் பிரி­வுக்­குப் பொறுப்­பா­கவுள்ள நாலந்த டிசில்வா தலை­மை­யில் திட்­ட­மி­டப்­ப­டு­வ­தா­க­வும் தெரி­வித்­தார். அவர் வெளி­யிட்ட தக­வல்­க­ளில் முக்­கி­ய­மாக நாம் அவ­தா­னிக்க வேண்­டிய விட­யம் அரச தலை­வர் கிழக்கு மாகா­ணத்­துக்­குச் செல்­லும்போது அங்கு வைத்து அவ­ரைக் கொலை செய்து விட்டு, அந்­தப் பழியை ஒரு முன்­னாள் போரா­ளி­யின் தலை­யில் போட்டு அவ­ரைக் கைது செய்­ய­வுள்­ள­தாக நாமல் குமார தெரி­வித்­தி­ருந்­த­துவே. இந்­தக் கைதைப் பயங்­க­ர­வா­தத் தடைப்­பி­ரி­வின் பிர­திப் பொலிஸ் மா அதி­பர் செய்­யும்போது அவர் ஏற்­க­னவே அதற்­கான ஆதா­ரங்­க­ளைத் தயார் செய்து வைத்திருப்பார் என்­ப­தில் சந்­தே­க­மில்லை.

அதை­யிட்டு முன்­னாள் போரா­ளி­கள் பலர் வேட்­டை­யா­டப்­ப­ட­வும் தமிழ் மக்­கள் மீதான ஒடுக்­கு­மு­றை­களை மேற்­கொள்­ள­வும் கூடும் என்­பது சொல்­லித் தெரிய வேண்­டி­ய­தில்லை. வவு­ண­தீ­வுக் கொலை­யும் அது தொடர்­பாக முன்­னாள் போரா­ளி­கள் கைது செய்­யப்­பட்­ட­மை­யும் இப்­ப­டி­யான ஒரு சதி நட­வ­டிக்­கை­யாக இருக்­குமோ எனத் தமிழ் மக்­கள் அச்­சப்­ப­டு­வ­தில் ஆச்­ச­ரி­யப்­பட எது­வ­மில்லை.

புலி­க­ளின் போர்­வை­யில்
நடக்­கின்ற சதி­கள்
மாவீ­ரர்­தின நிகழ்­வு­க­ளைப் பொலி­சார் குழப்­பு­வ­தற்கு முயற்­சித்­த­மை­யும் அதை­ய­டுத்த இடம்­பெற்ற கொலை­க­ளும் மேற்­படி அச்­சத்தை மேலும் வலுப்­ப­டுத்­தும் வகை­யி­லேயே அமைந்­துள்­ளன. சில மாதங்­களுக்கு முன்பு முல்­லைத்­தீவு மாவட்­டத்­தி­லுள்ள ஒட்­டி­சுட்­டா­னில் வைத்து விடு­த­லைப்­பு­லி­க­ளின் சீரு­டை­க­ளு­ட­னும், புலி முத்­திரை பதிக்­கப்­பட்ட ஆயு­தங்­க­ளு­ட­னும் மூவர் பொலி­சா­ரால் கைது செய்­யப்­பட்­ட­னர். அதில் ஒரு­வர் முன்­னாள் விடு­த­லைப்­பு­லி­கள் அமைப்­பில் முக்­கிய போரா­ளி­யெ­ன­வும் தெரி­விக்­கப்­பட்­டது.
எனி­னும் தொடர்ந்து மேற்­கொண்ட விசா­ர­ணை­க­ளில் அந்த நபர் இரா­ணு­வப் புல­னாய்­வுப் பிரி­வால் மாதாந்த சம்­ப­ளம் வழங்­கப்­பட்­டுப் பணிக்கு அமர்த்­தப்­பட்­ட­வர் என­வும் அவர் புலி­க­ளின் இயக்­கத்­துக்­குள் ஊடு­ரு­விப் புல­னாய்­வுப் பணி­களை மேற்­கொண்­ட­வர் என்­ப­து தெரிய வந்­தது.
அதா­வது இந்­தச் சம்­ப­வம் புலி­கள் மீளெ­ழுச்சி பெறு­கின்­ற­னர் என்ற தோற்­றப்­பாட்டை ஏற்­ப­டுத்தி அதன் அடிப்­ப­டை­யில் ஒடுக்­கு­முறை நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வும் முன்­னாள் போரா­ளி­க­ளைக் கைது செய்­ய­வும் மேற்­கொள்­ளப்­பட்ட இரா­ணு­வப் புல­னாய்­வுப் பிரி­வி­ன­ரின் சதியே. பொலி­ஸா­ரின் கைது நட­வ­டிக்­கைகள் கார­ண­மா­கத் தற்­செ­ய­லாக வெளிப்­பட்டு விட்­டது.

கமால் குண­ரத்­தின வெளி­யிட்ட கண்­ட­னம்
இந்­தச் சம்­ப­வம் தொடர்­பா­கக் கருத்து வெளி­யிட்ட 153ஆம் படைப்­பி­ரி­வின் கட்­ட­ளைத் தள­ப­தி­யாக இறு­திப் போரில் பணி­யாற்­றி­ய­வ­ரும், நந்­திக் கட­லுக்­கான பாதை என்ற நூலை எழு­தி­ய­வ­ரு­மான கமால் குண­ரத்­தின, ‘‘பொலி­ஸா­ரின் முட்­டாள்­த­ன­மான நட­வ­டிக்­கை­யால், இரா­ணு­வப் புல­னாய்­வுப் பிரி­சி­ன­ரின் பணி­கள் சீர் குலைக்­கப்­ப­டு­ கின்­றன’’ எனக் கண்­ட­னம் வெளி­யிட்­டி­ருந்­தார்.

இரா­ணு­வப் புல­னாய்­வுப் பிரி­வி­னர், பயங்­க­ர­வா­தத் தடுப்­புப் பிரி­வின் பிர­திப் பொலிஸ்மா அதி­பர் ஆகி­யோர் சில உள்­நோக்­கங்­க­ளின் அடிப்­ப­டை­யில் சில பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு விட்டு அவற்றை முன்­னாள் போரா­ளி­கள் மேற்­கொண்­ட­தா­கக் காண்­பிக்­கும் வகை­யில் செயற்­பட்­டுள்­ள­னர் என்­பது ஏற்­க­னவே தெரிய வந்­துள்­ளது. இப்­ப­டி­யான நிலை­யில் வவு­ண­தீ­வில் பொலி­ஸார் கொலை செய்­யப்­பட்ட சம்­ப­வத்­தின் பின்­ன­ணி­யில் இவர்களின் சதி வேலைகள் ஏதாவது இருக்கக் கூடுமோ என்ற சந்­தே­கம் எழு­வது தவிர்க்­கப்­பட முடி­யா­த­தா­கும்.

மாவீ­ரர் நாள் தமிழ் மக்­க­ளால் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­வதை அரச தரப்போ, அரச படை­களோ விரும்­பு­வ­ தில்லை. ஒவ்­வொரு வரு­ட­மும் அதைத் தடுப்­ப­தற்­குப் பல முயற்­சி­களை இந்­தத் தரப்­பி­னர் முன்­னெ­டுப்­ப­துண்டு. 2013ஆம் ஆண்டு யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்­தில் மாவீ­ரர் நாளன்று சுட­ரேற்­றி­ய­மைக்­காக மூன்று மாண­வர்­கள் கைது செய்ப்­பட்­டுத் தடுத்து வைக்­கப்­பட்டு மறு­வாழ்வு அனுப்­பப்­பட்­டமை உட்­ப­டத் தொடர்ந்து பல சம்­ப­வங்­கள் இடம்­பெற்று வந்­தன. இந்த முறை­யும் மாவீ­ரர் நிகழ்­வு­க­ளைத் தடுப்­ப­தற்­குப் பொலி­ஸார் நீதி­ மன்­றங்­களை நாடி­யி­ருந்­த­னர்.

எனவே இப்­ப­டி­யான சம்­ப­வங்­க­ளின் தொடர்ச்­சி­யாக இந்­தக் கொலை நட­வ­டிக்­கை­க­ளும் இருக்­க­லமோ என்ற அச்­சப்­பா­டு­கள் மக்கள் மத்­தி­யில் உரு­வா­கி­யுள்­ள­மையே அத­வா­னிக்க முடி­கி­றது. இப்­ப­டி­யான நட­வ­டிக்­கை­கள் தொடர்­பாக நேர்­மை­யான முறை­யில் விசாரணைகள் நடத்தப்பட்டு உண்­மை­கள் கண்டுபிடிக்­கப்­பட்டு முடிச்­சு­ கள் அவிழ்க்­கப்­ப­டாதவரை தமிழ் மக்­கள் இந்த நாட்­டில் நிம்­ம­தி­யாக வாழ்­வது சாத்­தி­யக் குறை­வா­னதே.

You might also like