ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தில் வரலட்சுமி!

0 206

கடந்த வருடம் அதிக படம் நடித்த நடிகைகளில் வரலட்சுமி சரத்குமாரும் ஒருவர். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு எனப் பல மொழிகளில் நடித்து வருகிறார். சோலோ கதாநாயகியாக ‘டேனி’, ‘வெல்வட் நகரம்’, ராஜபார்வை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

மறுபுறம், பிக்பாஸ் ஐஸ்வர்யா, சுபிக்‌ஷா , ஆஷ்னா ஜவேரியுடன் கன்னித்தீவு, விமலுடன் ‘கன்னிராசி’, ஜெய்யுடன் ‘நீயா 2’, வைபவுடன் ‘காட்டேரி’, தெலுங்கில் சந்தீப் கிஷணுடன் ‘தெனாலி ராமன் பி.ஏ.பி.எல்’, கன்னடத்தில் ‘ரணம்’ எனப் பல படங்களில் மற்ற நடிகர்களுடன் இணைந்து நாயகியாகவும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் வீரக்குமார் இயக்கத்தில் தஷி இசையமைக்க கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில் ‘சேஸிங்’ என்ற படத்தில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். வரலட்சுமியின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து முழுக்க முழுக்க மலேசியாவில் எடுக்கப்படும் இந்தப் படத்தின் முதல் சுவரொட்டி சித்திரை திருநாள் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வௌியாகியுள்ளது. ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக இந்தப் படம் உருவாகவிருக்கிறது.

You might also like