ஆதரவு கோரினார் தவிசாளர்- “ கப் சிப்பான“ உறுப்பினர்கள்!!

நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்படட பகுதிகளில் கட்டப்படும் சட்ட விரோத கட்டடங்களை இடிக்க அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தருவீர்களா என தவிசாளர் கேட்ட்ட போதும் சபை உறுப்பினர்கள் பின்னடித்தனர்.

நல்லூர் பிரதேச சபையின் அமர்வு சபா மண்டபத்தில் நேற்று தவிசாளர் தியாகமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது.

இந்த அமர்வில் சபை உறுப்பினர்கள் சட்ட விரோதமாக கட்டடங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு முன்வைத்தனர். இதன் போது கருத்து தெரிவிக்கும் போதே தவிசாளர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தார்.அவர் அங்கு தெரிவித்ததாவது,

சபையினை பொறுப்பேற்ற சில நாள்களிலேயே நாம் ஒரு தீர்மானம் எடுத்திருந்தோம். அதனை ஊடகங்கள் வாயிலாகவும் அறிவித்திருந்தோம்.ஆனால் உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாக தீர்மானம் எடுங்கள இன்றிலிருந்து கட்டப்படும் சட்ட விரோத கட்டடங்களை இடித்தளிப்பது என முடிவு எடுக்கப்பட்டதால், நான் அதனை நடைமுறைப்படுத்த தயார். நீங்கள் ஒத்துழைப்பீர்களா என சபையில் கேடடார். அப்போது அனைத்து உறுப்பினர்களும் பின்வாங்கினர்.

பின்னர் கருத்து தெரிவித்த சபை செயலாளர்,

ஒரு பிரதேசத்தில் சட்ட விரோத கட்டடம் கட்டப்படுகின்றது என்றால் அதனை அதிகாரிகள் மட்டும்தான் நிறுத்த முடியும் என்றில்லை. அந்தந்த வட்டார உறுப்பினர்கள் தடுத்து நிறுத்த முடியும்.

கட்ட அனுமதி தொடர்பில் பூரண விளக்கங்களை உறுப்பினர்களுக்கு வழங்க நாம் வீதி அபிவிருத்தி அதிகார சபை,வீதி அபிவிருத்தி திணைக்களம்,சுகாதார மருத்துவ பணிமனை அதிகாரிகள்,சுற்றாடல் அதிகார சபை ஆகியோரை இணைத்து விளக்கமளிக்க யோசித்துள்ளோம்.

மேலும் நானும் எனது உத்தியோகத்தர்களும் சட்ட விரோத கட்டடங்களை அகற்றத் தயாராக உள்ளோம்.எ மது சபையில் உள்ள ஜேசிபி வாகனம் கொண்டு கட்டடங்களை அகற்ற நான் எப்போதும் தயார். நீங்கள் தீர்க்கமான தீர்மானம் ஒன்றை எடுங்கள். நான் நடவடிக்கை எடுகின்றேன் என்றார். எனினும் உறுப்பினர்கள் அனைவரும் பின்வாங்கியதால் அந்த விடயம் கைவிடப்பட்ட்து.

You might also like