ஆதிபராசக்தியின் அருள்பரப்பும்- நவராத்திரி விரதம்!!

அம்பிகை­யின் அருளை பெறு­வ­தற்குப் பல விர­தங்­கள் கடைப்­பி­டிக்­கப்­பெற்­றா­லும் அவற்­றுள் நவ­ராத்­திரி விர­தமே மிக­வும் சிறப்­பா­னது என ஆகம நூல்­கள் கூறு­கின்­றன.

அந்­த­வ­கை­யிலே ஆண்டு தோறும் புரட்­டாதி மாதத்­தில் 9 நாள்­கள் அன்னை பரா­சக்­தியை வீடு­க­ளி­லும், பாட­சா­லை­க­ளி­லும், ஆல­யங்­க­ளி­லும் பூஜை செய்து வழி­பாடு இயற்­றும் சாரதா நவ­ராத்­திரி விழா இன்று செவ்­வாய்க்கிழமை ஆரம்­ப­மா­கின்­றது.

முக்­கு­ணங்­க­ளுக்­கும் மூல­மான சர்வ லோக நாயகி, தமோ குண சஞ்­சா­ரி­யான ஸ்ரீதுர்க்கா பர­மேஸ்­வ­ரி­யா­க­வும், ராஜோ குண சொரூ­பி­யான ஸ்ரீ மகா­லட்­சு­மி­யா­க­வும், சாத்­வீ­கக் குண சொரூ­பி­யான ஸ்ரீ சரஸ்­வ­தி­யா­க­வும், மூன்று அம்­ச­ங்களாக எமக்குத் தோற்­ற­ம­ளிப்­ப­து­டன் அந்த மூன்று அம்­சங்­க­ளும் மேலும் பல அம்­சங்­க­ளாக தோற்­ற­ம­ளிக்­கின்­றன.

முக்­கு­ணங்­க­ளுக்­கும் மூல­மான சர்வ லோக நாய­கியை ஒன்­பது நாள்­க­ளும் பூஜிக்­கும்­போது, முதல் மூன்று நாள்­கள் தமோ குண சஞ்­சா­ரி­யான ஸ்ரீது­ர்க்கா பர­மேஸ்­வரி வீரத்­தை­யும், தைரி­யத்­தை­யும் வேண்­டி­யும், அடுத்த மூன்று நாள்­கள் ராஜோ குண சொரூ­பி­யான ஸ்ரீ மகா­லட்­சு­மியைச் சகல செல்­வங்­க­ளை­ வேண்­டி­யும், கடைசி மூன்று நாள்­கள் சாத்­வீ­கக் குண சொரூ­பி­யான ஸ்ரீ சரஸ்­வ­தியை கல்வி, அறிவு, சகல கலை ஞானங்­களை வேண்­டி­யும் வணங்­கு­கின்­றோம்.

இந்தப் புண்­ணி­ய­கா­ல­மா­னது ஒன்­பது தினங்­க­ளைக் கொண்­டது.
அத­னா­லேயே நவ­ராத்­திரி என்­னும் நாமம் பெற்று விளங்­கு­கின்­றது. ஒன்­பது நாள்­க­ளி­லும் லோக­மா­தா­வா­கிய பரா­சக்தி ஒன்­பது வடி­வங்­க­ளில் பூஜிக்­கப்­பெ­று­ கின்­றாள்.

அலை­ம­கள், மலை­ம­கள், கலை­ம­கள் என முப்­பெ­ரும் தேவி­ய­ரை­யும் துதித்து வழி­பட்டு. இந்த உலக வாழ்கை சிறப்­பாக அமைய முக்­கி­ய­மான கல்வி, செல்­வம், வெற்றி என்­ப­வற்றை இறை­வி­யி­டம் வேண்டி இந்­துக்­கள் இந்தப் புனித நவ­ராத்­திரி விர­தத்தைக் கடைப்­பி­டித்­து­வ­ரு­கின்­ற­னர்.

அதா­வது வீரம், செல்­வம், கல்வி என அனைத்­தும் வாழ்­வில் நிறைந்­தி­ருக்க வேண்­டு­மா­யின். அவற்றை அரு­ளும் நவ­ராத்­திரி விர­தம் கடைப்­பி­டிக்­கப்­பட வேண்­டும் என ஆகம நூல்­கள் கூறு­கின்­றன.

வாழ்க்­கை­யின் எல்லாத் தேவை­க­ளை­யும் அடைவதற்குப் பணம், பொருள் வேண்­டும். இதற்­காக மகா­லட்­சுமி தேவியை வணங்­கு­கி­றோம். பெற்ற பணத்தை பாது­காப்பதற்கு மனவலிமை வேண்­டும் அதற்­காகத் துர்க்காதேவியை வழி­ப­டு­கி­றோம். பணத்தை நல்­வ­ழி­யில் பய­னள்ள காரி­யங்­க­ளுக்குப் பயன்­ப­டுத்துவதற்குக் கல்­வி­ய­றிவு வேண்­டும். அதற்குச் சரஸ்­வ­தித் தாயை வணங்­கு­கி­றோம்.

இத்­தகு சிறப்­பு­டைய நவ­ராத்­திரி விழாவை ஆல­யங்­க­ளி­லும், பாட­சா­லை­க­ளி­லும், பணி­பு­ரி­யும் அலு­வ­கங்­க­ளி­லும், தொழிற்­சா­லை­க­ளி­லும், இல்­லங்­க­ளி­லும் கும்­பம் வைத்து, அதில் ஆதி பரா­சக்­தியை ஆவா­க­ணம் செய்து வழி­பாடு இயற்­று­வது வழக்­க­மாக இருந்­து­வ­ரு­கி­றது.

கொலு­வைத்து ஒன்­பது நாள்கள் பூஜை செய்து வீட்­டுக்கு வரும் அனை­வ­ருக்­கும் தாம்­பூ­லம், தட்­சணை, நைவே­தி­யப் பொருள் கொடுக்க வேண்­டும். ஒன்­பது நாளும் பூஜை செய்ய இய­லா­த­வர்­கள் கடைசி மூன்று நாள்­க­ளான, ‘சப்­தமி, அஷ்­டமி, நவமி’ தினங்­க­ளில் பூஜை செய்­ய­லாம். இது­வும் செய்ய முடி­யா­த­வர்­கள் அஷ்­டமி நவ­மி­யில் பூஜை செய்து விஜய தச­மி­யில் முடிக்­க­லாம்.

பத்­தா­வது தின­மான விஜ­ய­த­சமி ஆல­யங்­க­ளில் வெற்­றித்­தி­ன­மா­கக் கொண்­டா­டப்­பெ­று­கின்­றது. அவா­வது, விஜய தசமி தினம் என்­பது அம்­பிகை தவ வலி­மை­யி­னால் பிர­ம­தே­வ­னி­டம் பெற்ற வரத்­தி­னால் அகங்­கா­ரம் கொண்டு தேவர்­க­ளை­யும், முனி­வர்­க­ளை­யும் சித்­தி­ர­வதை செய்து கொடு­மைப்­ப­டுத்தி வந்த மகி­ஷா­சு­ரனை ‘துர்க்கா தேவி’­யாக அவ­தா­ரம் எடுத்து சங்­கா­ரம் செய்த வெற்­றித் திரு­நா­ளாக கொண்­டா­டப்­பெ­று­கின்­றது.

ஆக,ஆயி­ரம் இதழ்­க­ளை­யு­டைய தாம­ரை­யில், இரண்டு ­கை­க­ளி­லும் தாமரை தாங்கி அப­யம், வர­தம் என்ற முத்­தி­ரை­க­ளு­டன் வீற்­றி­ருந்து அருள்­பா­லிக்­கும் ஆதி­ப­ரா­சத்­தி­யின் அருளை நவ­ராத்­திரி காலத்­தில் அடி­ய­வர்­க­ளாக வேண்­டிப் பணி­வோம். நல்­ல­வர்­க­ளாக வாழ்ந்து நன்­மக்­கள்­பேற்­று­டன் இந்த மண்­ணிலே மனி­தப் பிறவி எடுத்­த­தன் பயனை அனு­ப­வித்து வாழ்­வாங்கு வாழ்­வோ­மாக.

தனம் தரும் கல்­வி­த­ரும்
ஒரு நாளும் தளர்­வ­றியா
மனம் தரும் தெய்வ வடி­வம் தரும் நெஞ்­சில் வஞ்­சம் இல்லா
இனம் தரும் நல்­லன எல்­லாம் தரும் அன்­பர் என்­ப­வர்க்கே
கனம் தரும் பூங்­கு­ழ­லாள்
அபி­ராமி கடைக் கண்­களே!

 

You might also like