ஆள்­க­ளைக் கடத்தி கப்­பம் கோரிய குழு மடக்கிப் பிடிப்பு!!

வவு­னி­யா­வைச் சேர்ந்த குடும்­பத் தலை­வரை முல்­லைத்­தீ­வில் வைத்­துக் கடத்­திப் பணம் பெறும் முயற்­சி­யில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்­டில் பிரான்­ஸைச் சேர்ந்­த­வர் உள்­ளிட்ட 4 பேரைக் கைது செய்­துள்­ள­தாக முல்­லைத்­தீ­வுப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

ச.நாகேந்­தி­ரன் (வயது–-42) என்­ப­வரே கடத்­தப்­பட்­டி­ருந்­தார். அவ­ரின் மனைவி மேற்­கொண்ட முறைப்­பாட்­டுக்கு அமைய, தேடு­தல் நடத்­திய பொலி­ஸார் அவரை மீட்­ட­து­டன், கடத்­தி­ய­வர்­கள் என்று கூறப்­ப­டும் 4 பேரைக் கைது செய்­துள்­ள­னர்.சம்­ப­வம் தொடர்­பில் பொலி­ஸார் தெரி­வித்­த­தா­வது:

முல்­லைத்­தீ­வில் விடு­த­லைப் புலி­க­ளின் தங்­கம் புதைத்து வைக்­கப்­பட்­டுள்­ளது என்­றும் அத­னைத் தோண்டி எடுக்க வரு­மா­றும், வவு­னி­யா­வைச் சேர்ந்த குடும்­பத் தலை­வரை கடந்த முத­லாம் திகதி சிறிய ரக வாக­னத்­தில் சந்­தேக நபர்­கள் 4 பேரும் அழைத்து வந்­துள்­ள­னர். அவரை முள்­ளி­வாய்க்­கா­லில் வீடு ஒன்­றில் அடைத்து வைத்­துள்­ள­னர்.

பின்­னர் சாவ­கச்­சே­ரி­யில் உள்ள வீட்­டுக்கு கொண்டு வந்து அடைத்து வைத்­துள்­ள­னர். கடத்­திக் கொண்டு வரப்­பட்­ட­வ­ரின் மனை­விக்கு அலை­பேசி ஊடாக அழைப்பு எடுத்து பணம் பறிக்­கும் முயற்­சி­யில் ஈடு­பட்­டுள்­ள­னர். கடத்­தப்­பட்­ட­வ­ரின் மனைவி பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­துள்­ளார்.

இத­னை­ய­டுத்து பிரான்­சில் வசித்து வரும், சாவ­கச்­சே­ரி­யைச் சேர்ந்த சுந்­த­ர­லிங்­கம் சிவ­ரஞ்­சி­தன் என்­ப­வர் தலை­மை­யி­லான குழு­வி­னரை சந்­தே­கத்­தில் கைது செய்­துள்­ளோம். அவர்­களை நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தி­ய­போது எதிர்­வ­ரும் 20ஆம் திகதி வரை­யில் விளக்­க ­ம­றி­ய­லில் வைக்க நீதி­வான் உத்­த­ர­விட்­டார், என்று குறிப்­பிட்­ட­னர்.

இதே­வேளை, இந்­தச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய மேலும் 3 பேரைத் தேடி வரு­வ­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

You might also like