இதுவே தொடரும்….?

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட அர­சி­யல் குழப்­பம் தற்­போது ஓர­ள­வுக்­குத் தணிந்து செல்­வ­தா­கவே கருத முடி­கின்­றது. ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யின் ஆட்சி மீத­முள்ள காலத்­தை­யும் கடந்து முடிக்­கப்­போ­வ­ தற்­கான அறி­கு­றி­கள் தென்­ப­டு­கின்­றன. மீத­முள்ள அந்­தக் காலம் எப்­படி நக­ரப்­போ­கின்­றது என்று எவ­ருக்­கும் சொல்­லித் தெரி­ய­வேண்­டி­ய­தில்லை.

ஆனால், இந்­தக் குழப்­பத்­தி­லி­ருந்­தும் அதன் தெளி­வி­லி­ருந்­தும் பல உண்­மை­கள் மக்­க­ளுக்கு வெளிப்­பட்­டி­ருக்­கின்­றன. முன்­னாள் அரச தலை­வ­ரான மகிந்த ராஜ­பக்­ச­வுக்கு இருக்­கின்ற அர­சி­யல் நுழை­வி­லுள்ள அவா, ராஜ­பக்ச குடும்­பம் அர­சி­யல் நுழை­வுக்­காக முன்­னெ­ டுத்­தி­ருந்த பேரம் பேசல்­க­ளும், அவை எழுப்­பிய ஜன­நா­ய­கம் குறித்த கேள்­வி­க­ளும், மைத்­தி­ரி­பால சிறி­சேன என்­கின்ற நம்­பிக்கை நட்­சத்­தி­ரத்­தின் போலித்­த­னம், மகிந்த – மைத்­திரி உற­ வின் நிலைப்­பாடு மற்­றும் ரணில் விக்­கி­ர­ ம­சிங்க, மகிந்­த­வுக்­குண்­டான பன்­னாட்டு ஆத­ர­வுத் தளம், அந்த ஆத­ர­வுத் தளம் கொழும்பு அர­சி­ய­லில் செல்­வாக்­குத் செலுத்­தும் வித­மும் சம நேரத்­தில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு என்­கிற சிறு­பான்­மைக் கட்சி பிரதி பலிக்­கின்ற மக்­கள் மீதான கரி­ச­னை­யில் பன்­னா­டு­க­ளின் ஊடாட்­டம் எனப் பல விட­யங்­கள் தெளி­வு­பட்­டி­ருக்­கின்­றன.

மகிந்­த­வின் ஓயாத முயற்சி
தன்­னு­டைய இரண்­டா­வது பத­விக்­கா­லம் முடி­வ­டை­யா­மல் இருக்­கும் பட்­சத்­தில் இலங்கை அர­ச­மைப்­பில் இல்­லாத, மூன்­றா­வது தட­வை­யா­க­வும் அரச தலை­வ­ராக ஆகு­வ­தற்­கான முயற்­சி­யில் ஈடு­பட்டு, இரண்­டா­வது பத­விக்­கா­லச் சுகத்­தை­யும் அனு­ப­விக்க முடி­யா­மல் ஏமாற்­றத்­து­டன் தோல்வி கண்­டி­ருந்­த­வர்­தான் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச. இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வை வழங்­காத அவர், போரை முடி­வுக்­குக் கொண்டு வந்­த­வர் என்ற மகு­டத்­து­டன் ஆட்­சி­யில் தொடர்ந்­தி­ருந்­தா­லும் போர் முடி­வுக்­குக் கொண்டு வரப்­பட்­ட­பின்­னர்­கூட இனப் பிரச்­சினை, சிறு­பான்­மை­யி­ன­ரின் அர­சி­யல் அபி­லா­சை­க­ளுக்­குத் தீர்வு பெற்­றுக் கொடுப்­ப­தற்­குத் தவ­றி­யி­ருந்­தார். இத­னால் சிறு­பான்­மை­யி­னர் மத்­தி­யில் இரட்­டிப்பு வெறுப்­புக்கு ஆளா­கி­யி­ருந்­தார். அவ­ரு­டைய குடும்ப ஆட்­சி­யா­லும், அந்த ஆட்­சிக்­குள் நிகழ்ந்த ஊழல், மோச­டி­க­ளா­லும் குறிப்­பிட்­ட­ளவு பெரும்­பான்மை மக்­கள்­கூட அவர் மீதான நம்­பிக்­கையை இழந்­தி­ருந்­த­னர்.

இத­னால் தேர்­த­லில் தோற்­க­டிக்­கப்­பட்­டார் அவர் என்­பது வர­லாறு. ஆனா­லும் இலங்­கை­யின் தலைமை அமைச்­ச­ரா­க­வும், அரச தலை­வ­ரா­க­வும் இருந்த அவ­ரு­டைய அர­சி­யல் ஈர்ப்பு இன்­ன­மும் குறைந்­தி­ருக்­க­வில்லை. அர­சி­யல் நுழை­வில் அவர் காட்­டு­கின்ற தீவி­ரத்தை எடுத்­துக்­காட்­டு­வ­தா­கவே அண்­மைக்­கா­லச் சம்­ப­வத்­தி­லி­ருந்து அவர் பற்­றிய மதிப்­பீடு இருக்­கி­றது. இத­னால் மகிந்த ராஜ­பக்ச ஓயப்­போ­வ­தில்லை என்­பதை இந்த விட­யத்­தி­லி­ருந்து மக்­கள் உணர்ந்து கொண்­டுள்­ள­னர்.

மைத்­தி­ரி­பா­ல­வின் உண்மை முகம்

மகிந்த எதிர்ப்­புக் கோசங்­களை முன்­னி­றுத்­தித் தேர்­த­லில் குதித்­தி­ருந்த மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டத்­தில் உண்­டா­கி­யி­ருந்த மாற்­றத்­தை­யும் மக்கள் உணர்ந்­தி­ருக்­கின்­ற­னர். தேர்­த­லில் வெற்றி பெற்ற பின்­னர் அடுத்த தடவை அரச தலை­வர் தேர்­த­லில் தான் போட்­டி­யி­டப்­போ­வ­தில்லை என்­றும் கூறி­யி­ருந்­தார் அவர். கூட்­டாட்­சி­ யாக ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யு­டன் அர­ச­மைத்த அவர் அவை எல்­லா­வற்­றி­லும் இருந்து தவறி நடந்­த­தையே நடந்து முடிந்த சம்­ப­வங்கள் உணர்த்­து­கின்­றன. அத்­து­டன் கூட்­டாட்­சிக்­குள் இருந்த தன்­னு­டைய போலி முகத்­தை­யும் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார் மைத்­தி­ரி­பால சிறி­சேன.
மீத­முள்ள ஆட்சியும் மக்­க­ளும்

கொழும்பு அர­சி­ய­லில் கடந்த தசாப்­தத்­தைக் கைப்­பற்­றி­யி­ருந்த மகிந்த ராஜ­பக்ச, மைத்­தி­ரி­பால சிறி­சேன, ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகிய சிங்­க­ளத் தலை­வர்­க­ளால் சிறு­பான்­மை­யி­ன­ ருக்­கான எந்­த­வொரு தீர்­வும் கிடைத்­தி­ருக்­க­ வில்லை என்­பது வெளிப்­ப­டை­யா­னது. மக்­கள் தன்­னெ­ழுச்சி கொள்­ளு­ம­ள­வுக்கு நிலமை மாறி வந்­துள்­ளதே தவிர, அர­சு­கள் எதை­யும் தாமாக முன்­வந்து மக்­க­ளுக்கு ஏற்­ப­டுத்­திக் கொடுத்­தி­ருக்­க­வில்லை. அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வால் ஏற்­பட்­டி­ருந்த அர­சி­யல் குழப்­பத் துக்­குப் பின்­னர் அதே கூட்­ட­ர­சின் ஆட்சி மீத­முள்ள காலப்­ப­குதி முழு­தும் நீடித்­தா­லும் அது இந்­தப் பிளவு அல்­லது குழப்ப நிலை­யின் பிர­தி­ப­லிப்­பு­ட­னேயே தன்­னு­டைய காலம் முழு­வ­தை­யும் கடத்­தும் என்று எவ்­வித ஐயப்­பா­டு­க­ளும் இன்­றிச் சொல்­லிக் கொள்ள முடி­யும்.

ஐக்­கிய தேசிய முன்­ன­ணிக்­குக் கூட்­ட­மைப்பு வழங்­கிய ஆத­ர­வின் பின் சுமூ­க­மாக அர­சி­யல் நிலை அமை­யு­மா­யின், இனிக் கூட்­ட­ர­சுக்­குள் முளைக்­கின்ற புதிய புதிய இழு­ப­றி­க­ளு­ட­னேயே அது காலத்­தைக் கழிக்க முற்­ப­டும் என்­கின்ற எதிர்­பார்ப்­புக்­களே அதிக அள­வில் உள்­ளன. அந்த இழு­ப­றி­க­ளுக்கு மத்­தி­யில் தான் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு முன்­வைத்த சிறு­பான் மைத் தமி­ழர்­க­ளுக்­கான அர­சி­யல் உரி­மை­களும். இப்­போது போலவே இனித் தொட­ரும் காலத்­தி­லும் அவை ஓர் ஓரா­மாக வைக்­கப்­ப­டாது என்று நம்­பத்­தகுந்த அனைத்­துச் சாத்­தி­யங்­க­ளும் இருக்­கவே செய்­கின்­றன.

You might also like