இனி­யும் வேண்­டாமே பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டம்!!

0 19

பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­ட­மா­னது இலங்­கை­யில் மோச­மான மனித உரிமை மீறல்­க­ளுக்­குத் துணை­போ­யி­ருக்­கி­றது என்று சாடி­யி­ருக்­கின்­றது, அனைத்­து­வி­த­மான அநீ­தி­கள் மற்­றும் இன­வா­தங்­க­ளுக்கு எதி­ரான பன்­னாட்டு இயக்­கம். அதி­லும் குறிப்­பாக தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக இந்­தச் சட்­டம் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது என்­ப­தை­யும் அது குறிப்­பிட்­டி­ருக்­கின்­றது.

பயங்­க­ர­வா­தத் தடைச்ச ட்டத்­தின் ஊடா­கத் தன்­னிச்­சை­யான கைது­கள் மற்­றும் தடுத்து வைத்­தல்­கள் இடம்­பெற்­றுள்­ளன, சித்­தி­ர­வ­தை­கள் இடம்­பெற்­றுள்­ளன, சட்­டத்­த­ர­ணி­யின் துணை இன்­றிப் பாதிக்­கப்­பட்­ட­வ­ரின் ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லம் பெறப்­ப­டு­கின்­றது, இது அச்­சு­றுத்­த­லை­யும் சித்­தி­ர­வ­தை­யை­யும் அதி­க­ரிக்­கின்­றது என்­றும் அந்த இயக்­கம் தெளி­வு­ப­டுத்­தி­யுள்­ளது.

ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யில் 39ஆவது கூட்­டத் தொட­ரில் உரை­யாற்­றிய இயக்­கத்­தின் பேச்­சா­ளர் இத­னைத் தெரி­வித்­தி­ருக்­கி­றார். தன்­னிச்­சை­யா­கத் தடுத்து வைத்­தல் தொடர்­பான ஐக்­கிய நாடு­க­ளின் செயற்­குழு தனது இலங்­கைப் பய­ணம் தொடர்­பில் வெளி­யிட்ட அறிக்­கை­யின் மீது பேசும்­போதே இயக்­கத்­தின் பேச்­சா­ளர் அன்­டோனி கிர்­பட் இத­னைத் தெரி­வித்­தார்.

இலங்­கை­யில் பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டத்தை உட­ன­டி­யாக நீக்­க­வேண்­டும் என்று ஐ.நா. செயற்­குழு பரிந்­து­ரைத்­துள்­ளது. அதற்­குப் பதி­லா­கக் கொண்­டு­வ­ரப்­ப­டக்­கூ­டிய சட்­ட­மா­னது பன்­னாட்­டுத் தர­நி­ய­மங்­களை உறு­திப்­ப­டுத்­து­வ­தாக இருக்க வேண்­டும் என்­றும் அது வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

செயற்­கு­ழு­வின் இந்­தப் பரிந்­து­ரையை வர­வேற்­றுக் கருத்­துத் தெரி­விக்­கும்­போதே, அனைத்­து­வி­த­மான அநீ­தி­கள் மற்­றும் இன­வா­தங்­க­ளுக்கு எதி­ரான பன்­னாட்டு இயக்­கம், மிக மோச­மான மனித உரிமை மீறல்­க­ளுக்­குப் பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டம் துணை­போ­யி­ருக்­கி­றது என்­கிற தனது குற்­றச்­சாட்டை முன்­வைத்­தது.

தமி­ழர்­கள் தரப்­பி­லி­ருந்து மிக நீண்ட கால­மா­கவே இந்­தக் குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றது. இந்­தச் சட்­டத்­தால் தமி­ழர்­கள் பாதிக்­கப்­பட்­டார்­கள் என்­ப­தி­லும் பார்க்க, தமி­ழர்­களை இலக்கு வைத்­துத்­தான் இந்­தச் சட்­டமே கொண்­டு­வ­ரப்­பட்­டது என்­ப­து­தான் மிகச் சரி­யா­னது. போர் முடிந்து பல வரு­டங்­கள் கடந்த பின்­ன­ரும்­கூட பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டம் தமி­ழர்­க­ளுக்கு எதி­ரா­கத் தீவி­ர­மாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

பலர் இந்­தச் சட்­டத்­தின் கீழ் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். பொலி­ஸா­ருக்­குக் கட்­டுப்­பா­டற்ற அதி­கா­ரங்­களை வழங்­கும் இந்­தச் சட்­டம் போர்க் காலங்­க­ளி­லும் அதன் பின்­ன­ரும்­கூட மனி­தா­பி­மா­ன­மற்ற கடும் சித்­தி­ர­வ­தை­க­ளின் உற்­பத்­திக் கூ­டங்­க­ளுக்­கான அடிப்­ப­டை­யாக இருந்­துள்­ளது. இப்­போ­தும்­கூட இருக்­கின்­றது. இந்­தச் சட்­டத்­தின் கீழ் கைது செய்­யப்­பட்­ட­வர்­கள் கடு­மை­யான உடல், உள வதை­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்­ள­னர் என்­பதைப் பல மருத்­துவ ஆய்­வு­கள் உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன.

கிளர்ச்­சியை அடக்­கு­வது என்­கிற பெய­ரில் தமி­ழர்­க­ளைக் குறி­வைக்­கும் இந்­தச் சட்­டம் நீக்­கப்­ப­ட­வேண்­டும் என்­பது தமி­ழர்­க­ளின் நீண்ட நாள் கோரிக்கை. அத­னைச் செய்­வ­தாக வாக்­கு­று­தி­ய­ளித்து ஆட்­சிக்கு வந்த இன்­றைய அர­சு­கூட அதனை நிறை­வேற்­ற­வில்லை.

தற்­போது நடை­மு­றை­யில் உள்ள தீமை நிறைந்த பயங்­க­ர­வா­தத் தடைச்­சட்­டத்தை நீக்­கி ­விட்டு பன்­னாட்­டுத் தர­நி­ய­மங்­க­ளுக்கு ஏற்ற ஒரு சட்­டம் கொண்­டு­வ­ரப்­ப­டும் என்று அரசு உறு­தி­ய­ளித்­தது. அதன்­படி ஒரு சட்­ட­வ­ரை­வும் தயா­ரிக்­கப்­பட்டு நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைக்­கப்­பட்­டது.

ஆனால் அது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு உள்­ளிட்ட கட்­சி­க­ளின் கடு­மை­யான கண்­ட­னங்­க­ளுக்கு உள்­ளா­ன­தைத் தொடர்ந்து திருத்­தங்­க­ளுக்­காக ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. அது பற்றி இப்­போது மூச்­சுக்கூட இல்லை.

இந்த ஆட்­சி­யின் காலம் முடி­வ­டை­வ­தற்­குள் புதிய சட்­டம் நடை­மு­றைக்­குக் கொண்­டு­வ­ரப்­ப­டும் என்­ப­தற்­கான அறி­கு­றி­கள் எவை­யும் இல்லை. தான் அளித்த பல வாக்­கு­று­தி­களை இந்த அரசு நிறை­வேற்­றா­மல் விட்­ட­தைப் போலவே, இந்த விட­யத்­தை­யும் சுல­ப­மா­கக் கடந்து சென்­று­வி­டும் அபா­யம் இருக்­கின்­றது.

அப்­படி நடந்­து­வி­டா­மல் தடுப்­பது தமிழ் அர­சி­யல் கட்­சி­க­ளி­ன­தும், சிறு­பான்­மைக் கட்­சி­கள் அனைத்­தி­ன­தும் கட­மை­யா­கும். நடை­மு­றை­யில் இருக்­கும் பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டத்தை நீக்கி புதிய, ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய ஒரு சட்­டத்தை உட­ன­டி­யாக நடை­மு­றைக்­குக் கொண்­டு­ வ­ரு­வ­தற்­கான அழுத்­தத்தை அவை அர­சுக்­குக் கொடுக்­க­வேண்­டும். அர­சும் அதனை ஏற்­றுச் செயற்­ப­டு­வ­தற்கு முன்­வ­ர­வேண்­டும்.

You might also like