இனி­யா­வது விழிப்பு வருமா?

ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யில் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறை­வேற்­றப்­பட்ட 30/1 தீர்­மா­னம் கொழும்பு அர­சுக்­குப் பல பரிந்­து­ரை­களை முன்­வைத்­தது . அவற்­றில் உருப்­ப­டி­யான ஒன்­றா­கப் பார்க்­கப்­பட்­டது போர்க் குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பான விசா­ர­ணை­க­ளுக்­காக பன்னாட்டு நீதி­ப­தி­கள், வழக்­கு­ரை­ஞர்­கள், வழக்­குத் தொடு­நர்­க­ளை­யும் உள்­ள­டக்­கிய கலப்பு நீதி­மன்­றம் ஒன்றை அமைப்­ப­தற்­கான பரிந்­து­ரை­தான்.

போர்க்­குற்­றங்­கள் எனப்­ப­டும், இறு­திப் போரில் நடந்த மனித உரிமை மீறல்­கள் மற்­றும் மனித குலத்துக்கு எதி­ரான குற்­றங்­கள் தொடர்­பில் பன்­னாட்­டுக் குற்­ற­வி­யல் விசா­ரணை ஒன்றே தேவை என்று தமிழ் மக்­கள் வலி­யு­றுத்தி வந்த நிலை­யி­லும் அத்­த­கை­ய­தொரு விசா­ர­ணையை நடத்­து­வ­தற்­குக் கொழும்பு அரசு முற்­றாக மறுத்து வந்த நிலை­யி­லும் இந்­தக் கலப்பு நீதி­மன்­றப் பொறி­முறை பரிந்­து­ரைக்­கப்­பட்­டது.

கொழும்பு அர­சின் பங்­க­ளிப்­பு­ட­னான எந்­த­வொரு நீதி விசா­ர­ணை­யும் நீதி­யா­ன­தா­க­வும் சுயா­தீ­ன­மா­ன­தா­க­வும் இருக்­காது என்­கிற நம்­பிக்கை கார­ண­மாக இந்­தக் கலப்பு நீதி விசா­ர­ணை­யை­யும் தமிழ் மக்­கள் எதிர்த்து வந்­த­னர். ஆனால் பன்­னாட்டு அர­சி­யல் அழுத்­தத்­தில் இருந்து தப்­பு­வ­தற்­காக இந்­தக் கலப்பு நீதி­மன்ற விசா­ர­ணை­யைக் கொழும்பு ஏற்­றுக்­கொண்­டா­லும் , அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன அதனை உட­ன­டி­யா­கவே நிரா­க­ரித்­தார். அதற்­குப் பதி­லீ­டாக உள்­நாட்டு விசா­ரணை ஒன்றே முன்­னெ­டுக்­கப்­ப­டும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­தப் பிணக்கு வந்­த­போது அரச தலை­வரே இந்த விட­யத்­தில் எதிர்ப்­பாக இருக்­கி­றார் என்­றும் ரணில் தலை­மை­யி­லான அரசு இதற்­குச் சாத­க­மா­கவே இருக்­கின்­றது என்­றும் சொல்­லப்­பட்­டது. ஆனால், சிறிது காலத்­தி­லேயே இத்­த­கைய ஒரு பொறி­முறை இலங்கை போன்ற நாடு­க­ளுக்­குச் சாத்­தி­ய­மற்­றது என்று தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வும் வெளிப்­ப­டை­யா­கக் கூறி­விட்டு பொறுப்­புக்­கூற வேண்­டிய தனது கடப்­பாட்­டில் இருந்து மெல்ல நழு­விக்­கொண்­டார்.

அப்­ப­டி­யி­ருந்­த­போ­தும் ஐ.நா. தீர்­மா­னத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டி­யது கொழும்பு அர­சின் கடமை என்று கூறிக்­கொண்டே, ரணில் அர­சின் ஆட்­சிக் காலம் முழு­வ­தும் அதற்கு முண்­டு­கொ­டுத்­துக் கொண்டே இருந்­தது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு. இப்­போ­தும் கூட்­ட­மைப்­பின் முண்­டி­லேயே ஆட்சி நடந்­து­கொண்­டி­ருக்­கி­றது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புத் தனது ஆத­ரவை விலக்­கிக் கொண்­டால் உட­ன­டி­யா­கவே ஒரு பொதுத் தேர்­தலை நாடு எதிர்­கொண்­டாக வேண்­டும்.

அத்­த­கைய ஒரு பேரம் பேசும் சக்­தி­யைத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக் கொண்­டி­ருந்­த­போ­தும், ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யில் நேற்­று­முன்­தி­னம் பேசிய கொழும்பு அ ரசின் பிர­தி­நி­தி­யான அய­லு­றவு அமைச்­சர் மாரப்­பன, கலப்பு நீதி­மன்­றப் பொறி­மு­றையை நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யாது என்று திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­தி­ருக்­கி­றார்.

அரச தலை­வ­ருக்­கும் ரணில் தலை­மை­யி­லான ஆட்­சிக்­கும் இடை­யில் காணப்­பட்ட இணக்­கப்­பாட்­டின் அடிப்­ப­டை­யி­லேயே இந்த முடிவு ஐ.நாவில் அறி­விக்­கப்­பட்­டது. அதா­வது இந்த விட­யத்­தில் இது­வ­ரை­யில் கூறப்­பட்டு வந்­த­தைப் போல அரச தலை­வர் மட்­டுமே எதி­ரா­ன­வர் அல்­லர், ரணி­லும் அவ­ரது ஆட்­சி­யா­ளர்­க­ளும் அவ­ரு­டன் ஒத்­துப் போகின்­ற­வர்­களே என்­பது தெளி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

ஐ.நா. தீர்­மா­னத்­தில் இருந்த உருப்­ப­டி­யான ஒரு பரிந்­து­ரை­யை­யும் ஏற்க முடி­யாது என்று ஆட்­சி­யா­ளர்­கள் வெளி­யப்­ப­டை­யாக அறி­வித்­து­விட்ட பின்­ன­ரும் இந்த ஆட்­சிக்கு முண்டு கொடுத்து நிற்க வைத்­தி­ருப்­ப­தற்­கான கார­ணம் என்ன என்­பதை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு எப்­ப­டித் தெளி­வு­ப­டுத்­தப் போகின்­றது? கூட்­ட­மைப்­பின் கையறு நிலையை நன்கு புரிந்து வைத்­தி­ருப்­ப­தா­லும் தம்­மை­விட்டு எத்­த­கைய நிலை­யி­லும் கூட்­ட­மைப்பு வெளி­யே­றிச் செல்­லாது என்று நம்­பு­வ­தா­லுமே தெற்­கின் ஆட்­சி­யா­ளர்­கள் இவ்­வாறு நடந்­து­கொள்­கி­றார்­கள். கூட்­ட­மைப்பு இனி­யா­வது விழித்­துக்­கொள்­ளுமா?

You might also like