இன்­னும் எத்­தனை காலம்­தான் வதைக்­கப்­ போ­கி­றோம்?

தரம் ஐந்து புல­மைப் பரீட்­சைப் பெறு­பே­று­கள் வெளிவந்­து­விட்­டன. வெட்­டுப் புள்­ளி­க­ளுக்கு மேல் பெற்று வெற்­றி­பெற்­ற­வர்­க­ளாக அறி­விக்­கப்­பட்ட சுமார் 20 விழுக்­காடு சிறு­வர்­கள் கொண்­டாட்­டங்­க­ளி­லும், பெரும்­பான்­மை­யான ஏனைய மாண­வர்­கள் மன­வ­ருத்­தத்­தில் சேர்ந்­து­போ­யும் இருக்­கும் நேரம் இது. இப்­ப­டிப் பெரும்­பா­லான மாண­வர்­க­ளைத் தோற்­ற­வர்­க­ளாக மனச்­சோர்­வுக்கு உள்­ளாக்­கி­யி­ருக்­கும் இந்­தப் பரீட்­சையை இல்­லாது ஒழிக்­க­வேண்­டும் என்று எவ்­வ­ளவு கத்­தி­னா­லும் அர­சும் கல்­வி­யி­ய­லா­ளர்­க­ளும் ஏனோ அதைச் செவி­ம­டுக்­கி­றார்­கள் இல்லை.

இந்­தத் தடவை அறி­விக்­கப்­பட்­டுள்ள வெட்­டுப்­புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் சரா­ச­ரி­யாக ஒரு பாடத்­தில் 80 புள்­ளி­க­ளைப் பெற்ற பிள்­ளை­கள்­கூ­டத் தோல்­வி­ய­டைந்­த­வர்­க­ளாக அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்­கள். பாட­சாலை மட்­டப் பரீட்­சை­க­ளில் இந்த அடை­வைப் பெறும் மாண­வர்­கள் உயர் புத்­தி­சா­லி­கள் என்று மதிப்­பி­டப்­பட்­டுப் பரி­ச­ளிப்பு விழாக்­க­ளில் தனியே மதிப்­பு­றுத்­தப்­ப­டு­வது வழமை. அத்­த­கைய உயர் புத்­தி­சா­லி­க­ளில் ஒரு தொகு­தி­ யி­ன­ரை­யே­கூட தோற்­ற­வர்­கள் என்று வெளிப்­ப­டுத்­தும் இத்­த­கைய ஒரு பரீட்­சையை நடத்­திப் பிஞ்சு உள்­ளங்­க­ளில் நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­தும் இந்­தப் பரீட்சை உண்­மை­யி­லேயே தேவை­யா­ன­து­தானா?

இல­வ­சக் கல்­வி­யின் தந்தை என வர்­ணிக்­கப்­ப­டும் சி.டபிள்யு.டபிள்யு.கன்­னங்­க­ரா­வால் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது இந்­தப் புல­மைப் பரி­சில் திட்­டம். கிரா­மங்­க­ளில் இருந்த பாட­சா­லை­கள் வச­தி­யும் வாய்ப்­பும் அற்­ற­வை­யா­க­ இருந்த காலத்­தில் அங்கு கற்­கும் பிள்­ளை­க­ளில் ஒரு தொகு­தி­யி­ன­ரா­வது நக­ரப்­பு­றத்­தில் உள்ள வச­தி­யான பாட­சா­லை­க­ளுக்­குச் சென்று கல்வி கற்­பதை ஊக்­கு­விப்­ப­தற்­கா­கவே ஊக்­கு­விப்­புத் தொகை­யு­டன் சேர்ந்த புல­மைப் பரி­சில் திட்­டம் கன்­னங்­க­ரா­வால் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. அதற்கு முக்­கிய கார­ண­மாக இருந்­தது அன்­றி­ருந்த போக்­கு­வ­ரத்து நிலமை. பல கிரா­மங்­கள் பேருந்து வச­தி­க­ளையே கொண்­டி­ருக்­க­வில்லை. பல கிரா­மத்து மாண­வர்­கள் தமது உயர் கல்­விக்­கா­கப் பல மைல்­கள் தூரத்­தைக் கடக்க வேண்­டி ­ய­வர்­க­ளாக இருந்­தார்­கள். அவர்­க­ளில் சில­ருக்­கா­வது ஊக்­க­ம­ளிப்­ப­தற்கு உத­வி­யாக இந்­தத் திட்­டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

காலப் போக்­கில் போக்­கு­வ­ரத்து வச­தி­க­ளும் கிரா­மப் பாட­சா­லை­க­ளின் தர­மும் உயர்­வ­டை­யத் தொடங்­கிய பின்­னர் இந்­தப் பரீட்­சை­யின் அடிப்­படை நோக்­கத்­தில் இருந்து அது திசை மாறி வெகு தூரம் பய­ணித்­து­விட்­டது. பிர­பல பாட­சா­லை­க­ளில் அனு­மதி பெறு­வ­தற்­கான ஒரு பரீட்­சை­யா­கப் புல­மைப் பரி­சில் பரீட்­சை­யின் பெறு­மா­னம் சுருங்­கி­விட்­டது. அத்­தோடு கிரா­மப்­புற மாண­வர்­க­ளின் நல­னுக்­காக உரு­வாக்­கப்­பட்ட இந்­தத் திட்­டத்­தால் இன்று பயன்­பெ­று­ப­வர்­கள் அவர்­க­ளில் மிகக் குறை­வா­ன­வர்­களே என்­ப­தும் ஒரு துன்­பி­யல்.

இன்று அண்­மைப் பாட­சா­லைத் திட்­டம் என்ற ஒன்றை அரசு அறி­மு­கப்­ப­டுத்­திக் கிரா­மப் பாட­சா­லை­க­ளின் தரத்­தை­யும் வச­தி­க­ளை­யும் உயர்த்­து­வ­தில் கவ­னம் செலுத்­து­கின்­றது. அப்­ப­டி­யி­ருக்­கும்­போது, கிரா­மங்­க­ளில் இருந்து புத்­தி­சாலி மாண­வர்­களை நக­ரப்­பு­றப் பாட­சா­லை­க­ளுக்கு அனுப்பி ஒரு சில பாட­சா­லை­க­ளி­லேயே அவர்­க­ளைக் குவிப்­பது என்­ப­தும் பாட­சா­லைக் கல்­வி­யின் தரத்­தை­யும் பாதிக்­கி­றது.

எல்­லா­வற்­றுக்­கும் மேலாக 10 வய­துப் பால­கர்­க­ளுக்கு அள­வுக்­க­தி­க­மான உள­வி­யல் அழுத்­தத்­தைக் கொடுக்­கி­றது இந்­தப் பரீட்சை. தனது பிள்ளை புல­மைப் பரீட்­சை­யில் சித்­தி­ய­டை­வது பெற்­றோ­ரின் சமூக மதிப்­பைத் தீர்­மா­னிக்­கும் கார­ணி­யா­க­வும் பரி­ம­ளித்­துள்ள நிலை­யில், குழந்­தை­கள் மீதான அழுத்­தம் மேலும் மேலும் அழுத்­து­கின்­றது. இத­னால் இப்­போ­தெல்­லாம் தரம் 3இல் இருந்தே புல­மைப் பரி­சி­லுக்­குத் தயார்ப்­ப­டுத்­தும் பணி ஆரம்­பித்­து­வி­டு­கி­றது. 3 வரு­டங்­க­ளா­கப் பிள்­ளை­கள் வதைக்­கப்­ப­டு­கி­றார்­கள்.

இது பற்றி இந்­தப் பத்­தி­யில் ஏற்­க­னவே நிறைய எழு­தி­யா­கி­விட்­டது. இன்று 160 புள்­ளி­களை எடுத்த பிள்­ளை­க­ளும் தோல்­வி­யால் துவண்டு அழும்­போது அது பற்றி நினை­வூட்­டா­மல் இருக்க முடி­ய­வில்லை.

உல­கின் பல நாடு­கள் இடை­நி­லைக் கல்வி வரைக்­கும் பிள்­ளை­க­ளுக்கு அழுத்­தம் தரக்­கூ­டிய எல்லா வகை­யான பரீட்­சை­க­ளை­யும் நிறுத்­தி­விட்­டன. நாம்­தான் இன்­ன­மும் மன­னப்­ப­டுத்தி அதை அப்­ப­டியே வெளிப்­ப­டுத்­தும் பரீட்சை முறை­க­ளுக்­குள் முடங்­கிக் கிடக்­கின்­றோம். இந்­தப் புல­மைப் பரி­சில் பரீட்­சையை நிறுத்­தி­விட்­டால் கிரா­மப்­பு­றத்து மாண­வர்­கள் பிர­பல பாட­சா­லை­க­ளில் கற்­கும் வாய்ப்பு மறுக்­கப்­பட்­டு­வி­டும் என்­கிற வாதம் மட்­டும் இந்­தப் பரீட்­சை­யைத் தொடர்­வ­தற்­குப் போதாது. இந்­தப் பரீட்­சையை நிறுத்­து­வது குறித்து விரை­வில் ஒரு முடிவு எடுக்­கப்­ப­டும் என்று கல்வி அமைச்­சர் அகில விராஜ் காரி­ய­வா­சம் மூன்று வரு­டங்­க­ளுக்கு முன்­னர் அறி­வித்­தி­ருந்­தார். ஆனால் அது­வும் நடக்­க­வில்லை.

இந்­தப் பரீட்­சை­யால் ஏற்­ப­டும் அழுத்­தம் இன்­னும் இன்­னும் அதி­ க­ரிப்­ப­தற்கு முன்­பாக அதை நிறுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும் அரசு. கிரா­மப்­புற ஏழைப் பிள்­ளை­க­ளின் மேம்­பட்ட கல்­விக்கு அண்­மைப் பாட­சா­லைத் திட்­டம்­போன்ற இன்­னும் சிறந்த திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது குறித்­துச் சிந்­திக்­க­வேண்­டுமே தவிர இந்­தப் பரீட்­சை­யைத் தொட­ரக்­கூ­டாது.

You might also like