இரட்டை வேடத்தில் நயன்தாரா!!

விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வரும் நயன்தாரா, அடுத்ததாக படத்திற்காக முதல்முறையாக புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளார்.

`லட்சுமி’, `மா’ குறும்படங்கள் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சர்ஜுன்.கே.எம் அடுத்ததாக நயன்தாராவை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இந்த படத்தை `கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ்’ சார்பில் கோட்டப்பாடி.ராஜேஷ் தயாரிக்கிறார். இதில் நயன்தாராவிற்கு ஜோடியாக கலையரசன் நடிக்கிறார்.

இப்படத்திற்கு ‘ஐரா’ என்று தலைப்பு வைத்து இருக்கிறார்கள். தற்போது இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மேலும் இப்படத்தில் முதல் முறையாக நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்திற்காக பேய் பங்களா செட் ஒன்றை அமைத்து படக்குழுவினர் சென்னையில் படமாக்கி வருகின்றனர். ஹாரர் மற்றும் திரில்லர் கதையம்சத்துடன் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

You might also like