இரு இடங்­க­ளில்- 119 கிலோ கஞ்சா மீட்பு- நால்வர் கைது!!

யாழ்ப்­பா­ணம்,  காங்­கே­சன்­துறை, கீரி­ம­லைப் பகு­தி­யில் 79 கிலோ 900 கிராம் கேர­ளாக் கஞ்­சா­வும், இள­வா­லைப் பகு­தி­யில் 40 கிலோக் கிராம் கஞ்­சா­வும் நேற்­றைய தினம் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன. இது தொடர்­பில் 4பேர் சந்­தே­கத்­தில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

கீரி­மலை
கடற்­ப­டை­யி­ன­ரும், தேசிய போதைத் தடுப்­புப் பொலி­ஸா­ரும் இணைந்து மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­யி­லேயே கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது. அவர்­க­ளுக்­குக் கிடைத்த இர­க­சி­யத் தக­வலை அடுத்தே இந்த நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

கீரி­ம­லை­யில் உள்ள காட்­டுப் பகு­தி­யில் மறைத்து வைக்­கப்­பட்­டுப் பின்­னர் கைமாற்­று­வ­தற்­குத் தயா­ராக இருந்­த­போதே கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டது என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். 34 பொதி­க­ளா­கத் தயார் செய்­யப்­பட்­ட­நி­லை­யில் கஞ்சா காணப்­பட்­டது. இது தொடர்­பில் 3 சந்­தே­க­ந­பர்­கள் கைது செய்­யப்­பட்­ட­னர்.

இள­வாலை
இள­வா­லைப் பகு­தி­யில் உள்ள பாழ­டைந்த வீட்­டி­லி­ருந்து நேற்று மாலை 40 கிலோ கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது. கடற்­ப­டை­யி­ன­ரு­டன் இணைந்து இள­வாலை பொலி­ஸார் கைப்­பற்­றி­யுள்­ள­னர். 19 பொதி­களை கைப்­பற்­றி­ய­து­டன் சந்­தே­கத்­தின் பேரில் 27 வய­து­டைய பண்­டத்­த­ரிப்பை சேர்ந்த ஒரு­வரை பொலி­ஸார் கைது செய்­துள்­ள­னர்.

You might also like