இரு நாட்டுத் தலைவர்களும் வரலாற்றுச் சந்திப்பு- உலக நாடுகள் பரபரப்பு!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் – வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் ஆகியோரது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு இன்று காலை சிங்கப்பூரில் கேபெல்லா ஹோட்டலில், இலங்கை நேரப்படி காலை 6.30 மணியளவில் சந்தித்தனர்.

அனைத்து நாட்டு தொலைக்காட்சிகளும், இந்த சந்திப்பை நேரலையில் தொகுத்து வழங்கின. முதலில், இரண்டு வெவ்வெறு அறைகளிலிருந்து வெளிப்பட்ட இருவரும், நேர்த்தியாக வைக்கப்பட்ட இரண்டு நாட்டு கொடிகள் முன்னிலையில் பரஸ்பரமாக கைகுலுக்கிக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, இருவரும் செய்தியாளர்களை சந்திக்கும் வண்ணம் பிரதான பகுதியிலிருந்து அதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறைக்கு, நடந்து சென்று, அங்கு ஒரே இருக்கையில் அமர்ந்து டிரம்பும், கிம்மும் பரஸ்பரம் கைகுலுக்கி கொண்டு பன்னாட்டுச் செய்தியாளர்கள் சந்திப்பை நிகழ்த்தினர்.

இவர்கள் தங்களது அணு ஆயுத ஒழிப்பு, பொருளாதார தடைகளை நீக்குதல் உள்ளிட்டவை பற்றி பேசினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சந்திப்பு முடிந்து வெளியே வந்ததும் இரு நாட்டு தலைவர்களும் ஓட்டலின் பால்கனியில் நின்றபடி செய்தியாளர்களை பார்த்து கையசைத்தனர்.

Shares
  • Facebook
  • Twitter
  • Google+

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close