இலங்கையர்கள் கோத்தபாயவை விரும்புகிறார்களா?

250 க்கும் மேற்­பட்­ட­வர்­கள் கொல்­லப்­பட்ட உயிர்த்­த ­ஞா­யிறு பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­க­ளைத் தடுக்க முடி­யாத அர­சின் இய­லா­மை­யி­னால், கோப­ம­டைந்த இலங்­கை­யர்­கள், தங்­கள் பாது­காப்­புக்கு உத்­த­ர­வா­தம் அளித்து, பொரு­ளா­தார வளர்ச்­சியை மீண்­டும் கொண்டு வரக்­கூ­டிய, வலி­மை­மிக்க ஒரு­வர், மீண்­டும் அதி­கா­ரத்­துக்கு வரு­வதை விரும்­பு­கி­றார்­கள். போர்க் குற்­றச்­சாட்­டு­களை எதிர்­கொண்­டுள்ள போதி­லும், கோத்­தா­பய ராஜ­பக்­ச­வுக்கு ஆத­ர­வா­கப் பலர் வேரூன்­றி­யுள்­ள­னர்.

தமிழ்ப் புலி­களை தோற்­க­டித்­த­தன் மூலம், சிங்­கள பௌத்த பெரும்­பான்மை மற்­றும் சிறு­பான்மை தமிழ் குழுக்­க­ளுக்கு இடை­யி­லான, 26 ஆண்­டு­கால உள்­நாட்­டுப் போரை, மிரு­கத்­த­ன­மான முறை­யில், முடி­வுக்­குக் கொண்­டு­வந்த, ராஜ­பக்ச சகோ­த­ரர்­க­ளான கோத்­தா­பய மற்­றும் மகிந்த ஆகி­யோர், 2009ஆம் ஆண்­டில் இலங்­கை­யில் போரை முடி­வுக்­குக் கொண்டு வந்­த­னர் என்று பெருமை பெற்­ற­னர். அந்த நேரத்­தில் பாது­காப்­புச் செய­ல­ராக கோத்தபாய­வும், நாட்­டின் தலை­வ­ராக மகிந்­த­வும் இருந்­த­னர்.

பாது­காப்­புச் செய­ல­ராக இருந்த காலத்­தில், ஓர் ஊட­க­ வி­ய­லா­ளரை சட்­ட­வி­ரோ­த­மா­கக் கொலை செய்­தமை மற்­றும் தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான போர்க் குற்­றங்­க­ளுக்கு தூண்­டி­யமை தொடர்­பாக கோத்­த­பாய அமெ­ரிக்­கா­வில் வழக்­கு­களை எதிர்­கொள்­கி­றார். இந்­தக் குற்­றச்­சாட்­டு­களை மறுத்­துள்ள அவர், சித்­தி­ர­வ­தை­யில் இருந்து தப்­பிப் பிழைத்­த­வர்­கள் மற்­றும் கொல்­லப்­பட்ட ஊட­க­வி­ய­லா­ள­ரின் மகள் ஆகி­யோ­ரால் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்ள வழக்­கு­கள், அரச தலை­வர் தேர்­த­லில் போட்­டி­யி­டு­வதை தடுக்­கும் நோக்­கம் கொண்­டவை என்று கூறி­னார். அரச தலைவர் தேர்­த­லுக்­கான நாள் இன்­ன­மும் முடிவு செய்­யப்­ப­ட­வில்லை, ஆனால் டிசெம்­பர் 9ஆம் நாளுக்கு முன்­ன­தாக, தேர்­தல் நடத்­தப்­பட வேண்­டும்.

புறக்­க­ணிக்­கப்­பட்ட எச்­ச­ரிக்­கை­கள்
இலங்­கை­யின் அர­ச­மைப்பு, பிரெஞ்சு ஆட்­சி
­மு­றையை மாதி­ரி­யா­கக் கொண்­டது, அங்கு அரச தலைவருக்கு நிறை­வேற்று அதி­கா­ரங்­கள் உள்­ளன, அதே நேரத்­தில் தலைமை அமைச்­சர் நாடா­ளு­மன்­றத்­துக்குத் தலைமை தாங்­கு­கி­றார். கடந்த ஒக்­ரோ­பர் மாதத்­தில் இருந்து மோத­லில் ஈடு­பட்­டுள்ள மைத்திரி மற்­றும் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோர், இந்­தி­யா­வின் எச்­ச­ரிக்­கை­களை புறக்­க­ணித்து விட்­ட­தா­க­ வும், தாக்­கு­தல்­க­ளைத் தடுக்­கத் தவ­றி­ய­தா­க­வும், ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் குற்­றஞ்சாட்டி வரு­கின்­ற­னர்.

இலங்கையின் பெரும்­பான்மை சிங்­கள பௌத்த சமூ­கத்­தில் வலு­வான ஆத­ர­வைக் கொண்ட, கோத்­த­ பாய போன்ற ஒரு தேசி­ய­வாத தலை­வ­ருக்­கான அழைப்பு, இந்­தியா, பங்­க­ளா­தேஷ் உள்­ளிட்ட பிற ஆசிய நாடு­க­ளில் வாக்­கா­ளர்­கள் செய்த ஒத்த தெரி­வு­ களைப் பிர­தி­ப­லிக்­கி­றது.

இந்­தி­யா­வில், மே மாதம் மகத்­தான வெற்­றி­பெற்று, இரண்­டா­வது முறை­யாக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட தலைமை அமைச்­சர் நரேந்­திர மோடி, தனது இந்து தேசி­ய­வாத தளத்தை திரட்டி, தேசிய பாது­காப்­புக்­கான போராட்­ட­மாக பரப்­பு­ரையை மாற்­றி­யி­ருந்­தார். அத்­து­டன், பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான நிலைப்­பாட்­டை­யும் வெளிப்­ப­டுத்­தி­னார்.
கருத்து வேறு­பா­டு­களை அடக்­கு­வ­தா­க­வும், விமர்­ச­கர்­களை சிறை­யில் அடைப்­ப­தா­க­வும், விமர்­சிக்­கப்­பட்ட பங்­க­ளா­தேஷ் தலைமை அமைச்­சர் ஷேக் ஹசீனா, கடந்த டிசெம்­ப­ரில் நடந்த தேர்­த­லில் மூன்­றா­வது முறை­யாக வெற்­றி­பெற்­றார்.

ரொய்ட்­டர்ஸ் சுமார் 60 மக்­க­ளி­டம் பேசி­யது. அவர்­க­ளில் பலர் பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­க­ளால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் அல்­லது கடந்த ஆண்டு வகுப்­பு­வாத வன்­மு­றை­யால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள். அவர்­க­ளில் சிலர் வாக்­க­ளிப்­ப­தைத் தவிர்க்க திட்­ட­மிட்­டுள்­ளனர்.

வாக்­க­ளிக்­கப்போவ­தாகக் கூறிய பலர் தங்­க­ளுக்கு இன்­னும் எதேச்­சா­தி­கா­ர­முள்ள ஒரு­வர் வேண்­டும் என்று கூறு­கி­றார்­கள். அரச தலைவர் சிறி­சேன போட்­டி­யில் நின்­றால் அவ­ருக்குப் பல இலங்கை கத்­தோ­லிக்­கர்­கள் வாக்­க­ளிக்­க­மாட்­டார்­கள் என்று மூத்த மத­குரு ஒரு­வர் தெரி­வித்­தார். ‘‘கோத்தபாய மீது குற்­றஞ்சாட்­டப்­பட்­டுள்­ளது. ஆனால் அவர் இறுக்­க­மா­ன­வர், சில ஒழுங்­கைக் கொண்டு வரு­வ­தற்கு இப்­போது எமக்­குத் தேவை’’ என்று அவர் குறிப்­பிட்­டார்.

பிள­வு­பட்ட சிறு­பான்­மை­யி­னர்
21 மில்­லி­யன் மக்­க­ளைக் கொண்ட இலங்கை, குறுங்­கு­ழு­வா­தத்­தின் ஒரு பெட்­டி­யா­க­வும், பெரும்­பான்மை சிங்­கள பௌத்­த­மக்­க­ளுக்­கும் தமிழ் குழுக்­க­ளுக்­கும் இடை­யி­லும், சமீ­பத்­திய ஆண்­டு­க­ளில் சிங்­கள பௌத்­தர்­க­ளுக்­கும் முஸ்­லிம் சிறு­பான்­மை­யி­ன­ருக்­கும் இடை­யி­லும், இனப் பதற்­றங்­கள் நில­வு­கின்ற நாடாகவும் இருந்து வரு­கி­றது. பெரும்­பா­லான தமி­ழர்­கள் கோத்தபாயவுக்கு வாக்­க­ளிக்க வாய்ப்­பில்லை என்­றா­லும், முஸ்­லிம் சமூ­கம் பிள­வு­ப­டக் கூடும். முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான மிக­மோ­ச­மான வன்­முறை நடந்­த­போது, கோத்தபாய நாட்­டில் இருக்­க­வில்லை என்று பொது­மக்­கள் முன்­ன­ணி­யின் பேச்­சா­ளர் ஹெகலிய ரம்­புக்­வெல கூறி­னார். ‘‘ஆனா­லும், ஒரு நாளுக்­குள் அவ­ரால் அதைத் தடுக்க முடிந்­தது. முஸ்­லிம் எதி­ரான கல­வ­ரம் பர­வு­வதை இந்த அர­சால் ஒரு வார­மாகக் கட்­டுப்­ப­டுத்த முடி­ய­வில்லை’’ என்று அவர் ரொய்ட்­டர்ஸ்­சி­டம் கூறி­னார்.

அமெ­ரிக்­கா­வில் உள்ள வழக்கு குற்­றச்­சாட்­டு­கள் கோத்தபாயவின் வெற்றி வாய்ப்­பு­களை பாதிக்­காது, ஏனெ­னில் அவ­ருக்கு சிங்­கள– பௌத்த பெரும்­பான்­மை­யி­ன­ரின் பெரும் ஆத­ரவு உள்­ளது என்று இலங்­கை­யின் அர­சி­யல் ஆய்­வா­ளர் குசல் பெரேரா தெரி­வித்­தார்.

 

You might also like