இள­வா­லை­யில் இளம்­பெண் மர்­ம­மான முறை­யில் சாவு

இள­வாலை, சேந்­தாங்­கு­ளத்­தில் இரு பிள்­ளை­க­ளின் தாய் ஒரு­வர் மர்மமான முறை­யில் உயி­ரி­ழந்­துள்­ளார். இந்­தச் சம்­ப­வம் நேற்று நடந்­துள்­ளது.
இரு பிள்­ளை­க­ளின் தாயான அன்­ரன் உத­ய­ராஜ் டிலக்­சினி என்­பரே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்­ளார்.

இவ­ரது கண­வர் ஒரு பிள்­ளையை அழைத்­துக் கொண்டு உற­வி­னர் வீடு சென்­றுள்­ளார். உயி­ரி­ழந்­த­வ­ரின் தங்கை மற்­றொரு பிள்­ளையை அழைத்­துக் கொண்டு தேவா­ல­யம் சென்­றுள்­ளார்.

தாய் தெல்­லிப்­பளை மருத்­து­வ­மனை சென்­றி­ருந்­தார். டிலக்­சினி வீட்­டில் தனித்­தி­ருந்­துள்­ளார்.

மு.ப.10 மணி­ய­ள­வில் கண­வர் வீடு திரும்­பி­னார். அப்­போது டிலக்­சினி அசை­வற்ற நிலை­யில் இருந்­துள்­ளார். வீட்­டில் இருந்த பொருள்­கள் சித­றுண்டு காணப்­பட்­டன. ஒரு லட்­சத்து 5 ஆயி­ரம் ரூபா பண­மும் காணா­மல் போயி­ருந்­தது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

டிலக்­சினி உட­ன­டி­யா­கத் தெல்­லிப்­பளை மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டார். அவர் முன்­னரே உயி­ரி­ழந்­து­விட்­டார் என்று மருத்­து­வர்­கள் உறு­திப்­ப­டுத்­தி­னர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது. டிலக்­சி­னி­யின் உட­லில் எந்­தக் காய­மும் காணப்­ப­ட­வில்லை.

இள­வா­லைப் பொலி­ஸார் இது தொடர்­பில் மல்­லா­கம் நீத­வா­னுக்கு அறி­வித்­த­னர். மல்­லா­கம் நீத­வான் சம்­பவ இடத்­துக்­குச் சென்று விசா­ர­ணை­களை மேற்­கொண்­டார்.

உடற்­கூற்­றுச் சோத­னை­யின் பின்­னரே உயி­ர­ழப்­புக்­கான கார­ணம் தெரி­ய­வ­ரும் என்று கூறப்­பட்­டது.

You might also like