ஈரான் மீது சைபர் தாக்குதல்!!

ஈரான் மீது அமெரிக்கா சைபர் தாக்குதலை ஆரம்பித்துள்ளது என்று அமெரிக்காவின் வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டுவீழ்த்தியதையடுத்து, ஈரான் மீது இராணுவத்
தாக்குதல்களை நடத்த அமெரிக்கா தயாராகியது.

எனினும், அத்தாக்குதல் ஆரம்பமாகுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர் தாக்குதலை நிறுத்த தான் உத்தரவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் சைபர் தாக்குதல்களை (கணினித் தாக்குதல்) அமெரிக்கா ஆரம்பித்தது.

இத்தாக்குதல்களால் ஈரானின் ரொக்டெ; மற்றும் ஏவுகணைகளை கட்டுப்படுத்தும் கணினிகள் செயலிழந்தன என வொஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

You might also like