ஈழத் தமிழர்களுக்கான நீதி எப்போது கிட்டும்?

ஏறத்­தாழ ஒரு லட்­சம் பேருக்­கும் அதி­க­மா­னோர் கொல்­லப்­பட்­டும், அதே அள­வி­லான பொது­மக்­கள் வீடு, வாசலை இழந்து அநா­தை­க­ளாக்­கப்­பட்­டும் மிகப்­பெ­ரிய மனித உரிமை மீறல் நிகழ்ந்­தி ­ருக்­கும் நிலை­யில், இலங்­கை­யில் சிறப்பு நீதி­மன்­றம் அமை­வ­தற்கு ஐ.நா வின் மனித உரி­மை­கள் சபை மேலும் கால அவ­கா­சம் வழங்­கி­யி­ருப்­பது தவறு. 10 ஆண்­டு­கள் கழிந்­தும் நீதி வழங்­கப்­ப­ட­வில்லை எனும்­போது, தாம­திக்­கப்­பட்ட நீதி மறுக்­கப்­பட்ட நீதி என்­று­தான் கருத வேண்­டி­யி­ருக்­கி­றது.இப்­ப­டிக் கூறி­யுள்­ளது தமி­ழ­கத்­தில் இருந்து வெளி­வ­ரும் தமிழ்த்­தி­ன­ச­ரி­யான தின­ம­ணி­யின் ஆசி­ரி­யர் தலை­யங்­கம்.

அதில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது:
இலங்­கை­யில் உள்­நாட்­டுப் போர் முடிந்து 10 ஆண்­டு­க­ளான பிற­கும்­கூட இன்­னும் போர்க் குற்­றங்­கள் குறித்து விசா­ரணை நடத்­தப்­ப­டா­மல் இருப்­பது வேடிக்­கை­யா­க­வும், வேத­னை­யா­க­வும் இருக்­கி­றது. கடந்த வியா ழக்­கி­ழமை ஜெனி­வா­வில் கூடிய ஐ.நா. சபை­யின் மனித உரி­மை­கள் சபை ஈழ விடு­த­லைப் போர் குறித்த குற்­றங்­களை விசா­ரிக்க இலங்­கைக்கு மேலும் இரண்­டாண்டு அவ­கா­சம் வழங்­கி­யி­ருப்­பது எதிர்­பா­ராத அதிர்ச்சி. இப்­படி விசா­ர­ணைக்­கான கால அவ­கா­சம் நீட்­டிக்­கப்­ப­டு­வது இது இரண்­டா­வது முறை. இலங்­கை­யில் 1983ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி தொடங்­கிய இலங்கை உள்­நாட்­டுப் போர் அல்­லது ஈழ விடு­த­லைப் போர் ஏறத்­தாழ 26 ஆண்­டு­கள் தொடர்ந்­தது. இலங்கை அர­சுக்கு எதி­ராக விடு­த­லைப் புலி­க­ளால் வடக்கு – கிழக்கு பகு­தி­க­ளில் நடத்­தப்­பட்ட கொரில்லா போர் 2009ஆம் ஆண்டு மே மாதம் முடி­வுக்கு வந்­தது. கால் நூற்­றா ண்­டுக்­கும் மேலாக நடை­பெற்ற உள்­நாட்­டுப் போரில் இலங்­கை­யின் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளில் பெரும்­பான்­மை­யாக வாழும் தமி­ழர்­கள் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­ட­னர்.

இலங்கை அர­சின் விவா­தம்
ஏற்­கத்தக்­கது இல்லை
ஏறத்­தாழ 80 ஆயி­ரத்­தில் இருந்து ஒரு லட்­சம் பேர் அந்த இடைப்­பட்ட காலத்­தில் கொல்­லப்­பட்­டி­ருப்­ப­தாக சில புள்­ளி­வி­வ­ரங்­கள் தெரி­விக்­கின்­றன. ஐ.நா. சபை­யின் குழு ஒன்று நடத்­திய மதிப்­பீடு உள்­நாட்­டுப் போரின் கடைசி கட்­டத்­தில் மட்­டும் 40 ஆயி­ரத்­துக்­கும் அதி­க­மா­னோர் கொல்­லப்­பட்­டி­ருப்­ப­தா­கத் தெரி­விக்­கி­றது. ஐ.நா. சபை உள்­ளிட்ட பல அமைப்­பு­க­ளும் உயி­ரி­ழப்­பு­கள் குறித்து ஆய்­வு­கள் நடத்தி அறிக்­கை­கள் வெளி­யிட்­டா­லும்­கூட, இலங்கை அரசு அவற்றை ஏற்­றுக்­கொள்­வ­தாக இல்லை. பொது­மக்­க­ளுக்கு எந்­த­வித பாதிப்­பும் இல்­லாத வகை­யில் இலங்கை ராணு­வம் மிக­ வும் கவ­ன­மாக விடு­த­லைப் புலி­கள் மீது மட்­டுமே தாக்­கு­தல் நடத்­தி­ய­தா­க­வும், பெரு­ம­ளவு உயிர்ச்­சே­தம் எது­வும் தங்­க­ளால் ஏற்­ப­ட­வில்லை என்­றும் அர­சும் ராணு­வ­மும் பிடி­வா­தம் பிடிக்­கின்­றன. கடைசி கட்­டப் போர் முடி­வ­டைந்­த ­போது மூன்று லட்­சத்­துக்­கும் அதி­க­மான பொது­மக்­கள் வவு­னியா மாவட்­டத்­தி­லுள்ள முகாம்­க­ ளுக்கு வலுக்­கட்­டா­ய­மாக மாற்­றப்­பட்­ட­னர். இலங்­கை­யின் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளி­லுள்ள தனி­யார் நிலங்­கள் ராணு­வத்­தால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்டு சுற்­றி­லும் முள்­வேலி அமைக்­கப்­பட்­டது. அடைக்­கப்­பட்ட பொது­மக்­க­ளில் பல­ரும் முகாம்­க­ளி­ லி­ருந்து வெளி­யேற அனு­ம­திக்­கப்­பட்­டா­லும்­கூட, ராணு­வம் கைய­கப்­ப­டுத்­திய நிலங்­கள் இன்­னும் உரி­ய­வர்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­ப­ட­வில்லை.

உள்­நாட்­டுப் பொறி­மு­றையை
கார­ணம்­காட்ட இய­லாது
ஐ.நா.வின் முன்­னாள் பொதுச் செய­லா­ளர் பான் கீ மூன், இலங்­கை­யின் உள்­நாட்­டுப் போரின் கடைசி கட்­டத்­தில் நடந்த வரம்பு மீறல்­கள் குறித்து விசா­ரிக்க ஒரு குழுவை அமைத்­தார். அந்­தக் குழு­வின் அறிக்கை இலங்­கை­யில் மனித உரிமை மீறப்­பட்­ட­ தற்­கான அடிப்­படை ஆதா­ரங்­கள் இருப்­ப­தா­க­வும் அது குறித்து ஐ.நா. விசா­ரிக்­க­லாம் என்­றும் பரிந்­துரை செய்­தது. அந்­தக் குழு, பன்­னாட்­டுச் சட்ட மீறல்­கள் குறித்து விசா­ரிப்­ப­தற்­காக பன்­னாட்டு அள­வி­லான விசா­ர­ணையை நடத்­தும்­படி ஐ.நாவின் பொதுச்­செ­ய­லா­ள­ருக்கு பரிந்­துரை செய்­தி­ருந்­தது.

ஆனால், இலங்கை அரசோ தனது ராணு­வம் எந்­த­வித போர்க் குற்ற நட­வ­டிக்­கை­யி­லும் ஈடு­ப­ட­வில்லை என்­ப­தி­லும், பன்­னாட்டு விசா­ர­ணையை ஏற்­றுக்­கொள்­வ­தில்லை என்­ப­தி­லும் பிடி­வா­த­மாக இருக்­கி­றது. ஏற்­கெ­னவே இலங்கை அதி­ப­ரால் நிய­மிக்­கப்­பட்ட விசா­ரணை ஆணை­யம், 1983ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை­யி­லான உள்­நாட்­டுப் போர் குறித்து விசா­ரணை நடத்தி அறிக்­கையை இலங்கை நாடா­ளு­மன்­றத்­தில் தாக்­கல் செய்­து­விட்­ட­தால், ஐ.நா. அறிக்­கைக்கு தேவையே இல்லை என்­பது இலங்கை அர­சின் வாதம். ஐ.நா. மனித உரிமை கவுன்­சில் கூறி­யி­ருப்­ப­து­ போல விசா­ரணை நடத்­து­வ­தற்கு சிறப்பு நீதி­மன்­றம் அமைக்­கப்­பட வேண்­டும். இலங்­கை­யின் உள்­நாட்­டுப் பிரச்சினை குறித்து விசா­ரிக்­கும் சிறப்பு நீதி­ மன்­றங்­க­ளில் வெளி­நாட்டு நீதி­ப­தி­கள் இடம்­பெ­று­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்று இலங்­கை­யின் அயலுற­வுத் துறை அமைச்­சர் தெரி­வித்­தி­ருக்­கி­றார். அப்­ப­டி­யொரு பன்­னாட்டு அள­வி­லான நீதி­மன்­றம் அமை­யா­மல் போனால், இலங்­கை­யில் நடந்த மனித உரிமை மீறல்­க­ளுக்­கும் போர்க் குற்­றங்­க­ளுக்­கும் முறை­யான விசா­ர­ ணையோ, தீர்ப்போ கிடைக்­காது என்­பது சொல்­லித் தெரிய வேண்­டி­ய­தில்லை.

தாம­திக்­கப்­பட்ட நீதி
மறுக்­கப்­பட்ட நீதியே
தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பைச் சேர்ந்த சுமந்­தி­ரன் கூறு­வ­து ­போல, அப்­ப­டி­யொரு சிறப்பு நீதி­மன்­றத்தை இலங்கை அரசு ஏற்­றுக்­கொள்­ளா­மல் போனால், அது குறித்து பன்­னாட்­டுக் குற்­ற­வி­யல் நீதி­மன்­றத்­தில் முறை­யிட முடி­யும். வெளி­நாட்டு நீதி­ப­தி­க­ளு­டன் கூடிய சிறப்பு நீதி­மன்­றத்தை அமைக்க இலங்கை அரசு ஒப்­புக்­கொள்­ளா­விட்­டால், பன்­னாட்டு விசா­ர­ணைக் குழு இலங்­கை­யின் போர்க் குற்­றங்­களை விசா­ரிக்க வேண்­டும் என்­கிற கோரிக்­கை­யை­யும் தமிழ் தேசிய கூட்­ட­ மைப்பு முன்­வைத்­தி­ருக்­கி­றது. இலங்கை அரசு, தனது அர­சுக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டு­களை விசா­ரிக்க தானே நீதி­மன்­றத்தை அமைப்­பது என்­பதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

அதே­போல, வெளி­நாட்டு நீதி­ப­தி­கள் அடங்­கிய சிறப்பு நீதி­மன்­றம் அமை­வதை இலங்­கை­யின் அர­ச­மைப்பு ஏற்­றுக்­கொள்­ள­வில்லை என்­ப­தும் ஏற்­பு­டை­ய­தல்ல. ஏறத்­தாழ ஒரு லட்­சம் பேருக்­கும் அதி­க­மா­னோர் கொல்­லப்­பட்­டும், அதே அள­வி­லான பொது­மக்­கள் வீடு, வாசலை இழந்து அநா­தை ­க­ளாக்­கப்­பட்­டும் மிகப் பெரிய மனித உரிமை மீறல் நிகழ்ந்­தி­ருக்­கும் நிலை­யில், சிறப்பு நீதி­மன்­றம் அமை­வ­தற்கு ஐ.நா.வின் மனித உரி­மை­கள் சபை மேலும் கால அவ­கா­சம் வழங்­கி­யி­ருப்­பது தவறு. 10 ஆண்­டு­கள் கழிந்­தும் நீதி வழங்­கப்­ப­ட­வில்லை எனும்­போது, தாம­திக்­கப்­பட்ட நீதி மறுக்­கப்­பட்ட நீதி என்­று­தான் கருத வேண்­டி­யி­ருக்­கி­றது – என்­றுள்­ளது.

You might also like