உடைந்தது பெரிய அணை- 42 பேர் உயிரிழப்பு- 100 பேர் மாயம்!!

கென்யாவில் உள்ள பட்டேல் என்ற பெரிய அணை ஒன்று உடைந்து 42 பேர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கென்யா தலைநகர் நைரோபியில் இருந்து 190 கிமீ தூரத்தில் உள்ளது சோலை என்ற கிராமம். விவசாயிகள் அதிகம் வசிக்கும் இந்த ஏழ்மையான கிராமத்தில், ஏழுக்கும் அதிகமான தனியார் அணைகள் உள்ளன. இதில் மிகப்பெரிய அணையான பட்டேல் அணையில் நேற்று இரவு உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஊருக்குள் வந்தது.

இதில் 42 பேர் உயிரிழந்தனர். 2 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். 100 க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழப்பு அதிகரிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது அங்கு மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close