உயிரின் மேன்மை உணரப்படுமா?

0 238

நூலகத்துக்குச் சென்ற ஒரு­வன் நூல­க­ரி­டம், ‘உயிரை மாய்த்­தல் பற்­றிய நூல் ஒன்று தர­மு­டி­யுமா?’என்று கேட்­கி­றான். மிக நீண்ட கால­மாக நூல­க­ரா­கப் பணி­யாற்­றும் அவர் உயி­ரின் மேன்­மை­யை­யும், நூல்­க­ளின் பெறு­ம­தி­யை­யும் அறிந்­த­வர். அத­னால் ¶Íஅந்த நூலகர் மிக­வும் நிதா­னத்து­டன்,’ சரி தர­லாம், ஆனால் பிறகு, நூலைத் திருப்­பிக் கொண்­டு­வந்து தரு­ப­வர் யார்?’ என வினா­வுக்கு வினா­வாலே விடை பகர்ந்­தி­ருக்­கின்றார்.

வாழ்­வ­தை­விட ச் சாவது மேலா­ன­தல்ல!

வாழ்­வ­தை­விடச் சாவது மேலா­னது எனத் தவ­றாக எண்­ணித் திட்­ட­மிட்டு ஒரு­வர், தமது உயி­ரைப் போக்­கல் உயிரை மாய்த்­தல் ஆகும். ஒரு நாட்­டின் அல்­லது ஒரு மக்­கள் குழு­மத்­தின் உண்­மை­யான – நியா­ய­மான விடு­த­லைக்காக மேற்­கொள்­ளப்­ப­டும் தியா­கச் செயல்­கள் தமது உயி­ரைத் தாமே போக்­கிக் கொள்­ளும் வடி­வங் களில் நிறை­வே­றி­யதை, – நிறைவே­று­வதை வர­லாற்­றில் காண­லாம்.

அவை பற்றி அல­சு­வ­தாக இப்­ப­குதி அமை­யாது. இப்­பத்­தி­யில் பொது­வா­கத் தனிப்­பட்ட கார­ணங்­க­ளுக்­காக வாழ்­வ­தை­விடச் சாவது நல்­லது என எண்ணி தவ­றாக முடி­வெ­டுத்து அநி­யா­ய­மா­கத் தமது உயிரை மாய்ப்­ப­வர்­க­ளின் செயல் பற்­றியே ஆரா­யப்­ப­டு­கின்­றது.

வடக்கு மாகா­ணத்­தின் புள்ளி விவ­ரங்­கள்

ஆயு­தப் போருக்­குப் பின்­னர் தற்­கொ­லைச் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­துச் செல்­வ­தைப் புள்­ளி­வி­வ­ ரங்­கள் வௌிப்­ப­டுத்தி நிற்­கின் றன. வடக்கு மாகா­ணத்­தின் ஐந்து மாவட்­டங்­க­ளி­லும் இவ்­வாண்டு ஆவ­ணி­மா­தம் வரை­யி­லான எட்டு மாதங்­க­ளி­லும் 796 பேர் உயிரை மாய்த்­துக்­கொள்ள முயற்­சித்­தி­ருப்­ப­தா­க­ வும், அதில் 85 பேர் உயி­ரி­ழந்து போன­தா­க­வும், மருத்­து­வ­மனை வட்­டா­ரப் புள்­ளி­வி­வ­ ரங்­கள் தெரி­விக்­கின்­றன. மருத்­து­வ­ம­னை­க­ளின் பதி­வு­க­ளுக்கு அப்­பால் முயற்­சிக்­கப் பட்­டவை இத்­த­கைய தரவு விவ­ரத்­தில் சேர்க்­கப்­ப­டு­வ­தில்லை என்­ப­தை­யும் கவ­னத்­திற் கொள்­ள­வேண்டி இருக்­கி­றது.

வீரம் செறிந்த வாழ்­வி­ய­லோ­டும், வர­லாற்­றோ­டும், பண்­பாட்­டோ­டும் சிறப்­புற்று விளங்­கிய ஒரு மக்­கள் குழு­மம், இன்று தன்­னம்­பிக்கை இழந்து உயிரை மாய்த்துக் கொள்ள முயலும் தரப்பினர் கொண்ட சமூ­க­மாக மாறி வரு­வது மிக­வும் வேத­னைக்­கு­ரி­யது. அறுக்க அறுக்க வள­ரும் அறுகு போல­வும், வெட்ட வெட்­டத் தளைக்­கும் வாழை போல­வும் வள­ர­வேண்­டிய எமது மக்­கள் குழு­மம், உயிரை மாய்க்­கத் தலைப்­பட்­டி­ருப்­பதை என்­ன­வென்று சொல்­வது? வளர்ந்­து­வ­ரும் இந்­தச் சிக்­கலை ஆழ­மான ஆய்­வுக்கு உட்­ப­டுத்தி எமது சமூ­கம் மீண்­டெழ வழி­கள் வகுக்­கப்­பட வேண்­டி­யது முக்­கிய தேவை­யா­கும்.

அரி­யா­லை­யில் நடந்த உயி­ரைப் போக்­கிக்­கொண்ட சம்­ப­வம்

கடந்த ஐப்­ப­சித்­திங்­கள் இறுதி வாரத்­தில் அரி­யா­லை­யில் நடந்த ஒரு குடும்­பத்­தின் தவ­றான முடி­வெ­டுத்து உயி­ரைப் போக்­கிக்­கொண்ட செய­லா­னது பெரும் கொடு­மை­யா­ன­தொன்­றாக, மனி­த­நே­யம் கொண்ட அத்­தனை பேரா­லும் பார்க்­கப்­ப­டு­கின்­றது. ரத­ணன் கிரு­ சாந்­தன்(37) என்­ப­வர் ஒரு கோடியே பதி­னேழு இலட்­சம் ரூபா பணத்தை நம்­பிக்­கை­யின் அடிப்­ப­டை­யில் தனது நண்­பன் ஒரு­வ­னுக்கு ஆறு­மா­தத் தவ­ணை­யில் கட­னா­கக் கொடுத்­துள்­ளார் எனத் தெரி­ய­வ­ரு­கின்­றது. அந்­தப் பணத்தை மீளப்­பெற இரண்டு ஆண்­டு­கள் முயற்­சி­கள் மேற்­கொண்­டி­ருந்­தும் அது முடி­யா­மல் போயி­ருந்­தது.

இவ்­வ­ளவு தொகைப் பணத்­தை­யும் இரண்­டாண்டு கால­மாக மீளச்­செ­லுத்­தாது இழுத்­த­டித்து வந்த நிலை­யில் கிரு­சாந்­தன் பணத்தைப் பெற்றவருக்கு எதிராக வழக்­குத் தாக்­கல் செய்­துள்­ளார். கொடுத்த பணத்­தில் பத்து இலட்­சம் ரூபா­வுக்கே ஆதா­ரம் இருந்­துள்­ளது. அத­னைக்­கூட, கடன்­பெற்ற நபர் பகுதி பகு­தி­யா­கவே செலுத்தி இருக்­கின்­றார். இந்த நி­லை­யில், மற்­றைய ஒரு கோடியே ஏழு இலட்­சம் ரூபா கொடுத்­த­தற்கு எவ்­வித ஆதா­ர­மும் இல்­லா­த­தால் வழக்கு நீண்­டு ­கொண்டு சென்­றி­ருக்­கின்­றது.

இந்த நிலை­யில் தவ­றான முடி­வெ­டுத்து மனை­வி­யு­டன் சேர்ந்து உயிரை மாய்த்­துக் கொள்ளத் தீர்­மா­னித்து இருக்­கின்­றார் கிரு­சாந்­தன். எனி­னும் முத­லில் நஞ்சை அருந்­திய கிரு­சாந்தன் காப்­பாற்­றப்­பட்ட நிலை­யில் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்டு உயி­ருக்­கா­கப் போராடி மூன்று நாள்­க­ளின் பின் சாவ­டைந்­தார். ஏறக்­கு­றைய கிரு­சாந்­தன் சாவ­டைந்து இரு மாதங்­க­ளில் அவ­ரது மனைவி சுநேந்திரா (28) தனது மூன்று பச்­சி­ளம் பால­கர்­க­ளுக்­கும் நஞ்­சூட்டி அவர்­க­ளைச் சாவ­டை­
யச் செய்து தானும் கண­வ­னின் வழி­யில் தனது உயி­ரைப் போக்­கிக் கொண்­டுள்­ளார்.

சில கேள்­வி­களை இந்த வேளையில்
கேட்­டுத்­தான் ஆக­வேண்­டும்!

இவ்­வ­ளவு தொகைப் பணத்­தை­யும் கட­னா­கப் பெற்­றுக் கொண்­ட­வர்­க­ளுக்கு கடன் கொடுத்­த­வரை மோசடி செய்­வ­தற்கு எப்­படி மனம் வந்­தது? நட்­பா­யி­ருந்து கட­னைப் பெற்­றுக்­கொண்ட பின்­னர் எப்­படி ஒரு நண்­பனை இவ்­வா­றான இக்­கட்­டில் தள்ள மனம் வந்­தது? இந்­தப் பணத்­தைத் திருப்­பிக் கொடுக்­காத நிலை­யில் அந்­தக் குடும்­பம் எத்­த­கைய நெருக்­கீ­டு­க­ளைச் சந்­திக்­கும் என எண்­ணிப் பார்க்­கக்­கூட கடன்­பட்­ட­வர்­க­ளுக்கு மனம்­இ­டம்­கொ­டுக்கவில்­லையா?

அந்­தக் குடும்­பத் தலை­வ­னது சாவின் பின்­ன­ரா­வது அந்தப் ப­ணத்­தின் ஒரு பகு­தி­யை­யா­வது திருப்­பிக் கொடுப்­ப­தற்கு அவர்­க­ளது மனம் இரங்­க­வில்­லையா? கண­வ­னின் சாவையே தாங்க முடி­யாது வாழ்ந்து வந்த சுநேந்திரா, கண­வன் பட்ட கடனை எப்­ப­டிக் கொடுப்­பாள் என்­பதை கிரு­சாந்­தி­டம் கடன் பெற்­ற­வர்­கள் சிந்­தித்­தி­ருப்­பார் களா?

அப்­படி மனி­தா­பி­மா­னத்­தோடு நடந்­தி­ருந்­தால் சுநேந் திரா இவ்­வா­றான ஒரு தவ­றான முடிவைத் தேர்ந்து கொள்­ளாது தனது மூன்று தெய்­வப் பிற­வி­க­ளு­ட­னும் இந்­நாள்­வரை இருந்­தி­ருப்பாள் அல்­லவா?
மறு­பு­றத்­தில், இவ்­வ­ளவு தொகைப் பணத்தை எவ்­வித ஆதா­ர­மும் இன்றி கிரு­சாந்­தன் கொடுத்­தது சரி­யா­ன­து­தானா? கட­னா­கக் கொடுக்­க­லாம், ஆனால் இவ்­வ­ளவு தொகைப் பணத் தைக் கட­னா­கப் பெற்­றுக் கடன் கொடுக்­க ­வேண்­டிய தேவை என்ன?

கடன்­பட்­டுக் கொடுத்த கடனை செலுத்த முடி­யாத நிலை­யில், தான் தேர்ந்­தெ­டுத்த தவ­றான முடி­வில் ஒன்­றி­ணை­யு­மாறு தனது பிள்­ளை­க­ளோடு மனை­வி­யை­யும் கிரு சாந்தன் கோரி­யமை எவ்­வ­கை­யில் நியா­ய­மா­னது? இந்­தக் கொடுக்­கல் வாங்­கல்­க­ளை­யும் எந்தவித குற்­றங்­க­ளை­யும் அறி­யாத தெய்­வப் பிற­வி­க­ளான அக்­கு­ருத்­துக்­க­ளைச் (கர்சா-4 , சஜித்-2, சர­வணா 1 ) சாவ­டிக்க சுநேந்தி­ரா­வுக்கு எப்­படி மனம் வந்­தது?

‘நீடித்த காலம் வாழ ஆசைப்­பட்­டோம். இறு­தி­வரை போரா­டி­னோம். முடி­ய­வில்லை… போகி­றோம். எமக்­கான நீதி­யைப் பெற்­றுக்­கொ­டுங்­கள்!’ என சாவின் பிடி­யில் நின்­று­கொண்டு அப­யக் குரல் எழுப்­பிய ஓர் அப­லை­யின் இரத்­தக் கண்­ணீர் இந்­தச் சமூ­கத்­துக்­குச் சொல்­லும் பாடம்­தான் என்ன என்­பதை எமது சமூ­கம் சிந்­தித்தே ஆக­வேண்­டும்!

பரி­தா­பத்­துக்­கு­ரிய பாவச்­செ­யல்!

தவ­றான முடி­வெ­டுத்­துத் தமது உயி­ரைத் தாமே போக்­கிக்­கொள்­வதை எவ­ரும் ஓர் உயர்­வான -செய­லா­கக் கரு­தி­ய­து­மில்லை; – கரு­து­வ­து­மில்லை – கரு­தப்­போ­வ­து­மில்லை. எவ­ரா­லும் நியா­யப்­ப­டுத்­த­வும் இய­லாத இத்­த­கைய செயற்­பா­டு­களை தடுத்து நிறுத்த நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­ப­ட­வேண்­டும்.

விலங்­கு­கள் எவையும் தற்­கொலை
செய்­வ­தில்லை!

உயிர் வாழ்­வ­ன­வற்­றில் மனி­த­னைத் தவிர வேறு எந்த உயி­ரி­ன­மும் தம்­மு­யிரை தாமே போக்­கிக்­கொள்­வ­தில்லை என்­பதை ஆய்­வு­கள் நிரூ­பிக்­கின்­றன. தம்­மு­யி­ரைத் தாமே போக்­கிக்­கொள் வ­தில்­கூட மனி­தன்­தான் மனி­த­னுக்­குக் கார­ண­மாய் இருக்­கின்­றான் என்­பதை எண்­ணிப் பார்க்­கும்­போது’ மனித இனத்­தின் மீதே வெறுப்பு ஏற்­ப­டு­கி­றது.

தூண்­டி­க­ளாய் துலங்­கு­தல் ஆகாது!

ஒரு­வ­ரைத் தாமே தமது உயி­ரைப் போக்­கிக் கொள்­ளத் தூண்­டக்­கூ­டிய வகை­யில் குடும்­பத்­த­வர்­க­ளும், உற­வு­க­ளும், நண்­பர்­க­ளும், சமு­தா­ய­மும், ஏன் அர­சு­க­ளும்­கூட நடந்­து­கொள்­ளக் கூடாது என்­ப­தை­யும் ஒவ் வொ­ரு­வ­ரும் மனங்­கொள்ள வேண்­டும். உதா­ர­ண­மாக குடும்­பப் பெண்­ணைக் கண­வன் குடித்து­ விட்டு வந்து துன்­பு­றுத்­தும்­போது அவள் தவ­றான முடி­­வை எடுப்­ப­தற்கு அவளது கண­வன் கார­ண­மா­கின்­றான்.

அதே­போல கடன் பெற்­று­விட்டு அத­னைச் திருப்­பிச் செலுத்­தா­துவிடுவது கடன் கொடுத்­த­வரை மன நெருக்­கீட்­டுக்கு உள்­ளாக்கி தவ­றான முடி­வு­ எடுக்­கத் தூண்­டு­த­லாக அமை­ய­லாம். அப்­ப­டியே, கடன் கொடுத்­த­வ­ரும் கடன் பெற்­ற­வரை மன விரக்­திக்கு உள்­ளாக்­கு­தல் பிழை­யானமுடி­வு­ களை எடுக்­கத் துணை புரி­ய­லாம். ஆக, தாமா­கத் தம­து­யி­ரைப் போக்­கிக்­கொள்­ளும் சம்­ப­வங்­கள் நடை­பெ­றா­தி­ருக்க தனி­ந­பர்­கள் தன்­னம்­பிக்­கை­யில் உறு­தி­யாய் இருப்­ப­தோடு மட்­டு­மல்ல, சமூ­க­மும் தனி­ம­னி­தர்­க­ளுக்கு நம்­பிக்­கையை ஊட்­டக்­கூ­டிய வகை­யில் செய­லாற்ற முன்­வர வேண்­டும்.

குரு­வி­கள் கூடு­கட்­டு­வ­தைப் பாருங்­கள்!

குரு­வி­கள் பொது­வா­கக் கூடு­கட்­டும் போது ஒவ்­வொரு குச்­சி­க­ளா­கச் சேர்த்­துத்­தான் அவை தமது கூடு­களை அமைத்­துக் கொள்­கின்­றன. அவ்­வாறு கூடு­கட்­டும் பொழுது அது பலத்த காற்­றில் அகப்­பட்டு விழுந்து விட்­டாலோ, மழை­யால் சேத­முற்­று­விட்­டாலோ புதி­தா­கக் குச்­சி­க­ளைச் சேர்த்து கூடு­கட்­டும் முயற்­சியை அவை தொடர்­கின்­றன. இவ்­வாறு எத்­தனை தட­வை­கள் கூடு­கட்­டும் முயற்சி தடைப்­பட்­டா­லும் அத்­தனை தட­வை­க­ளும் தடை­க­ளைத் தாண்டித் தமது முயற்­சி­யில் அவை முன்­னே­று­கின்­றன. ‘முயற்சி தவ­ ற­லாம், ஆனால் முயற்­சிக்­கத் தவ­றக்­கூ­டாது’ என்­பது அக்­கு­ரு­வி­க­ளின் விருது வாக்­காக இருக்­கின்­றது போலும்!

குரு­வி­க­ளி­ட­மி­ருந்­தும் கற்­றுக்­கொள்ள
வேண்­டி­யி­ருக்­கி­றது!

நினைத்­தது கைகூ­ட­வில்லை என்­ப­தற்­காக, எவரோ ஒரு­வர் கைவிட்­டு­விட்­டார் என்­ப­தற்­காக, எவரோ ஒரு­வர் ஏமாற்­றி­விட்­டார் என்­ப­தற்­காக, வாழ்க்­கையை முடித்­துக் கொள்­வது சரி­யா­னது தானா? உண்­மை­யில் குரு­வி­க­ளுக்கு தெரிந்த மந்­தி­ரங்­கள் இரண்டு. ஒன்று இடை­வி­டாத் தொடர் முயற்சி; மற்றையது இன்­ன­மும் வாய்ப்­புக்­கள் உண்டு என்ற நம்­பிக்கை என் பவையே.

ஆகவே, குரு­வி­கள் தங்­கள் விடாமுயற்­சி­யால் வாய்ப்­புக்­களை உரு­வாக்கி வாழ்க்­கை­யைத் தம் வச­மாக்­கிக் கொள்­கின்­றன. இத்­த­கைய ஓர்­மம் மனி­த­னுக்கு வேண்­டும். அதா­வது எமக்கு வேண்­டும். மனி­த­னுக்கு மட்­டும் தோல்வி ஏற்­பட்­டால் தனது உயிரை மாய்க்­கும் மன­நிலை ஏன் எழு­கின்­றது என்­பதை ஆராய்ந்து பார்த்து, ஆழச் சிந்­தித்து இத்­த­கைய மனப்­பாங்கு களை­யப் பட வைக்க அனை­வ­ரும் முன்வரவேண்­டும், அனை­வ­ரும் ஒரு­வ­ருக்கு ஒரு­வர் துணை­யாக இருக்­க­வேண்­டும்.

You might also like