உரக்­கப் பேசு­வ­தால்உட­ன­டிப் பயன் உண்டா?

ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யில் நிறை­வேற்­றப்­பட்ட 30/1 தீர்­மா­னத்தை முழு­மை­யாக நிறை­வேற்­றப்­போ­வ­தில்லை என்­பதை கொழும்பு ஆட்­சி­பீ­டம் தெளி­வாக அறி­வித்­து­விட்­டது. இது­வரை கால­மும் இந்த விட­யத்­தில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே கடும்­போக்கு நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்தி வருகின்றார். என்­றும், தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய முன்­னணி அரசு இது விட­யத்­தில் தமி­ழர்­கள் சார்­பி­லான போக்­கையே கொண்­டி­ருக்­கின்­றது என்­றும் காட்­டிக்­கொண்­டி­ருந்­தார்­கள். ஆனால் கடந்த ஜெனிவா அமர்­வு­டன் அந்த வேச­மும் கலைந்து போய்­விட்­டது. இப்­போது பேரி­ன­வாத சக்­தி­கள் அனைத்­தும் ஒரே அணி­யி­லேயே நின்று கொண்­டி­ருக்­கின்­றன என்­பது தெளி­வாகி இருக்­கின்­றது.

இதனை அடுத்து நாடா­ளு­மன்­றத்­தில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் ஆற்­று­கின்ற உரை­க­ளில் அனல் பறக்­கின்­றது. கொழும்பு அர­சைக் கடு­மை­யா­கச் சாடி அவர்­கள் கருத்­துக்­களை வெளி­யி­டு­கி­றார்­கள். ஜெனிவா தீர்­மா­னத்­தில் கூறப்­பட்­டுள்­ள­படி கலப்பு நீதி­மன்­றத்தை உரு­வாக்க வேண்­டும், இல்­லை­யேல் பன்­னாட்­டுக் குற்­ற­வி­யல் நீதி­மன்­றத்தை நாட­வேண்டி வரும் என்று எச்­ச­ரித்­தார் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஏப்­ர­காம் சுமந்­தி­ரன். ஐ.நா. தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான துணிவு அற்ற முது­கெல்­லும்­பில்­லாத ஆட்சி என்று வசை­பா­டி­னார் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வன், சண்­டை­யின் இறுதி நாள்­க­ளில் படை­யி­ன­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்ட போரா­ளி­க­ளுக்கு என்ன நடந்­தது என்று வெளி­வி­வ­கார அமைச்­சுத் தெளி­வு­ப­டுத்த வேண்­டும் என்­றி­ருக்­கின்­றார் தமி­ழ­ர­சுக் கட்­சித் தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சோ. சேனா­தி­ராசா. கூட்­ட­மைப்­பின் தலை­வர் சம்­பந்­தனோ இன்­னும் ஒரு­படி மேலே சென்று தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தா­விட்­டால் விளை­வு­கள் பார­தூ­ர­மாக இருக்­கும் என்று எச்­ச­ரித்­துள்­ளார்.

இந்­தக் கூச்­சல்­க­ளுக்கு எல்­லாம் பயப்­ப­டப்­போ­வ­தில்லை என்­ப­தைப் போல கூட்­ட­மைப்பை அதட்டி உருட்டி வைப்­ப­தைப் போன்ற கருத்­துக்­க­ளையே ஆட்­சி­யா­ளர்­கள் தெரி­விக்­கி­றார்­கள். கூட்­ட­மைப்­பி­ன­ரின் சீற்­றம்­மிக்க வச­னங்­க­ளைக் கண்டு அஞ்­சு­ப­வர்­க­ளாக அவர்­கள் இல்லை. இத்­த­னைக்­கும் தற்­போ­தைய ஆட்சி முன்­வைத்­தி­ருக்­கும் வரவு –செல­வுத் திட்­டம் நிறை­வேற வேண்­டு­மா­னால் அதற்­குத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­ன­ரின் ஆத­ரவு நிச்­ச­யம் இருந்­தாக வேண்­டும் என்­கிற நிலை இருந்­தும்­கூட தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­ன­ரின் கருத்­துக்­க­ளுக்­குச் செவி­ம­டுக்­கும் நிலை­யில் ஆட்­சி­யா­ளர்­கள் இல்லை.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நினைத்­தால் இந்த நிமி­டத்­தி­லும் இந்த ஆட்­சி­யைக் கவிழ்க்க முடி­யும் என்­கிற நிலை இருந்­த­போ­து­கூட, கூட்­ட­மைப்­பின் தய­வில்­தான் ஆட்­சியை நடத்­திச் செல்­ல­வேண்­டிய நிலை இருக்கும் போ­து­கூட கூட்­ட­மைப்­பி­ன­ரை­யும் அவர்­க­ளது கருத்­துக்­க­ளை­யும் மதிக்­காத, தூக்கி எறி­யும் கொழும்­பின் ஆட்­சி­யா­ளர்­கள் மத்­தி­யில் கூட்­ட­மைப்­பி­னர் நாடா­ளு­மன்­றத்­தில் சீறு­வ­தால் ஏதா­வது நடந்­து­வி­டுமா என்­றால் இல்லை என்­பதே பதில்.

இந்த ஆட்­சி­யின் மூலம் தமிழ் மக்­க­ளுக்கு எந்­த­வித நன்­மை­யும் கிட்­ட­வில்லை என்­கி­ற­போ­தும் இந்த ஆட்­சியை அதன் ஆயுள் காலத்துக்கு முன்­னால் கலைப்­ப­தற்கு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு முன்­வ­ராது என்­கிற அதீத நம்­பிக்கை கார­ண­மா­கவே ஆட­சி­யா­ளர்­கள் இப்­படி நடந்­து­கொள்­கி­றார்­கள். எனவே ஆட்­சி­யைத் தக்க வைப்­ப­தற்கு ஆத­ர­வ­ளித்­துக்­கொண்டு நாடா­ளு­மன்­றத்­தில் உச்­சக் குர­லில் கூட்­ட­மைப்­பி­னர் சீறு­வ­தால் பயன் ஏதும் ஏற்­ப­டப்­போ­வ­தில்லை. அது வெறும் வாக்கு அர­சி­ய­லுக்கு மட்­டுமே உத­வக்­கூ­டும். தமிழ்த் தலை­வர்­கள் இதனை உணர்ந்து எதிர்­கா­லத்­தில் அர­சி­யல் காய்­களை நகர்த்த முன்­வ­ர­வேண்­டும்.

You might also like