உரிமையாளர்களிடம்- காணிகள் கையளிப்பு!!

கிளிநொச்சி மாவட்டத்தில் படையினரால் விடுவிக்கப்பட்ட காணிகளில் ஒரு பகுதி, உரிமையாளர்களிடம் வடக்கு ஆளுநரால் இன்று கையளிக்கப்பட்டது.

வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில், கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று சிறப்புக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதில் வடமாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களினதும் செயலர்கள் மற்றும் பிரதேச செயலர்கள் கலந்து கொண்டன்.

இதன் போது கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மையில் படையினரால் விடுவிக்கப்பட்ட 39 ஏக்கர் காணிகளில் 24 ஏக்கர் காணிகள் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.

You might also like