உரு­ளைக் கிழங்­குக்குள் – உல­கப்­போர் குண்டு!!

சீனா­வின் தன்­னாட்­சிப் பிர­தே­ச­மான ஹொங்­காங்­கில் பிரான்­ஸி­லி­ருந்து இறக்­கு­ம­தி­யான உரு­ளைக்­கி­ழங்­கு­க­ளு­டன் முத­லாம் உல­கப்­போ­ரில் பயன்­ப­டுத்­தப்­பட்ட கைக்­குண்டு ஒன்­றும் இருந்­துள்­ளது. ஹொங்­காங்­கின் ‘நியூ’ பிராந்­தி­யத்­தில் உள்ள சாய் குங் மாவட்­டத்­தில் தின்­பண்­டங்­கள் செய்­யும் தொழிற் சா­லை­யி­லேயே இந்­தக் கைக்­குண்டு கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

உரு­ளைக்­கி­ழங்­குக்­குள் கைக்­குண்டு கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. அங்கு பதற்­றத்தை உரு­வாக்­கி­யது. சம்­பவ இடத்­துக்கு விரைந்த பொலி­சார் மற்­றும் வெடி­குண்டு செய­லி­ழப்பு நிபு­ணர்­கள் அந்­தக் கைக்­குண்­டைச் சோதனை செய்த பின்னர் அது முத­லாம் உல­கப் போரில் பயன்­ப­டுத்­தப்­பட்­டது என்று தெரி­வித்­த­னர். பின்­னர் அதைச் செய­லி­ழக்­கச் செய்­த­னர்.

You might also like