உல­கக்­கிண்­ணத் தொடர்­தான்  எதிர்­கா­லத்தை முடி­வு­செய்­யும்

ரஷ்யாவில் நாளை ஆரம்­ப­மா­கும் உல­கக்­கிண்­ணத் தொடர்­தான் தனது எதிர்­கால கால்­பந்­தாட்ட வாழ்க்­கையை முடி­வு­செய்­யும் என்று தெரி­வித்­தார் ஆர்­ஜென்­ரீனா அணி­யின் தலை­வ­ரும் நட்­சத்­திர வீர­ரு­மான லியோ­னல் மெஸ்ஸி.

உல­கக்­கிண்­ணத் தொடர் தொடர்­பாக ஸ்பெய்ன் செய்தி நிறு­வ­ன­மொன்­றுக்கு வழங்­கி­யுள்ள செவ்­வி­யி­லேயே மெஸ்ஸி இவ்­வாறு குறிப்­பிட்­டார்.
உல­கக்­கிண்­ணத் தொட­ரில் நாங்­கள் எவ்­வ­ளவு தூரம் செல்­லப் போகி­றோம், எப்­படி முடிக்­கப் போகி­றோம் என்­பதை பொறுத்­து­தான் எனது பன்­னாட்­டுக் கால்­பந்து வாழ்க்கை அமை­யும்.

மூன்று தட­வை ­கள் கிண்­ணம் வெல்­லக்­கூ­டிய வாய்ப்­புக்­களை நாங்­கள் இழந்­துள்­ளோம். அப்­போது செய்­தி­யா­ளர் சந்­திப்­பின்­போது கடி­ன­மான தரு­ணங்­களை எதிர்­கொண்­டோம். ரஷ்ய உல­கக் கி ண் ணத் தொட­ருக்கு பல்­வேறு அணி­கள் அதிக நம்­பிக்­கை­யு­டன் வந்­துள்­ளன. அவை அணி­யின் ஒட்­டு­மொத்த திறன் மற்­றும் தனிப்­பட்ட வீரர்­க­ளின் திறன்­க­ளை­யும் எதிர்­நோக்கி உள்­ளன.

எனி­னும் ஆர்­ஜென்­ரீனா அணிக்கு உல­கக்­கிண்­ணத் தொடர் எவ்­வாறு அமை­கி­றத என்­பதை வைத்தே எனது கால்­பந்­தாட்ட வாழ்க்கை அமை­யும்’ என மெஸ்ஸி மேலும் தெரி­வித்­தார். ‘டி’ பிரி­வில் இடம்­பெற்­றள்ள அர்­ஜென்­டினா அணி தனது முதல் ஆட்­டத்­தில் எதிர்­வ­ரும் 16ஆம் திகதி ஐஸ்­லாந்­தைச் சந்­திக்­கி­றது. இதைத் தொடர்ந்து குரோ­சியா, நைஜீ­ரியா அணி­களை எதிர்­கொள்­கி­றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close