ஊடகங்களை விலக்கி வைப்பது தவறு!!

இ லங்­கை­யின் தற்­போ­தைய சூழ்­நி­லை­யில் தீவி­ரம் பெற்­றி­ருக்­கும் சோதனை நட­வ­டிக்­கை­க­ளில் இருந்து ஊட­கங்­களை விலக்கி வைக்­கும் அறி­விப்பு ஒன்றை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன விடுத்­தி­ருக்­கி­றார். பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளின்­போது பாது­காப்­புத் தரப்­பி­னர் அல்­லாத வேறு ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளையோ வேறு தரப்­பி­ன­ரையோ அனு­ம­திக்­கக்­கூ­டாது என்று அரச தலை­வர் சகல பாது­காப்­புத் துறை­யி­ன­ருக்­கும் அறி­வு­றுத்­தல் அனுப்பி வைத்­தி­ருக்­கி­றார் என்று அவ­ரது ஊட­கப் பிரிவு தெரி­வித்­தி­ருக்­கி­றது.

படை­யி­ன­ரின் சோதனை நட­வ­டிக்­கை­கள் தொடர்­பான காட்­சி­கள் ஊட­கங்­க­ளில் காட்­சிப்­ப­டுத்­தப்­ப­டும் சில சந்­தர்ப்­பங்­க­ளில் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளு­டன் தொடர்பு அற்­ற­வர்­கள்­கூட அதில் தொடர்­பு­பட்­ட­வர்­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­ப­டும் ஏது­நிலை உரு­வா­கு­வ­த­னால் அவர்­கள் வச­தி­யீ­னங்­களை எதிர்­கொள்ள வேண்­டி­ய­வர்­க­ளாக இருக்­கின்­றார்­கள் என்று சுட்­டிக்­காட்­டப்­பட்­டதை அடுத்தே அரச தலை­வர் இந்த உத்­த­ர­வைப் பிறப்­பித்­தி­ருக்­கி­றார் என்­றும் கூறப்­பட்­டி ­ருக்­கின்­றது.

ஊட­கங்­க­ளால் இது­போன்ற வச­தி­யீ­னங்­கள் பல­ருக்கு ஏற்­ப­டு­கின்­றன என்­பதை மறுப்­ப­தற்­கில்லை. அது தவிர்க்­கப்­ப­ட­வேண்­டும், தடுக்­கப்­ப­ட­வேண்­டும் என்­ப­தி­லும் மாற்­றுக் கருத்து இல்லை. ஆனால் அதனை முன்­னெ­டுப்­ப­தற்­கான வழி சோத­னை­யி­டங்­க­ளில் இருந்து ஊட­கங்­களை அகற்­று­வ­தல்ல. பொறுப்­பு­வாய்ந்த ஊட­க­வி­ய­லின் தரத்தை மேம்­ப­டுத்தி வளர்ப்­ப­தன் ஊடா­கவே அதனை முன்­னெ­டுக்­க­வேண்­டும்.

அவற்றை விடுத்து சோதனை இடங்­கள், சம்­பவ இடங்­க­ளில் இருந்து ஊட­கங்­களை அப்­பு­றப்­ப­டுத்­த­வது படை­யி­ன­ரின் மனித உரிமை மீறல்­கள் அதி­க­ரிப்­ப­தற்கு வழியை ஏற்­ப­டுத்­தி­வி­டும். அந்த இடங்­க­ளில் ஊட­கங்­கள் இருப்­பது முக்­கி­யம். களத்­தில் ஊட­கங்­கள் இல்­லை­யெ­னில் உண்­மை­கள் மிக இல­கு­வில் மறைக்­கப்­பட்­டு­வி­டும்.
ஊட­கங்­கள் அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்டு நடத்­தப்­பட்ட 30 வருட காலப் போரில் நிகழ்த்­தப்­பட்ட மனித உரிமை மீறல்­கள் மற்­றும் மனித குலத்துக்கு எதி­ரான குற்­றங்­க­ளால் பன்­னாட்டு அரங்­கில் இலங்கை ஏற்­க­னவே தலை­கு­னிந்து நிற்­கின்­றது. சாட்­சி­யங்­கள் இன்றி படை­யி­னர் வகை­தொ­கை­யற்ற மனித உரிமை மீறல்­க­ளில் ஈடு­ப­டு­வ­தற்கு அங்கு ஊட­கங்­கள் இல்­லா­மல் இருந்­த­மை­யும் ஒரு பெரும் கார­ணம் என்­பதை மறுக்க முடி­யாது.

சண்­டைக் காலங்­க­ளில் யாழ்ப்­பா­ணம் போன்ற சண்­டைக் களங்­க­ளில் தப்­பிப் பிழைத்­தி­ருந்த ஊட­கங்­க­ளா­லேயே ஒரு சில மனித உரிமை மீறல்­க­ளை­யா­வது வெளி உல­குக்­குக் கொண்­டு­வர முடிந்­தது என்­பது வர­லாற்று உண்மை.

இலங்­கை­யில் தற்­போது ஏற்­பட்­டுள்ள சூழ­லி­லும் சிறு­பான்மை மக்­கள் முக்­கி­ய­மாக முஸ்­லிம்­க­ளின் மனித உரி­மை­கள் மீறப்­ப­டு­வ­தற்­கான ஆபத்­துக் குறித்த கரி­சனை இருக்­கும்­போது, அத்­த­கைய குற்­றச்­சாட்­டுக்­கள் ஏற்­க­னவே எழுந்­தி­ருக்­கும்­போது ஊட­கங்­க­ளை­யும் சோதனை இடங்­க­ளில் இருந்து அகற்­று­வது படை­யி­ன­ருக்கு மேலும் சுதந்­தி­ரம் வழங்­கி­ய­தைப் போன்­றா­கி­வி­டும்.

அதி­லும் அவ­சர காலத் தடைச் சட்­டம், பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டம் என்­பன படை­யி­ன­ருக்கு வழங்­கி­யி­ருக்­கக்­கூ­டிய வரன்­மு­றை­யற்ற அதி­கா­ரங்­க­ளுக்கு மத்­தி­யில் ஊட­கங்­க­ளை­யும் சோத­னை­யி­டங்­க­ளில் இருந்து அகற்­று­வது சிறு­பான்மை மக்­க­ளுக்கு எதி­ரான ஒடுக்­கு­மு­றை­கள் அதி­க­ரிப்­ப­தற்கு வழியை தீவி­ரப்­ப­டுத்­தி­வி­டும். அத்­த­கை­ய­தொரு நிலமை தற்­போ­தைய சூழலை மேலும் தீவி­ர­மாக்கி வன்­மு­றைக்­கான பாதை­யைப் பலப்­ப­டுத்­தி­வி­டும். எனவே வெளிப்­ப­டைத்­தன்­மை­யான சோத­னை­க­ளும், கைது­க­ளும் நீதி விசா­ர­ணை­க­ளும் உறு­திப்­ப­டுத்­தப்­ப­டு­வது அவசியம்.

You might also like