ஏலக்காயின் அற்புதம் தெரியுமா?

நறுமணப்பொருள்களின் ராணி என்று அழைக்கப்படும் ஏலக்காய் தேநீருக்கு மணம் சேர்க்கவும், உணவுக்கு சுவை கூட்டும் பொருளாகவும், வாசனையூட்டியாகவும் பயன்படுகிறது. உடல் ஆரோக்கியத்துக்கும் பல்வேறு வகையில் பயனளிக்கிறது.

• வாய் துர்நாற்ற பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் நிவாரணம் கிடைக்கும்.

• ஏலக்காயை மென்று சாப்பிட்டால் இருமல், நெஞ்சு சளி போன்றவைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

• ஜீரண உறுப்புகளில் ஏற்படும் பிரச்சினைகளை சீர்படுத்தி, பசியைத் தூண்டும் தன்மை ஏலக்காய்க்கு உள்ளது.

• நரம்பு மற்றும் மூளையை சுறுசுறுப்படைய வைக்கும் தன்மை ஏலக்காய்க்கு உண்டு.

ஏலக்காய் தூளை வெந்நீரில் போட்டு கொப்பளித்தால் தொண்டைக்கட்டு, தொண்டைப்புண் போன்றவைகளில் இருந்து விரைவில் ஆறுதல் கிடைக்கும்.

You might also like