ஐக்­கி­யம் அணியை வென்­றது வளர்­மதி

0 37

யாழ்ப்­பா­ணம் கால்­பந்­தாட்ட லீக்­கின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்­னிட்டு 21 வய­துப்­பி­ரிவு அணி­க­ளுக்கு இடை­யில் நடத்­தப்­பட்­டு­வ­ரும் கால்­பந்­தாட்­டத் தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டத்­தில் வளர்­மதி அணி வெற்­றி­பெற்­றது.

அரி­யாலை கால்­பந்­தாட்­டப் பயிற்சி நிலைய மைதா­னத்­தில் இடம்­பெற்ற இந்த ஆட்­டத்­தில் வளர்­மதி விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து அரி­யாலை ஐக்­கி­யம் விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது.

கோல்­கள் இல்­லா­மல் முடி­வுக்கு வந்­தது முதல் பாதி.
இரண்­டாம் பாதி ஆட்­டத்­தில் வளர்­மதி விளை­யாட்­டுக் கழக அணி­யின் சார்­பில் ஹரிஸ் இரண்டு கோல்­க­ளைப் பதிவு செய்­தார். ஆட்­ட­நேர முடி­வில் 2:0 என்ற கோல் கணக்­கில் வளர்­மதி அணி வெற்­றி­ பெற்­றது.

You might also like