ஐக்­கி­யம் அணி அசத்­தல் வெற்றி

0 39

யாழ்ப்­பா­ணம் கால்­பந்­தாட்ட லீக்­கின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்­னிட்டு நடத்­தப்­பட்ட கால்­பந்­தாட்­டத் தொட­ரில் நேற்­று­ இடம்­பெற்ற ஆட்­டத்­தில் யாழ்ப்­பா­ணம் ஐக்­கிய விளை­யாட்­டுக் கழக அணி வெற்­றி­பெற்­றது.

அரி­யாலை கால்­பந்­தாட்டப் பயிற்சி நிலைய மைதா­னத்­தில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை நண்கல் 12.45 மணிக்கு இடம்­பெற்ற ஆட்­டத்­தில் யாழ்ப்­பா­ணம் ஐக்­கிய விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து சென். றொக்ஸ் விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது. முதற்­பாதி ஆட்­டத்­தில் சென். றொக்ஸ் அணி 1:0 என்ற கோல் கணக்­கில் முன்­னிலை வகித்­தது. ஹமில்­டன் றொக்­ஸின் கோலைப் பதி­வு­செய்­தார்.

இரண்­டாம் பாதி ஆட்­டத்­தில் யாழ்ப்­பாண ஐக்­கிய விளை­யாட்­டுக் கழ­கத்­தின் சார்­பில் அப்­றின் கோலொன்­றைப் பதி­வு­செய்­தார்.

நிர்­ண­யிக்­கப்­பட்ட நிமி­டங்­க­ளில் இரண்டு அணி­க­ளும் தலா ஒரு கோலைப் பதி­வு­செய்­ததை அடுத்து சம­நி­லைத் தவிர்ப்பு உதை­க­ளின் மூலம் வெற்­றி­யைத் தீர்­மா­னிக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. முடி­வில் 3:1 என்ற கோல் கணக்­கில் ஐக்­கிய அணி வெற்­றி­பெற்­றது.

You might also like