side Add

ஒரு சடலம் தகனம் செய்ய- ஆயிரம் ரூபா கட்டணம்!!

யாழ்ப்பாணம் வலி.தென்மேற்கு மானிபப்ாய் பிரதேசத்திலுள்ள இந்து மயானங்களில் சடலங்களைத் தகனம் செய்வதற்கு இனிக் கட்டணங்கள் அறவிடப்படும்.

ஒரு சடலம் தகனம் செய்வதற்கு ஜனவரி மாத்தில் இருந்து ஆயிரம் ரூபா வரி அறவிட வேண்டும் என்று பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வலி.தென்மேற்கு பிரதேரசத்தில் 14 இந்து மயானங்கள் இருக்கின்றன.ஒரேயொரு மயானத்தில் மட்டும் (மானிப்பாய் பிப்பிலி மயானம்) சடலத்தை தகனம் செய்வதற்கு பிரதேச சபையினால் பணம் அறவிடப்பட்டு வருகிறது.

இப்பிரதேசத்திலுள்ள பெரும்பாலான மயானங்கள் பல வருடங்களாக அபிவிருத்தி செய்யப்படாமையினால் காடு போல் காட்சியளிக்கின்றன.

அத்துடன் மழை காலங்களில்,எரிகொட்டகைகள் இல்லாததனால் சடலங்களைத் தகனம் செய்வதில் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இந்த நிலை குறித்து பிரதேச சபைக்கு சுட்டிக்காட்டிய பொது மக்கள் மயானங்களை அபிவிருத்தி செய்து தருமாறு கோரியிருந்தனர்.

இதற்கமைய மயானங்கள் பல லட்சம் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இதையடுத்து பிரதேச சபையின் வருமானத்தை கருத்திற்கொண்டு ஜனவரி மாதத்தில் இருந்து ஒரு சடலம் தகனம் செய்வதற்கு ஆயிரம் ரூபா வரி அறவிடவேண்டும் என்று சபைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

You might also like