கரு­ணாவை கைது­செய்­யு­மாறு ஐ.தே.கட்சி எம்.பி. வலி­யு­றுத்து

மட்­டக்­க­ளப்பு வவு­ண­தீ­வில் பொலி­ஸார் இரு­வர் சுட்­டுக் கொல்­லப்­பட்ட சம்­ப­வம் தொடர்­பில் கருணா அம்­மான் என்று அழைக்­கப்­ப­டும் முன்­னாள் பிர­தி­ய­ மைச்­சர் விநா­ய­க­மூர்த்தி முர­ளி­த­ரனை உட­ன­டி­யாக கைது­செய்ய வேண்­டும் என்று ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விஜே­பால ஹெட்­டி­யா­ராச்சி தெரி­வித்­தார்.

நாடா­ளு­மன்­றம் நேற்­றுப் புதன்­கி­ழமை சபா­நா­ய­கர் கரு­ஜ­ய­சூ­ரிய தலை­மை­யில் காலை 10.30 மணி க்கு கூடி­யது. நாட்­டின் அர­சி­யல் நில­வ­ரங்­கள் தொடர்­பில் சபை­ஒத்­தி­வைப்புத் தீர்­மா­னத்தை மக்­கள் விடு­தலை முன்­னணி கொண்டு வந்­தி­ருந்­தது. அந்த விவா­தத்­தில் பங்­கேற்று உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது;

மட்­டக்­க­ளப்பு வவு­ண­தீ­வில் பொலி­ஸார் இரு­வர் கடந்த 30ஆம் திகதி சுட்­டுக் கொல்­லப்­பட்­ட­னர். அதற்கு இரண்டு தினங்­க­ளுக்கு முன்­னர் கருணா அம்­மான் தனது கீச்­ச­கத்­தில்; 2004ஆம் ஆண்­டுக்கு முன்­னர் தான் யாரென்­பது தெரி­யுமா? எனக் கேட்­டி­ருந்­தார். இந்த நிலை­யி­லேயே பொலி­ஸார் இரு­வ­ரும் கொல்­லப்­பட்­டுள்­ள­னர். இது­தொ­டர்­பில் கருணா அம்­மானை உட­ன­டி­யாக அரசு கைது­செய்ய வேண்­டும்.

தல­தா­மா­ளிகை மீதான தாக்­கு­தல், அரந்­த­லாவை பிக்­கு­கள் படு­கொலை, மட்­டக்­க­ளப்­பில் 400இற்­கும் மேற்­பட்ட பொலி­ஸார் படு­கொ­லை­யென பல கொலை­க­ளு­டன் தொடர்­பு­பட்­ட­வர் கருணா அம்­மான். அவரை கடந்த அரசு பாது­காத்­தது. சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யில் உப தலை­வ­ராக்­கி­யது. பிரதி அமைச்­சர் பதவி கொடுத்­தது. அவ­ருக்கு பாது­காப்­பும் வழங்­கி­யது.

மீண்­டும் புலி­கள் தலைத்­தூக்க இட­ம­ளிக்க முடி­யாது. கருணா அம்­மானை உட­ன­டி­யா­கக் கைது­செய்ய நட­வ­டிக்­கை­யெ­டுக்க வேண்­டும் – என்­றார். தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் புல­னா ய்­வுப் பிரி­வுத் தலை­வர் பொட்டு அம்­மான் நோர்­வே­யில் உயி­ரோடு இருப்­ப­தாக கருணா அம்­மான் தெரி­வித்த கருத்­துத் தொடர்­பில் அவ­ரி­டம் விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டும் என்று மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யின் தலை­வர் அனு­ர­கு­மார திசாநாயக்கவும் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தார்.

You might also like