கருணாவின் பதற்றம் எத்தகையது…?

விடு­த­லைப் புலி­கள் அமைப்­பில் கருணா அம்­மான் என்­கிற பெய­ரு­டன் பிர­ப­ல­மா­கி­யி­ ருந்­தா­லும், புலி­கள் தோற்­க­டிக்­கப்­பட்­ட­தன் பின்­னர் ‘துரோகி’ என்ற பெயர்ப் பிர­ப­லமே இன்று வரை கருணா என்­கிற விநா­யக மூர்த்தி முர­ளி­த­ர­னுக்கு மிகப் பொருத்­தப்­பா­டு­டை­ய­தா­கத் தமிழ் மக்­கள் மத்­தி­யில் இருந்­து­வ­ரு­கி­றது.

புலி­கள் இயக்­கத்­தில் அவர் அங்­கம் வகித்த காலத்­தில் புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ர­ னின் நேசம் மிக்க தள­ப­தி­யா­க­வும், நம்­பிக்­கைக்­கு­ரிய தள­ப­தி­யா­க­வும் இருந்­த­வர். வன்­னிப் பெரு­நி­லப்­ப­ரப்பை விட்­டுப் பேச்சு மேடை­க­ளுக்­காக வெளியே பய­ணப்­பட்ட சம­யங்­க­ளில் தன்­னு­டைய போக்கை மாற்றி மிக நீண்­ட­தும், உன்­னத இலட்­சி­யத்­தைக் கொண்­ட­து­மான புலி­கள் அமைப்பை நலி­வு­றச் செய்­வ­தற்­கான கைங்­க­ரி­யங்­க­ளில் ஈடு­பட்டு, புலி­கள் அமைப்­பால் விரட்­டி­ய­ டிக்­கப்­பட்டு, அரச ஆத­ர­வுக் கரத்­துக்­குள் பக்­கு­வப்­பட்­டுக்­கொண்­டது எனச் சங்­கி­லித் தொட­ராக நிகழ்ந்த சம்­ப­வங்­கள் அனைத்­தும் அனை­வ­ரும் அறிந்த வர­லா­றா­கி­விட்­டன.

கருணா – ரணில் ஊடாட்­டம்
கரு­ணா­வின் மாற்­றத்­துக்­கான முக்­கிய சூத்­தி­ர­தா­ரி­யாக ரணில் விக்­கி­ர­ம­சிங்க இருந்­த­மை­யும் தமிழ் மக்­க­ளுக்கு மாத்­தி­ர­மன்றி பன்­னாட்டு மற்­றும் உள்­ளூர் அர­சி­யல் அவ­தா­னி­கள் பல­ரும் அறிந்த, தெரிந்த விட­யங்­கள்.
இவ்­வா­றா­கப் புலி­கள் அமைப்­பி­லி­ருந்து கருணா பிரிந்­த­தும், புலி­கள் அமைப்­புத் தோற்­க­டிக்­கப்­பட்­ட­தும், அதன் பின்பு அரச விசு­வா­சி­யா­கிக் கரு­ணா­வுக்கு அமைச்­சுப் பத­வி­யும், பின்­னர் அவர் தனிக் கட்சி அமைத்து அதன் நிலை­யும்(?) என்று போய்க் கொண்­டி­ருக்க… விடு­த­லைப் புலி­க­ளின் புல­ னாய்­வுத் துறைத் தலை­வ­ரான பொட்டு அம்­மான் உயி­ரு­டன் இருப்­ப­தா­க­வும், தற்­கா­லத்­தில் நிகழ்ந்த கொலை­கள் இரண்­டுக்­கும் அவ­ருக்­கும் தொடர்­பி­ருப்­ப­தா­க­வும் தக­வல் வெளி­யிட்­டி­ருக்­கி­றார் கருணா.

கருணா வெளி­யிட்ட அவ­சர தக­வல்
மட்­டக்­க­ளப்பு – வவு­ண­தீ­வுப் பகு­தி­யில் இரண்டு பொலி­சாரை இனம் தெரி­யாத ஆயு­த­தா­ரி­கள் சுட்­டுக் கொன்­றி­ருக்­கின்­ற­னர். இந்­தச் சூட்­டுச் சம்­ப­வத்­துக்­கும் விநா­ய­க­மூர்த்தி முர­ளி­த­ரன் என்­கிற கரு­ணா­வுக்­கும் தொடர்பு இருக்­க­லாம் என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் சில­ரால் நாடா­ளு­மன்­றில் சுட்­டிக் காட்­டப்­பட்­டி­ருந்­தது. இந்த நிலை­யில்­தான் கருணா புதிய தக­வல் ஒன்றை வெளி­யிட்­டி­ருக்­கி­றார்.

அதா­வது விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் புல­னாய்­வுப் பிரி­வுத் தலை­வ­ரா­க­வி­ருந்த பொட்டு அம்­மான் இறு­திப் போரில் இறக்­க­வில்லை என்­றும் அவர் நேர்­வே­யில் உயி­ரு­டன் இருக்­கி­றார் என்­றும் தெரி­வித்­தி­ருக்­கி­றார். அதா­வது வவு­ண­தீ­வுப் பொலி­சார் கொலை­யில் தன் மீது இருந்த சந்­தே­கத்தை அப்­பால் நகர்த்தி, அதைப் பொட்­டம்­மான் என்­கிற புலி­க­ளின் புல­னாய்­வுத் தலை­வரை நோக்கி நகர்த்தி அவர் உயி­ரு­டன் இருப்­ப­தால், குறித்த கொலை­க­ளுக்­கும் முன்­னாள் போரா­ளி­க­ளுக்­கும் தொடர்­பி­ருக்­கின்­றது என்று முடிச்­சுப்­போட்­டி­ருக்­கி­றார். இதன் மூலம் முன்­னாள் போரா­ளி­கள் விட­யத்­தி­ லான அரச தலை­யீட்­டில் இறுக்­கத்­தைக் கொண்­டு­வ­ரு­வ­தற்கு அவர் முயற்­சிப்­ப ­தா­கவே அவ­ரு­டைய இந்­தக் கருத்து தமிழ் மக்­கள் மத்­தி­யில் நோக்­கப்­பட்­டுள்­ளது.

கரு­ணா­வின் துயர நிலை
புலி­கள் அமைப்­பி­லி­ருந்து பிரிந்த கையு­டன் தமிழ் மக்­க­ளி­ட­மி­ருந்து அந்­நி­ய­மா­கிப்­போய்­விட்ட கரு­ணா­வுக்கு அந்­தக் காலத்­தில் ஆட்­சி­யில் இருந்த அர­சின் அர­வ­ணைப்பு இன்று வரை அதே­ய­ள­வு­டன் இருந்து வரு­கி­றது என்று சொல்ல முடி­யாது. எப்­ப­டி­யி­ருப்­பி­னும் முக்­கிய வர­லாற்­றுத் திருப்­பத்தை ஏற்­ப­டுத்­திய ஒரு­வர் என்­கிற வகை­யில் அவரை அந்­தச் சமூ­கம் கொண்­டா­டவே செய்­யும்.

ஆனால், தமிழ் மக்­கள் மத்­தி­யில் அவ­ருக்கு அற்ப, சொற்ப செல்­வாக்கோ, மதிப்போ இருப்­ப­தாக அவர் கூடக் கனவு காண­மாட்­டார் என்­பது தமிழ்ச் சமூ­கத்துக்கு வெளிப்­ப­டை­யா­கத் தெரி­கின்ற விட­யம். அன்­றைய அர­சின் ஆட்­சிக் காலத்­தில் பிரதி அமைச்­ச­ராக இருந்­தமை மாத்­தி­ர­மன்றி, ஓட்­டுக் குழு­வா­கச் செயற்­பட்­டுப் பல சட்­ட­வி­ரோ­தச் செயல்­க­ளி­லும், அரா­ஜ­கங்­க­ளி­லும் ஈடு­பட்­ட­தா­கக் கூடப் பர­வ­லா­கக் குற்­றச்­சாட்­டுக்­கள் உள்­ளன.

இந்த நிலை­யில் சாதா­ரண மக்­க­ளோடு மக்­க­ளாக அவ­ரால் தமிழ் மக்­க­ளோடு சாதா­ர­ண­மா­கக் கலந்­து­ற­வா­டி­விட முடி­யாது என்­ப­தும் வெளிப்­படை. மக்­கள் பிர­தி­நி­தி­கள் என்று சொல்­லிக் கொள்­கின்ற எந்­த­வொரு தமிழ்ப் பிர­தி­நிதி­க­ளால்­கூ­டத் தமக்­கான பாது­காப்­பில்­லா­மல் மக்­கள் மத்­தி­யில் நட­மாட முடி­யாத நிலை­யி­ருக்­கின்ற காலத்­தில் கரு­ணா­வின் இன்­றைய நிலை கவலை தரும் ஒன்­றா­கவே நிச்­ச­யம் அமை­யும்.

தற்­போது பொட்­டம்­மான் உயி­ரு­டன் இருப்­ப­தா­க­வும், வவு­ண­தீ­வுப் பொலி­சார் கொலை விட­யத்­தில் அதைப் பின்­ன­ணி­யாக்­கு­வ­தற்கு அவர் முயல்­வ­தும்­கூ­டத் தமிழ் மக்­க­ளுக்கு நகைப்­புக்­கி­ட­மான ஒன்­றா­கவே இருந்­தி­ருக்­கி­றது. கார­ணம், அவர் சொல்­வ­து­போல பொட்­டம்­மான் உயி­ரு­டன் இருப்­பது உண்­மை­யாக இருந்­தால், அவ­ரு­டைய முதன்மை இலக்­கு­கள் எப்­ப­டி­யி­ருக்­கும் என்­ப­து கரு­ணா­வுக்கே முத­லில் வெளிச்­ச­மா­கும். சில­வேளை, இந்­தக் கருத்­துக் கரு­ணா­ கண்ட கனவின் பதற்­ற­மா­கக்­ கூட இருக்­க­லாம்.

You might also like