side Add

கர்ப்பகாலமும் பிரச்சினைகளும்!!

தைரொ­யிட் பிரச்­சி­னை­யுள்ள  பெண்­ணொ­ரு­வர் கர்ப்ப காலத்­தில் எதிர்­நோக்­கும் பிரச்­சி­னை­கள், பிரச்­சி­னை­க­ளைத் தவிர்க்க வேண்­டிய வழி­மு­றை­கள் என்­பன தொடர்­பில் மருத்­து­வ­ரொ­ரு­வ­ரு­ட­னான உரை­யா­டல் வடி­வில் இங்கு தரப்­ப­டு­கின்­றன.

கேள்வி : தைரொ­யிட் பிரச்­சி­னை­யுள்ள பெண்­ணொ­ரு­வர் கர்ப்­பம் தரிக்க விரும்­பி­னால் அவ­ருக்கு எவ்­வா­றான ஆலோ­ச­னை­களை வழங்க விரும்­பு­கி­றீர்­கள்.

பதில்: பெண்­ணொ­ரு­வ­ருக்­குள்ள தைரொ­யிட் பிரச்­சினை என்­பது தைரொ­யிட் சுரப்­புக் குறை­வாக இருக்­கும் நிலை­யா­கவோ அல்­லது தைதொ­யிட் சுரப்பி அதி­க­ள­வில் சுரப்­ப­தால் ஏற்­ப­டும் பிரச்­சி­னை­ய­கவோ இருக்­க­லாம். தைரொ­யிட் சுரப்­புக் குறை­வாக உள்­ளோர் சோம்­பல், அதிக நித்­திரை, உடற்­ப­ரு­மன் அதி­க­ரித்­தல், மலச்­சிக்­கல், மாத­வி­டா­யின்­போது அதி­க­ளவு குருதி வெளி­யே­று­தல் மற்­றும் குளிர் தாங்க முடி­யா­தி­ருத்­தல் போன்ற அறி­கு­றி­க­ளைக் கொண்­டி­ருப்­பர். இவர்­க­ளுக்­குக் கழுத்­துப் பகு­தி­யில் கழ­லையோ வீக்­கமோ இருக்­க­லாம். அல்­லது இல்­லா­தி­ருக்­க­லாம்.

இவ்­வா­றான அறி­கு­றி­க­ளைக் கொண்­டி­ருப்­போர் தங்­க­ளது குரு­தி­யில் உள்ள தைரொக்­ஸின் ஓமோ­னின் அள­வைப் பரி­சோ­தித்­துப் பார்ப்­பது மிக­வும் அவ­சி­ய­மா­கும். தைரொ­யிட் ஓமோ­னின் அளவு குறை­வாக இருக்­கும்­போது தைரொக்­ஸின் மருந்தை உள்­ளெ­டுத்­தல் மிக­வும் அவ­சி­யம். மருத்­து­வர் ஆலோ­ச­னைப்­படி மேல­திக பரி­சோ­த­னை­களை மேற்­கொள்­ள­வேண்­டிய தேவை­யும் ஏற்­ப­ட­லாம். தைரொ­யிட் சுரப்­புக் குறை­வான நோயுள்ள (hypothyrodism) பெண்­கள் கர்ப்­பம் தரிக்க முன்­னரே தங்­கது நோயைக் கட்­டுப்­பாட்­டில் வைத்­தி­ருத்­தல் மிக அவ­சி­யம்.

இவ்­வாறு இல்­லா­மல் கர்ப்­பம் தரிக்­கும்­போது பல வகை­யான பிரச்­சி­னை­கள் ஏற்­ப­ட­லாம். இதே­போல தைரொ­யிட் சுரப்பு அதி­க­மா­கச் சுரக்­கும்­போது பட­ப­டப்பு, அதி­க­ளவு வியர்த்­தல், உடற்­ப­ரு­மன் குறை­தல், அடிக்­கடி மலம் கழித்­தல் (வயிற்­றோட்­டம் போல) மாத­வி­டா­யின்­போது குருதி வெளி­யேற்­றம் குறை­வ­டை­தல் அல்­லது மாத­வி­டாய் தாம­த­மா­தல் மற்­றும் அதிக வெப்­பத்­தைத் தாங்க முடி­யாமை போன்ற அறி­கு­றி­கள் ஏற்­ப­டும்.

இவ்­வா­றான குணங்­கு­றி­கள் இருக்­கும்­போது தமது குரு­தி­யில் உள்ள தைரொ­யிட் ஓமோ­னின் அளவை வைத்­திய ஆலோ­ச­னைப்­படி பரி­சோ­தித்­துச் சிகிச்­சை­யைப் பெற்­றுக்­கொள்ள வேண்­டும். இவ்­வா­றான பிரச்­சி­னை­யு­டை­யோர் கழுத்­தில் வீக்­கத்­து­டன் அல்­லது கண்­கள் வெளித் தள்­ளிப் பல­வ­கை­யான கண் தொடர்­பான பிரச்­சி­னை­க­ளு­டனோ இருக்­க­லாம். தைரொ­யிட் சுரப்பு அதி­க­மா­கச் சுரப்­ப­தைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கும் சிறப்­பான மருத்­துவ வச­தி­கள் கிடைக்­கின்­றன. இவ்­வா­றான நோயா­ளர்­க­ளுக்­குக் கர்ப்­பம் தரிக்­கும் முன்­னர் நோயைக் கட்­டுப்­பாட்­டி­னுள் கொண்டு வரு­தல் வேண்­டும்.

தைரொ­யிட் சுரப்பு குறை­வாக இருத்­தல்

கேள்வி: தைரொ­யிட் சுரப்பு குறை­வா­க­வுள்ள பெண்­ணொ­ரு­வர் கர்ப்­பம் தரித்த பின்­னர் அவ­ருக்­கான ஆலோ­ச­னை­கள் என்ன?

பதில்: தைரொ­யிட் சுரப்­புக் குறை­வா­க­வுள்ள பெண்­ணொ­ரு­வர் தான் கர்ப்­ப­மா­க­வுள்­ளேன் என உறுதி செய்­த­வு­ட­னேயே (சிறு­நீ­ரில் HCG பரி­சோ­தனை மூலம்) வைத்­திய ஆலோ­ச­னை­யைப் பெற்று தைரொக்­ஸின் மருந்­தின் அளவை 25 மைக்ரோ கிரா­மி­னால் அதி­க­ரித்து உள்­ளெ­டுத்­தல் அவ­சி­யம். கர்ப்ப காலத்­தில் முதல் 12 வாரங்­க­ளும் சிசு­வின் வளர்ச்­சி­யில் முதன்­மை­யான பங்கை வகிக்­கின்­றன. இந்­தக் காலத்­தி­லேயே குழந்­தை­யின் மூளை மற்­றும் உடல் உறுப்­புக்­க­ளின் வளர்ச்­சி­யா­னது முதன்மை பெற்­றி­ருக்­கும். எனவே இந்­தக் கால­கட்­டத்­தில் தேவை­யான அளவு தைரொக்­ஸின் குளி­சையை வைத்­திய ஆலோ­ச­னைப்­படி உள்­ளெ­டுத்­தல் அவ­சி­யம். ஏனெ­னில் கர்ப்ப காலத்­தில் தைரொ­யிட் ஓமோ­னின் அள­வு­க­ளில் பல­வி­த­மான மாற்­றங்­கள் ஏற்­ப­டு­கின்­றன. குரு­தி­யி­லுள்ள தைரொ­யிட் ஒமோ­னின் அள­வைக் குறித்த காலத்­துக்­கொரு முறை பரி­சோ­தித்­துக் குளி­சை­யின் அள­வைத் தேவை­யேற்­ப­டின் மாற்றி உள்­ளெ­டுத்­தல் வேண்­டும். தைரொ­யிட் மருந்­தைச் சரி­யான அள­வில் உள்­ளெ­டுக்­கா­த­வி­டத்து பிறக்­கப்­போ­கும் குழந்­தைக்­கும் தாய்க்­கும் பல வகை­யான பிரச்­சி­னை­கள் ஏற்­ப­ட­லாம்.

தைரொ­யிட் சுரப்பு அதி­கம் இருத்­தல்

கேள்வி: தைரொ­யிட் சுரப்பு அதி­க­மா­க­வுள்ள பெண்­ணொ­ரு­வர் கர்ப்­பம் தரித்த பின்­னர் அவ­ருக்­கான ஆலோ­ச­னை­கள் என்ன?

பதில்: இவ்­வா­றான நோயா­ள­ருக்­குப் பொது­வாக ”carbimazole” என்ற மருந்தே வழங்­கப்­ப­டு­கி­றது. இந்த மருந்­தைக் கர்ப்­பம் தரித்­தது முதல் 12 வாரங்­க­ளுக்கு உள்­ளெ­டுத்­தல் கூடாது. இதற்­குப் பதி­லாக Propythiouarcil என்ற மருந்தை உள்­ளெ­டுத்­தல் வேண்­டும். கர்ப்ப காலத்­தின் 12 வாரங்­கள் கழித்த பின்­னர் மேற்­படி ”carbimazole” மருந்தை உள்­ளெ­டுக்க முடி­யும். கர்ப்ப காலத்­தில் உள்­ளெ­டுக்க வேண்­டிய மருந்­தின் அள­வா­னது மாறு­பட நேரி­டு­கி­றது. எனவே குறிக்க காலத்­துக்­கொ­ரு­முறை குரு­திப் பரி­சோ­த­னையை மேற்­கொண்டு வைத்­திய ஆலோ­ச­னைப்­படி மருத்­தின் அள­வைத் தேவை­யேற்­ப­டின் மாற்றி உள்­ளெ­டுத்­தல் அவ­சி­யம். தைரொ­யிட் சுரப்பு அதி­க­மாக உள்­ளோ­ருக்­கான மருத்­து­வச் சிகிச்­சையை நோக்­கின் பொது­வாக 18 தொடர்க்­கம் 24 மாதங்­க­ளுக்கே குளிசை வழங்­கப்­ப­டு­கி­றது. குண­ம­டை­யா­த­ வர்­க­ளுக்கு மேல­திக சிகிச்சை வழி­மு­றை­கள் கிடைக்­கப்­பெ­று­கின்­றன.

தைரொ­யிட் இருக்­கும் நப­ரொ­ரு­வர்
தெரிந்­தி­ருக்க வேண்­டிய வழி­முறை

கேள்வி: தைரொ­யிட் பிரச்­சி­னை­யுள்ள நோயா­ள­ருக்­குக் குறிப்­பாக கர்ப்­ப­வ­தி­க­ளுக்­குச் சுருக்­க­மாக என்ன ஆலோ­ச­னை­க­ளைக் கூற விரும்­பு­கி­றீர்­கள்?

பதில்: அவர்­கள் தெரிந்­தி­ருக்க வேண்­டிய நடை­மு­றை­கள் முதன்­மை­யாக நோக்­கப்­பட வேண்­டி­யவை. அவை வரு­மாறு:
தைரொ­யிட் நோயின் தன்மை, அதற்­கான குளிசை மருந்­து­க­ளின் அளவு மற்­றும் குரு­திப் பரி­சோ­தனை (தைரொ­யிட் ஒமோன்) செய்­யும் கால இடை­வெளி போன்­றன கர்ப்­ப­கா­லத்­தில் சாதா­ரண நோயா­ள­ரைப் போன்­றல்­லாது வேறு­ப­டு­கின்­றன.

மருத்­து­வர் பரிந்­துரை செய்து வழங்­கு­கின்ற மருந்­தைச் சரி­யான முறை­யில் கிர­ம­மாக உள்­ளெ­டுத்­தல் வேண்­டும்.கர்ப்ப காலத்­தில் 12 வாரங்­கள் மிக முக்­கி­ய­மான கால­கட்­டம் இந்­தக் காலப்­ப­கு­தி­யின்­போதே பிறக்­கப் போகும் குழந்­தை­யின் மூளை வளர்ச்சி மற்­றும் உடல் உறுப்­பு­க­ளின் வளர்ச்சி என்­பன அதி­கம் ஏற்­ப­டு­கின்­றன. எனவே கர்ப்ப காலம் முழு­மை­ய­டை­யும். குறிப்­பாக முதல் 12 வாரங்­க­ளும் தேவை­யான அளவு மருந்தை வைத்­திய ஆலோ­ச­னைப்­படி உள்­ளெ­டுக்க வேண்­டும். இதன்­மூ­லம் ஏற்­ப­டும் பிரச்­சி­னை­க­ ளைத் தவிர்த்­துக்­கொள்ள முடி­யும்.

சில நோயா­ளர்­க­ளுக்­குக கழுத்­தில் வீக்­கம் அல்­லது கட்டி (Goitre/Nodule) இருந்­தால் கர்ப்­பம் தரிக்க முன்­னரோ அல்­லது பின்­னரோ வேறு பரி­சோ­த­னை­களை மேற்­கொள்ள வேண்­டிய தேவை ஏற்­ப­ட­லாம். குறிப்­பாக, ஸ்கான் பரி­சோ­தனை இழை­யப் பரி­சோ­தனை (FNAC) போன்­ற­வற்­றைக் குறிப்­பி­ட­லாம். தைரொ­யிட் சுரப்­பி­யில் அரி­தா­கப் புற்­று­நோய் ஏற்­ப­ட­வும் வாய்ப்­புண்டு.
இறு­தி­யா­கக் கர்ப்­பி­ணி­யொ­ரு­வர் கர்ப்ப காலத்­தின்­போது மிக­வும் சிரத்­தை­யு­டன் தனது தைரொ­யிட் பிரச்­சி­னை­ யைக் கவ­னித்­துக்­கொள்­ளு­தல் அவ­சி­யம். இத­னால் கர்ப்­பி­ணிக்­கும் பிறக்­கப்­போ­கும் குழந்­தைக்­கும் ஏற்­ப­டக்­கூ­டிய தேவை­யற்ற பிரச்­சி­னை­க­ளைத் தவிர்த்­துக்­கொள்ள முடி­யும்.

தைரொ­யிட் தொடர்­பான பிரச்­சி­னை­யுள்ள கர்ப்­ப­வ­தி­கள் இது­தொ­டர்­பான நிபு­ணத்­து­வ­மான ஆலோ­ச­னை­களை யாழ்.போதனா வைத்­தி­ய­சாலை அகஞ்­சு­ரக்­கும் தொகுதி (ஓமோன்) சிகிச்சை நிலை­யத்­தில் பெற்­றுக்­கொள்ள முடி­யும்.

நீரி­ழிவு, அகஞ்­சு­ரக்­கும் தொகுதி
சிறப்பு மருத்­துவ நிபு­ணர்,
யாழ்.போதனா மருத்­து­வ­மனை.

You might also like