கர்ப்ப காலமும் – தைரொயிட் பிரச்சினைகளும்!!

0 213

கேள்வி: எனது வயது 30 ஆகும். திரு­மண பந்­தத்­தில் இணைந்து இரண்டு வரு­டங்­கள் பூர்த்­தி­யா­கின்­றன. கர்ப்­பம் தரிப்­பது தாம­த­மாகி வரு­கின்­றது. அண்­மை­யில் மேற்­கொண்ட ‘தைரொ­யிட்’ ஹோர்­மோன் பரி­சோ­த­னை­யின்­படி, தைரொ­யிட் ஹோர்­மோன் சுரப்பு குறை­வ­டைந்­துள்­ள­ தாக குடும்ப மருத்­து­வர் தெரி­வித்­துள்­ளார். இது பற்றி விளக்­கிக் கூற­வும்.

பதில்: கர்ப்­பம் தரித்­தல் தாம­த­மா­வ­தற்கு பல கார­ணங்­கள் இருக்­க­லாம். பெண்­ணொ­ரு­வ­ரின் தைரொ­யிட் ஹோர்­மோன் சுரப்­பா­னது குறை­வாக இருக்­கும்­போது கர்ப்­பம் தரிப்­ப­தில் பிரச்­சி­னை­கள் ஏற்­ப­டும். தைரொ­யிட் சுரப்­பா­னது குறை­வாக இருக்­கும்­போது, ‘உடற்­ப­ரு­மன் அதி­க­ரித்­தல், சோம்­பல், அதிக தூக்­கம், மலச்­சிக்­கல், குளி­ரைத் தாங்­க­மு­டி­யாத தன்மை மற்­றும் மாத­வி­டா­யின் போது அதி­க­ளவு குருதி வெளி­யே­று­தல்’ போன்ற பிரச்­சி­னை­கள் ஏற்­ப­டு­ம்.

இவ்­வா­றான அறி­கு­றி­கள் இருப்­ப­வர்­க­ளும், கர்ப்­பம் தரிப்­ப­தில் பிரச்­சி­னை­களை உடை­ய­வர்­க­ளும் தைரொ­யிட் ஹோர்­மோன் சுரப்பை பரி­சோ­தித்­துப் பார்க்க வேண்­டும். குரு­திப் பரி­சோ­த­னையை மேற்­கொள்­ள­வ­தன் மூலம் இதனை இல­கு­வாக அறிந்­து­கொள்ள முடி­யும். இந்­தப் பரி­சோ­த­னையை மேற்­கொள்­வ­தற்கு உணவு அருந்­தா­மல் இருக்க வேண்­டும் என்­பது அவ­சி­ய­மற்ற அறி­வு­றுத்­தல்.
தைரொ­யிட் சுரப்பு குறை­வாக உள்­ளோர் தைரொக்­ஸின் மாத்­தி­ரையை உள்­ளெ­டுக்க வேண்­டும்.

உங்­க­ளைப் போன்றே கர்ப்­பம் தரிப்­ப­தில் பிரச்­சி­னை­கள் உள்ள பெண்­கள் தைரொக்­ஸின் மாத்­தி­ரையை மருத்­து­வர் கூறிய அளவு பரி­மா­ணத்­தில் உள்­ளெ­டுக்­கும்­போது கர்ப்­பம் தரிக்­கின்ற வாய்ப்பு அதி­க­ரிக்­கின்­றது. கர்ப்­பம் தரிக்க விரும்­பும் பொண்­ணொ­ரு­வர் ‘ரி.எஸ்.எச்’ எனப்­ப­டு­கின்ற தைரொ­யிட் ஹோர்­மோ­னின் அளவை சாதா­ர­ண­மான ஒரு­வரை விட­வும் குறைந்த நிலை­யில் பேணிக் கொள்ள வேண்­டும். தைரொக்­ஸின் மாத்­தி­ரயை மருத்­து­வர் பரிந்­துரை செய்த அள­வில் காலை வேளை­யில் வெறும் வயிற்­றில் உள்­ளெ­டுக்க வேண்­டும். அதன் பின்பு 30 நிமி­டங்­க­ளுக்கு தேநீர் போன்ற ஆகா­ரங்­க­ளையோ, உண­வையோ உள்­ளெ­டுக்­கக்­கூ­டாது.

கர்ப்­ப­வ­தி­யா­னதை உறு­திப்­ப­டுத்­திய பின்­னர் (சிறு­நீ­ரில் ‘எச்.சி.ஜி’ பரி­சோ­த­னையை மேற்­கொள்­ளல்) உட­ன­டி­யா­கவே தைரொக்­ஸின் மாத்­தி­ரை­யின் அளவை அதி­க­ரித்­துக் கொள்ள வேண்­டும். உதா­ர­ண­மாக 25 மில்லி கிராம் அள­வால் குளி­சை­யின் அளவை அதி­க­ரிக்க வேண்­டும்.50மில்லி கிராம் தைரொக்­ஸின் மாத்­திரை எடுப்­ப­வர்­கள் அதனை 75 மில்­லி­கி­ராம் ஆக அதி­க­ரிக்க வேண்­டும். இயன்­ற­ளவு விரை­வாக மருத்­து­வரை நாடி ஆலோ­சனை பெறு­தல் நன்று.

கர்ப்­பத்­தி­லுள்ள சிசு­வின் உடல் மற்­றும் மூளை வளர்ச்­சி­யில் முதல் மூன்று மாதங்­கள் மிக முக்­கி­ய­மான கால கட்­ட­மா­கும். சிசு­வின் வளர்ச்சி தாயின் தைரொக்­ஸின் அள­வி­லேயே தங்­கி­யி­ருக்­கின்­றது. எனவே கர்ப்­ப­வ­தி­யொ­ரு­வர் குறிப்­பிட்ட அள­வில் தைரொக்­ஸினை உள்­ளெ­டுக்­கா­த­ வி­டத்து, குழந்­தை­ யின் உடல் மற்­றும் மூளை வளர்ச்சி பாதிப்­ப­டை­யும் சந்­தர்ப்­பங்­கள் அதி­கம் ஏற்­ப­ட­லாம்.

கர்ப்­ப­கா­லத்­தில் குறிப்­பிட்ட காலப்­ப­கு­திக்கு ஒரு­முறை தைரொ­யிட் ஹோர்­மோ­னின் அள­வைப் பரி­சோ­திக்க வேண்­டும். தேவை ஏற்­ப­டின் தைரொக்­ஸின் மாத்­தி­ரை­யின் அளவை மருத்­து­வ­ரின் ஆலோ­ச­னைப்­படி மாற்­ற­லாம்.

கர்ப்­பம் தரிக்க விருப்­ப­மு­டைய மற்­றும் கர்ப்­பி­ணி­யான பெண்­கள் அவர்­க­ளுக்­குத் தைரொ­யிட் சுரப்­புக்­கு­றை­பாடு இருக்­கு­மி­டத்து, மேற்­கு­றிப்­பிட்ட வித­மாக நோய் தொடர்­பில் கவ­ன­மாக இருக்க வேண்­டும். இதன் ஊடே தாயும், பிறக்­கப் போகும் குழந்­தை­யும் பாதிப்­புக்­கள் ஏது­மின்றி ஆரோக்­கி­ய­மாக வாழலாம்.

நீரி­ழிவு அகஞ்­சு­ரக்­கும் தொகு­தி­யி­யல் விசேட மருத்­துவ நிபு­ணர்,
போதனா மருத்­து­வ­மனை,யாழ்ப்­பா­ணம்.

You might also like