கலாசாரத்தைப் பாதுகாக்க- அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!!

சாதா­ரண அடி­மட்ட மக்­க­ளின் தேவை­க­ளை­யும் உணர்­வு­க­ளை­யும் நன்கு புரிந்­து­கொண்டு அவர்­க­ளின் விமோ­ச­னத்­துக்­காக அர்ப்­ப­ணிப்­பு­டன் பணி­யாற்­றிய முன்­னாள் அர­ச­த­லை­வர் அம­ரர் ரண­சிங்க பிரே­ம­தா­ச­வின் மக­னான இன்­றைய வீட­மைப்பு நிர்­மா­ணத்­துறை அமைச்­சர் தனது தந்­தை­யா­ரின் வழி­யில் பணி­யாற்றி வரு­வதை எமது மக்­க­ளின் சார்­பில் மகிழ்ச்­சி­யு­டன் வர­வேற்­கி­றேன். அப்­ப­டி­யான ஒரு­வர் எமது மக்­கள் சந்­திக்­கும் கலா­சார இடர்­பா­டு­க­ளைப் புரிந்­து­கொண்டு அவற்றை நிவர்த்­திக்­கத் திறந்த மன­து­டன் பணி­யாற்­று­வார் என்­கிற நம்­பிக்­கை­யின் அடிப்­ப­டை­யில் இங்கு சில விட­யங்­களை முன்­வைக்க விரும்­பு­ கின்­றேன்.

ஒவ்­வொரு இனத்­துக்­கும்
கலா­சா­ரத்­தின் முக்­கி­யம்
ஒவ்­வொரு இனத்­துக்­கும் அதன் மொழி­யைப் போலவே பொரு­ளா­தார வாழ்­வைப் போலவே, பாரம்­ப­ரிய வாழி­டத்­தைப் போலவே, கலா­சா­ர­மும் அதன் தனித்­து­வத்தை வெளிப்­ப­டுத்­தும் ஒரு அம்­ச­மா­கும். அவ்­வ­கை­யில் தமிழ் மக்­க­ளுக்­கும் ஒரு தொன்மை வாய்ந்த பெரு­மைக்­கு­ரிய பாரம்­ப­ரி­யம் உண்டு. அப்­ப­டி­யான நிலை­யில் எமது கலா­சா­ரத்­தின் மீது திட்­ட­மிட்டு நடத்­தப்­ப­டும் ஆக்­கி­ர­மிப்பு நட­வ­டிக்­கை­கள் எமது இனத்­தின் இருப்­பையே கேள்­விக்­குள்­ளாக்­கும், கண்­டிக்­கத்­தக்க, தடுத்து நிறுத்­தப்­ப­ட­வேண்­டிய அத்து மீறல்­க­ளா­கும். தொல்­பொ­ருள் திணைக்­க­ளம், வன உயிர்­கள் திணைக்­க­ளம் என்­பன எமது கலா­சார மையங்­க­ளாக விளங்­கும் ஆல­யங்­கள் அமைந்­துள்ள வளா­கங்­களை ஆக்­கி­ர­மித்து அவற்­றைப் பௌத்த பூமி­க­ளா­கக் காட்டி வர­லாற்­றையே மாற்­றி­ய­மைக்க முற்­ப­டு­ கின்­றன. முல்­லைத்­தீவு, மண­லாறு பகு­தி­க­ளில் 30 இடங்­களை அள­வீடு செய்­யும்­படி தொல்­பொ­ருள் திணைக்­க­ளம் நில அள­வைத் திணக்­க­ளத்­தி­டம் கோரி­யுள்­ளது.

இவற்­றில் நெடுங்­கேணி வெடுக்­கு­நாறி மலை லிங்­கேஸ்­வ­ரர் ஆல­யம், நீரா­விப்­பிட்டி பிள்­ளை­யார் ஆல­யம், குருந்­த­ம­ணல் விநா­ய­கர் ஆல­யம், ஒட்­டி­சுட்­டான் தான்­தோன்­றி­ஈஸ்­வ­ரர் ஆல­யம் என்­பன உள்­ள­டங்­கும். வெடுக்­கு­நாறி, குருந்­தூர், நீரா­விப்­பிட்டி என்­பன பௌத்த வழி­பாட்­டி­டங்­கள் எனத் தொல்­பொ­ருள் திணைக்­க­ளம் உரிமை கொண்­டா­டு­கின்­றது. சிவ­லிங்க வழி­பாடு என்­பது தமி­ழர்­க­ளால் வர­லாற்­றுக்கு முன்­னைய காலம்­தொட்டு பேணப்­பட்டு வந்த ஒரு மர­பு­சார் வணக்க முறை­யா­கும். அதே­போன்று தமிழ் மக்­கள் விவ­சாய முயற்சி முதற்­கொண்டு வேறு எந்த மங்­கல நிகழ்­வு­களை மேற்­கொள்­ளும்­போ­தும் பிள்­ளை­யாரை முன்­வைத்தே கரம்­பி­டிப்­பர். அதா­வது சிவ­லிங்க வழி­பாடு, பிள்­ளை­ யார் வழி­பாடு என்­பன எமது இனத்­தின் பாரம்­ப­ரிய தொன்மை மிக்க கலா­சா­ரத்­து­டன் இரண்­ட­றக் கலந்­த­வை­யா­கும்.

அப்­ப­டி­யான நிலை­யில் எமது வழி­பாட்­டுத் தலங்­களை ஆக்­கி­ர­மிப்­பது தமிழ் மக்­க­ளின் மனதை எவ்­வ­ளவு தூரம் புண்­ப­டுத்­தும் என்­ப­தை­யும் இத­னால் ஏற்­ப­டும் கசப்­பு­ணர்வு இன நல்­லி­ணக்­கத்தை என்­றுமே எட்­ட­மு­டி­யாத நிலை­மைய உரு­வாக்­கும் என்­ப­தை­யும் நீங்­கள் புரிந்­து­கொள்­ள­வேண்­டும்.

அத்­து­மீ­றும் பௌத்த ஆக்­கி­ர­மிப்­புக்­கள்
அது மட்­டு­மல்ல இந்­துக்­க­ளின் புனித விர­த­மான சிவ­ராத்­திரி இடம்­பெ­ற­வி­ருந்த சந்­தர்ப்­பத்­தில் திரு­கோ­ண­மலை திருக்­கோ­ணேஸ்­வ­ரர் ஆலய வளா­கத்­தில் அமைந்­துள்ள சிவ­லிங்­கம் உடைக்­கப்­பட்­டது. ஒரு பாது­காப்­புப் பிர­தே­சத்­தில் நடந்த இந்த வன்­முறை தொடர்­பாக இது­வரை குற்­ற­வா­ளி­கள் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வு­மில்லை, கைது செய்­யப்­ப­ட­வு­மில்லை. மன்­னார் திருக்­கே­தீஸ்­வர ஆல­யத்­துக்கு அரு­கில் ஒரு தனி­யார் காணி­யில் புத்த விகாரை அமைக்­கப்­பட்­டுள்­ளது. அங்கு பௌத்த மதத்­தைச் சேர்ந்த ஒரு­வர்­கூட வாழ­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. அதே­போன்று கடந்த காலத்­தில் முனீஸ்­வ­ரம் சிவா­ல­யத்­திற்கு ராஜ­கோ­பு­ரம் அமைக்­கப்­பெ­று­வ­தற்­காக நிலத்தை அக­ழந்­த­போது அங்கு சந்­தி­ர­வட்­டக்­கல் காணப்­பட்­ட­தால் கோபுர அமைப்பு; தடை­செய்­யப்­பட்­டதை நாம் மறந்­து­விட முடி­யாது.

விஜ­யன் இலங்­கைக்கு வந்த காலத்­தி­லேயே கேதீஸ்­வ­ரம், கோணேஸ்­வ­ரம், முனீஸ்­வ­ரம், நகு­லேஸ்­வ­ரம், தென்­னீஸ்­வ­ரம் ஆகிய வழி­பாட்­டுத்­த­லங்­கள் அமைந்­தி­ருந்­தன என்­பதை சிங்­கள வர­லா­று­களே கூறு­கின்­றன. அப்­ப­டி­யா­கத் தமிழ் மக்­க­ளின் தொன்மை வாய்ந்த கலா­சார வாழ்­வு­டன் பின்­னிப் பிணைந்த இந்த ஆல­யங்­க­ளின் மீது மேற்­கொள்­ளப்­ப­டும் அச்­சு­றுத்­தல்­க­ளும் ஆக்­கி­ர­மிப்­புக்­க­ளும் தடுத்து நிறுத்­தப்­பட அமைச்­சர் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும்.

புதிய அர­ச­மைப்பு யோச­னை­கள் முன்­வைக்­கப்­பட்­ட­போது பௌத்­தத்­துக்கு முத­லி­டம் கோரப்­பட்ட அதே­நே­ரத்­தில் ஏனைய மதங்­க­ளுக்­கும் சம்­ம­திப்பு வழங்­கப்­ப­டும் என்று சொல்­லப்­பட்­டது. பௌத்­தத்­துக்கு முத­லி­டம் என்­பது இப்­படி ஏனைய மதங்­களை ஆக்­கி­ர­மித்து அச்­சு­றுத்தி இல்­லா­தொ­ழிக்­கும் அர்த்­தத்­தி­லேயே சொல்­லப்­ப­டு­கின்­றதா என்­கிற அச்­சம் கார­ண­மா­கவே தமிழ் மக்­கள் அதனை எதிர்க்­கி­றார்­கள் என்­பதை இந்­தச் சபை­யின் உறுப்­பி­னர்­கள் புரிந்­து­ கொள்­ள­வேண்­டும். சிங்­கள மக்­க­ளுக்கு எவ்­வாறு தங்­கள் கலா­சார அடை­யா­ளங்­கள் மீது அபி­மா­னம் உண்டோ அவ்­வாறே தமிழ் மக்­க­ளுக்­கும் அபி­மா­னம் உண்டு. எனவே தொல்­பொ­ருள் திணைக்­க­ளம், வன உயி­ரி­யல் திணைக்­க­ளம் போன்­றவை மேற்­கொள்­ளும் அத்­து­மீ­றல்­கள் உட­ன­டி­யா­கத் தடுத்து நிறுத்­தப்­ப­ட­ வேண்­டும் என்­பதை நாம் வலி­யு­றுத்த விரும்­பு­கின்­றேன்.

அழி­வ­டை­யும் நிலை­யில்
கலை­கள் உள்­ளன
நாம் ஒரு காலத்­தில் கலை இலக்­கி­யத்­து­றை­யில் பல சாத­னை­க­ளைச் செய்­த­வர்­கள். எமது பாரம்­ப­ரிய நாட்­டுக்­கூத்­துக்­கள், இசை நாட­கங்­கள் என்­பன தனித்­து­வம் வாய்ந்­தவை. வெறும் பொழு­து­போக்­குக்கு மட்­டு­மல்­லாது மக்­க­ளுக்கு நல்­வ­ழி­காட்­டும்­வ­கை­யி­லும் அமைந்­தவை. இன்று அவை மெல்­ல­மெல்ல அழி­வ­டை­யும் நிலையை நோக்­கிப் போய்க்­கொண்­டி­ருக்­கின்­றன. இப்­போ­துள்ள ஒரு சில முதி­ய­வர்­கள் காலம் முடிந்­த­தும் அடுத்த பரம்­பரை அவற்றை முன்­னெ­டுத்­துச் செல்­லுமா என்­பது சந்­தே­க­மா­கவே உள்­ளது.

எனவே எமது கலா­சா­ரத் திணைக்­க­ளம் அவற்­றைக் கட்­டிக்­காக்­க­வும் பேணி வளர்க்­க­வும் காத்­தி­ர­மான நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வேண்­டும். இளைய தலை­மு­றை­யி­ன­ரி­டம் அவற்­றைக் கொண்­டு­செல்ல பாட­சாலை மட்­டங்­க­ளி­லும் கிரா­மிய மட்­டத்­தி­லும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்­டும். அதே­வேளை நவீன நாட­கங்­கள், குறும்­பட உரு­வாக்­கங்­கள் என்­பன தனி­ந­பர்­க­ளின் முயற்­சி­க­ளா­கவே இடம்­பெற்று வரு­கின்­றன. கலை­யார்­வம் கார­ண­மா­கக் கலை­ஞர்­கள் தமது சொந்­தப் பணத்­தைச் செலவு செய்தே இவற்­றில் ஈடு­பட வேண்­டி­யுள்­ளது. அதன் கார­ண­மாக ஆர்­வத்­தா­லும் ஒன்­றி­ரண்டு முயற்­சி­க­ளு­டன் கைவி­டப்­ப­டும் நிலையே ஏற்­ப­டு­கின்­றது. அதே­போன்று இலக்­கி­ய­வா­தி­க­ளின் முயற்­சி­க­ளும் மேலும் பரி­தா­ப­மா­கவே அமைந்­துள்­ளன. ஒரு படைப்­பா­ளனே எழுத்­தா­ள­னா­க­வும், முத­லிட்டு வெளி­யி­டு­ப­வ­னா­க­வும், அவற்­றைச் சந்­தைப்­ப­டுத்­தி­ய­வ­னா­க­வும் செயற்­ப­ட­வேண்­டி­யுள்­ளது. அப்­படி ஒரு படைப்­பா­ளன் தன் உழைப்­பைச் செலுத்­தி­னா­லும் போட்ட முதலை எடுக்க முடி­வ­தில்லை. அதே­வே­ளை­யில் மக்­க­ளி­டம் படைப்­புக்­கள் சென்­ற­டை­வது மிக­வும் குறை­வா­ன­தா­கவே உள்­ளது.

படைப்­புக்­க­ளைக் காப்­ப­தில்
மாகாண சபை­க­ளுக்கு
கூடு­த­லான பொறுப்­புண்டு
ஒவ்­வொரு மாகாண சபை­யும் தமது மாகாண எல்­லைக்­குள் உள்ள பாட­சாலை நூல­கங்­கள், உள்­ளு­ராட்சி சபை நூல­கங்­கள், சமூக சேவை­கள் நிலைய நூல­கங்­கள் என்­ப­ன­வற்­றிற்கு இலக்­கி­யப் படைப்­புக்­க­ளை­யும் கொள்­மு­தல் செய்து வழங்­கி­னால் பல அற்­பு­த­மான படைப்­புக்­கள் வெளி­வ­ரும் சாத்­தி­ய­முண்டு.

தற்­ச­ம­யம் மாகாண கலா­சார அவை ஐயா­யி­ரம் ரூபா பெறு­ம­தி­யான நூல்­க­ளைக் கொள்­மு­தல் செய்­கி­றது. 2 லட்­சம் 3 லட்­சம் ரூபா செல­விட்டு வெளி­யி­டப்­ப­டும் ஒரு நூலிற்கு 5 ஆயி­ரம் ரூபா வழங்­கு­வ­தன் மூலம் என்ன பயன்­கிட்­ட­மு­டி­யும். எனவே கலா­சா­ரத் திணைக்­க­ளம் நூல­கங்­க­ளின் தேவை­க­ளுக்கு ஏற்ற வகை­யில் நூல்­க­ளைக் கொள்­மு­தல் செய்­யும் வகை­யில் நிதி ஒதுக்­கப்­பட வேண்­டு­மென அமைச்­ச­ரி­டம் ஒரு கோரிக்­கையை முன்­வைக்க விரும்­பு­கின்­றேன்.

கலா­சார அமைச்­சின் ஒதுக்­கீட்­டால்
பய­னா­ளி­கள் அடை­யும் பயன் சிறிது
ஒவ்­வொரு ஆண்­டும் வரவு செல­வுத் திட்­டத்­தின் ஊடா­கக் கலா­சார அமைச்­சுக்கு ஒதுக்­கப்­ப­டும் நிதி­யின் பெரும்­ப­குதி எவ்­வாறு செல­வி­டப்­ப­டு­கின்­றது என்­பதை நீங்­கள் என்­றைக்­கா­வது மீளாய்வு செய்து பார்த்­த­துண்டா? கணக்­காய்­வா­ளர் நாய­கத்­தின் அறிக்­கையை எடுத்­துப் பார்த்­தீர்­க­ளா­னால் அது புரி­யும். அமைச்­சின் நிர்­வா­கச் செல­வு­க­ளுக்­கும் அமைச்சு நடத்­தும் பெரும் நிகழ்­வு­க­ளின் நிர்­வா­கச் செல­வு­க­ளுக்­குமே செல­வி­டப்­ப­டு­கின்­றது. அந்த நிதி­யால் பய­னா­ளி­க­ளுக்கு நேர­டி­யா­கக் கடைக்­கும் நன்மை என்­பது மிகச் சொற்­பமே!

இந்த நிலை மாற்­றப்­ப­ட­வேண்­டும். கலை­ஞர்­கள், எழுத்­தா­ளர்­கள் பய­ன­டை­யத்­தக்க வகை­யில் திட்­டங்­கள் வகுக்­கப்­ப­ட­வேண்­டும். மிகப்­பெ­ரிய நிகழ்­வு­க­ளுக்­கான செல­வு­கள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்டு கலை­ஞர்­க­ளுக்­குப் பய­ன­ளிக்­கும் வகை­யில் அது செல­வி­டப்­ப­ட­வேண்­டும்.

முக்­கி­ய­மாக வறு­மை­யில் வாடக்­கூ­டிய கலை­ஞர்­கள் நாட்­டின் சொத்­துக்­க­ளா­கக் கரு­தப்­பட்டு அரசு அவர்­க­ளுக்கு ஓய்­வூ­தி­யம் வழங்­க­வேண்­டும். கலை­யையே தமது வாழ்­வா­தா­ர­மா­க­வும் வாழ்க்­கை­யா­க­வும் கொண்­டி­ருக்­கக்­கூ­டிய கலை­ஞர்­க­ளுக்கு அர­சின் உத­வி­கள் பன்­ம­டங்கு அதி­க­ரிக்­கப்­ப­ட­வேண்­டும். இன, மதப் பாகு­பா­டு­க­ளின்றி அனைத்­துக் கலை­ஞர்­க­ளும் சம­மாக மதிக்­கப்­பட்டு அரச நிர்­வா­கத்­தால் அணு­கப்­ப­ட­வேண்­டும். கலைக்­காக அர்ப்­ப­ணிப்­பு­டன் சேவை­யாற்­றும் அமைப்­புக்­கள், நிறு­வ­னங்­க­ளுக்கு வரு­டாந்த நிதி உதவி வழங்­கும் திட்­டத்­தை­யும் அரசு உரு­வாக்­க­வேண்­டும்.

தமிழ் மக்­க­ளா­கிய நாம் தனித்­து­வ­மான கலா­சார பாரம்­ப­ரி­யங்­க­ளைக் கொண்­ட­வர்­கள் என்ற முறை­யில் நாம் எமது இன அடை­யா­ளத்­தைப் பாது­காப்­ப­தில் உறு­தி­யாக இருப்­போம் என்­ப­தை­யும் இங்கு கூறிக்­கொள்­கின்­றேன்.

You might also like