side Add

கல்­லா­று கிராமத்துக்கு – குடி தண்ணீர் விநியோகம்- சிறிதரன் எம்.பி. ஆரம்பித்து வைத்தார்!!

பல ஆண்­டு­கள் குடி­தண்­ணீ­ருக்­கா­கப் போரா­டிய விசு­வ­மடு கல்­லா­றுக் கிராம மக்­க­ளுக்குக் குடி­தண்­ணீர் விநி­யோ­கம் ஆரம்­பிக்­கப்­ப­ட­்டுள்­ளது. நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறி­த­ரன் நேற்று குடி­தண்­ணீர் விநி­யோ­கத்தை ஆரம்­பித்து வைத்­தார்.

கிளி­நொச்சி, விசு­வ­மடு கல்­லா­றுக் கிரா­மத்­தில் பல ஆண்­டு­க­ளாகக் குடி­தண்ணீருக்கான தட்­டுப்­பாடு நிலவி வந்­தது. அங்­குள்ள 250 குடும்­பங்­க­ளி­ னு­டைய குடி­ தண்­ணீர்த் தேவை­யைப் பூர்த்தி செய்­யும் வகை­யில் மாகா­ண­ச­பை­யின் குறித்­தொ­குக்கப்­பட்ட 8 மில்­லி­யன் ரூபா நிதி ஒதுக்­கீட்­டில் கரைச்­சிப் பிர­தேச சபை­யின் கண்­கா­ணிப்­பின் கீழ் இந்த குடி­தண் ணீர் வழங்­க­லுக்­கான வேலைத் திட்­டங்­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டன.

அந்­தத் திட்­டங்­கள் நிறை­வ­டைந்த நிலை­யில் குடி­தண்­ணீர் விநி­யோ­கம் நேற்று ஆரம்­பிக்­கப்­பட்­டது.

நிகழ்­வில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறி­த­ரன், கரைச்­சிப் பிர­தேச சபை­யி­னு­டைய தவி­சா­ளர் அ.வேழ­மா­லி­கி­தன் மற்­றும் பச்­சி­லைப்­பள்­ளிப் பிர­தேச சபை­யின் தவி­சா­ளர் சு.சுரேன், பிர­தேச சபை­யி­னு­டைய உறுப்­பி­னர்­கள், மற்­றும் அரச அதி­கா­ரி­கள் எனப் பல­ரும் கலந்து கொண்­டி­ருந்­த­னர்.

You might also like
X