side Add

கல் அல்ல கட்சி!!

கிளி­நொச்சி மாவட்­டத்­தின் முத்து என வர்­ணிக்­கப்­ப­டு­வது இர­ணை­ம­டுக் குளம். அந்த மாவட்­டத்­தின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்­கும் தேசிய வரு­மா­னத்­துக்­கும் பெரி­தும் உத­வு­வ­தோடு, அந்த மாவட்­டத்­தின் பசு­மைக்­கும் கார­ண­கர்த்­தா­வாக இருந்து வரு­கி­றது இந்த இர­ணை­ம­டுக் குளம். 1906ஆம் ஆண்டு முதன் முத­லாக இந்­தக் குளத்­தின் கட்­டு­மா­னப் பணி­கள் ஆரம்­பிக்­கப்­பட்டு, 1922ஆம் ஆண்டு நீர்ப்­பா­ச­னத்­து­க் காகத் திறந்து வைக்­கப்­பட்­டது. அன்­றைய காலத்­தில் மேற்­கொள்­ளப்­பட்ட இந்­தக் குளத்தை அமைக்­கின்ற பணி­யா­னது முழு­மை­யாக மனித வலு­வா­லேயே மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கி­றது.

1922ஆம் ஆண்­டில் கட்­டு­மா­னப் பணி­கள் நிறை­வ­டைந்­த­போது, இந்­தக் குள­மா­னது 22அடி­யாக அதன் கொள்­ள­ளவு மட்­டம் இருந்­துள்­ளது. அதன் பின்­னர் 1951ஆம் ஆண்டு குளத்­தில் பல அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு அதன் கொள்­ளவு மட்­டம் 30 அடி­யாக உயர்த்­தப்­பட்­டுள்­ளது. மீண்­டும் 1954ஆம் ஆண்டு முதல் 1956ஆம் ஆண்­டு­வரை சீர­மைப்­புப் பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்டு 32 அடி­யாக கொள்­ளவு மட்­டம் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இந்­தச் சீர­மைப்­புப் பணி­க­ளின் நிறை­வில் அப்­போ­தைய தலைமை அமைச்­சர் டி.எஸ்.சேனா­நா­யக்கா இர­ணை­ம­டுக்­கு­ளத்­துக்கு வருகை தந்து நினை­வுக் கல் ஒன்­றை­யும் திறந்து வைத்­தார்.

புலி­க­ளின் ஆளு­கைக்­குள் இருந்­த­போது
சீர­மைப்­புக் கோரப்­பட்ட குளம் இது
அன்­றைக்கு டட்லி சேனா­நா­யக்­கா­வால் திறந்து வைக்­கப்­பட்ட நினை­வுக் கல்­லா­னது இத்­தனை ஆண்டு காலம் இடம்­பெற்ற போரின்­போ­து­கூட இந்த இடத்­தில் நிலை­யா­கவே இருந்து வந்­துள்­ளது. புலி­க­ளா­லும் அதன் வர­லாறு கருதி அது பேணப்­பட்­டது. 2000ஆம் ஆண்­ட­ள­வில் விடு­த­லைப் புலி­க­ளின் ஆளு­கைக்­குள் இருந்த இர­ணை­ம­டுக் குள­மா­னது புலி­க­ளின் முயற்­சி­யால் நீர்­வ­ழங்­கல் வடி­கா­ல­மைப்­புச் சபை­யின் ஊடாக ஆசிய அபி­வி­ருத்தி வங்­கி­யால் ஒதுக்­கப்­பட்ட நிதி­மூ­லத்­தி­லி­ருந்து சீர­மைப்­புச் செய்­யப்­பட்­டது. தற்­போது அர­ச­த­லை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னா­வால் திறந்து வைக்­கப்­பட்­டுள்­ளது. ஆசிய அபி­வி­ருத்தி வங்­கி­யின் 2 ஆயி­ரத்து 130 மில்­லி­யன் ரூபா செல­வில் 2016ஆம் ஆண்டு ஆரம்­ப­மான இதன் அபி­வி­ருத்­திப் பணி­கள் 2018ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நிறை­வுற்­றன. இவ்­வாறு இடம்­பெற்ற அபி­வி­ருத்­திப் பணி­யின் மூலமே 34அடி கொள்ளளவுடையதாகக் காணப்பட்ட இர­ணை­ம­டுக் குள­மா­னது 36 அடி­யா­கத் தன்­னு­டைய கொள்­ள­ளவு மட்­டத்தை உயர்த்­தி­யுள்­ளது.

இர­ணை­ம­டுச் சீர­மைப்பு
ஒப்­பந்­த­மும் தாம­தங்­க­ளும்
2000ஆம் ஆண்டு முதன் முதல் கோரிக்கை விடப்­பட்டு சமா­தான காலத்­தில் இர­ணை­ம­டுக்­குள அபி­வி­ருத்­தி­யா­னது யாழ்ப்­பா­ணம், கிளி­நொச்சி குடி­நீர்த்­திட்­டம், யாழ்ப்­பாண மாந­கர சபைப் பிர­தேச பாதாள சாக்­க­டைத் திட்­டம் என ஒருங்­கி­ணைந்த 3 திட்­டங்­க­ளா­கச் செயல்­ப­டுத்­து­வ­தற்­கான ஆரம்ப மதிப்­பீ­டு­கள், திட்ட முன்­மொழி­வு­கள், மாதி­ரிப் படத் தயா­ரிப்­புக்­கள் என இடம்­பெற்­றி­ருந்­தன. போர் ஆரம்­பித்த கார­ணத்­தால் இந்­தத் திட்­டம் தாம­தப்­பட்­டது. தற்­போது அபி­வி­ருத்தி செய்­யப்­பட்ட இர­ணை­ம­டுக் குளத்­தின் சீர­மைப்­புக்­காக, 2007- 07-13 அன்று தேசிய நீர்­வ­ழங்­கல் வடி­கா­ல­மைப்­புச் சபைக்­கும் ஆசிய அபி­வி­ருத்தி வங்­கிக்­கும் இடை­யில் ஒப்­பந்­தம் கைச்­சாத்­தான போதும் போரால் அது தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­ப­ட­ வில்லை. பின்­னர் போர் முடி­வுற்ற நிலை­யில் இந்­தத் திட்­டத்தை ஆரம்­பிக்க முற்­பட்­ட ­நி­லை­யில் யாழ்ப்­பா­ணம், கிளி­நொச்சி குடி­நீர்த் திட்­டம் தொடர்­பில் எதிர்ப்பு எழுந்­தது. இருந்­தும் இர­ணை­ம­டு­வின் அபி­வி­ருத்தி மட்­டும் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. இவ்­வாறு முன்­னெ­டுக் கப்­பட்ட சீர­மைப்­பின் முடி­வி­லேயே இர­ணை­ம­டுக் குளத்­தைத் திறந்து வைப்­ப­தற்­காக அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேனா கடந்த 2018-12-07 அன்று கிளி­நொச்­சிக்கு வருகை தந்­தார். அவ்­வாறு வருகை தந்த அவர் வர­லாற்­றுப் பதி­வொன்றை அழித்­து­விட்­டுச் சென்­றுள்­ளார். இனத்­தையே அழித்­த­வர்­க­ளிற்கு வர­லாற்றை அழிப்­பது ஒன்­றும் புதிய விட­யம் அல்ல என்­பது இதன் பின்­ன­ரான விட­ய­ம­றிந்த தமிழ் மக்­க­ளின் முணு முணுப்­பாக இருக்­கி­றது.

நன்­மை­கள் பல பயக்­கின்ற இர­ணை­மடு
வடக்கு மாகா­ணத்­தி­லேயே மிகப்­பெ­ரும் சொத்­தா­கக் காணப்­ப­டும் இந்த இர­ணை­ம­டுக் குளத்­தின் மூல­மான வாழ்­வா­தா­ரத்தை நம்­பி­ய­வர்­க­ளாக ஆரம்­பத்­தில் யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து பலர் கிளி­நொச்­சி­யில் சென்று குடி­யே­றிய வர­லா­று­க­ளும் உண்டு. இதே­நே­ரம் கிளி­நொச்சி மாவட்­டத்­தில் சுமார் 65ஆயி­ரம் ஏக்­கர் வயல் நிலங்­கள் உள்­ள­போ­தி­லும் தற்­போது 21 ஆயி­ரத்து 800 ஏக்­கர் நிலப்­ப­கு­தி­க­ளுக்கே நீர் பாய்ச்­சும் வாய்க்­கால் வழிப்­பா­தை­க­ளும், சட்ட பூர்­வ­மான பதி­வு­க­ளும் உண்டு. பல ஆயி­ரம் ஏக்­கர் நிலங்­க­ளுக்கு நீர் பாய்ச்­சும் வசதி இன்­னும் ஏற்­ப­டுத்­திக் கொடுக்­கப்­ப­ட­வில்லை.

இதே­நே­ரம் இர­ணை­ம­டுக் குளத்­தின் கீழ் 1965 ஆம் ஆண்டு முதன் முத­லா­கத் திரு­வை­யா­றுக் கிரா­மத் துக்கு ஏற்று நீர்ப்­பா­ச­னம் வழங்­கப்­பட்­டது. இதன் பின்­னர் 1977ஆம் ஆண்டு அது விரி­வு­ப­டுத்­தப்­பட்டு ஆயி­ரத்து 200 ஏக்­கர் மேட்டு நிலப் பயிர் செய்­கைக்­கும் நீர் வழங்­கப்­பட்­டது. இவ்­வாறு வழங்­கப்­பட்டு வந்த ஏற்று நீர்ப்­பா­ச­னம் 2ஆம் கட்ட ஈழப்­போ­ரு­டன் முழு­மை­யாக அழி­வ­டைந்­தது. அவ்­வாறு அழி­வ­டைந்த ஏற்று நீர்ப்­பா­ச­ன­மும் தற்­போது சீர­மைக்­கப்­பட்டு சுமார் 600 ஏக்­கர் நிலத்­துக்கு நீர் பாய்ச்­சும் வசதி ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. இரணை மடுக் குளத்­தில் நன்­னீர் மீன் பிடிச் சங்­கங்­கங்­கள் இரண்­டின் ஊடாக சுமார் 180 மீன­வர்­கள் மீன்­பி­டி­யில் ஈடு­ப­டு­கின்­ற­னர். இவை அனைத்­துக்­கும் அப்­பால் தற்­போது இரண்டு பெரிய நீர்த்­தாங்­கி­கள் கட்­டப்­பட்டு குடி­நீர் வச­தி­க­ளும் ஏற்­ப­டுத்­தப்­பட்­டு­வ­ரு­கின்­றது. இவ்­வாறு மாவட்­டத்­தின் பல தேவை­களை நிறை­வேற்­று­வ­தால், கிளி­நொச்­சி­யின் அமைத்­துள்ள முத்து என்று இர­ணை­ம­டுக் குளத்­தைக் குறிப்­பி­டு­வ­தில் தவ­றே­து­வும் இருக்க முடி­யாது.

டட்லி நிறு­விய கல்லை
அகற்றி மைத்­திரி புதிய கல்
1954ஆம் ஆண்டு முதல் 1956ஆம் ஆண்டு வரை இடம்­பெற்ற அபி­வி­ருத்­திப் பணி­கள் நிறை­வ­டைந்­த­போது அன்று குளத்­தைத் திறந்து வைத்த ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யைச் சேர்ந்த டட்லி சேனா­நா­யக்க அன்­றைய நாளில் இங்கு நினை­வுக்­கல்­லை­யும் திறந்து வைத்­தார். அன்று அவ­ரால், திறந்து வைக்­கப்­பட்ட கல் மைத்­தி­ரி­பால சிறி­சே­னா­வின் தற்­போ­தைய திறந்து வைக்­கும் நிகழ்­வுக்­காக இர­வோடு இர­வாக இடித்து அழிக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போது அந்த இடத்­தில் மைத்­திரி புதிய கல்லை நாட்­டித் தனது பெய­ரைப் பொறித்­துத் திறந்து வைத்­து­விட்­டுச் சென்­றுள்­ளார். இந்த விட­யம் தற்­போ­தைய அர­சி­யல் நெருக்­க­டிக்கு மத்­தி­யில் அதி­கம் சிலா­கிக்­கப்­ப­டு­கின்­றது. அதா­வது ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யு­டன் கூட்­டுச் சேர்ந்து அரச தலை­வ­ராகி, ஆட்­சி­ய­மைத்த மைத்­தி­ரி­பால சிறி­சேன தற்­போது அதன் தலை­வர் ரணி­லு­டன் முரண்­போக்­கு­டன் திகழ்­வ­தால் மைத்­திரி தற்­போது அகற்­றிய கல் ஐக்­கி­ய­ தே­சி­யக் கட்­சிக்கு ஓப்­பா­னது என்­றும், அதை அகற்­றி­விட்டு மைத்­திரி புதிய கல்லை நிறு­விய செயல் ஐக்­கிய தேசி­யக் கட்­சியை மைத்­திரி அப்­பால் தள்ளி வைத்­தி­ருப்­ப­தை­யுமே வெளிக்­காட்­டு­வ­தாக அர­சி­ய­ல­வ­தா­னி­கள் கரு­த­மு­னை­கின்­ற­னர்.

You might also like